உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவி பாடலாம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
��ப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிப்பாவின் இனம் 197

நிரையசையில் தொடங்குவதனால் காய்முன் நிரை வந்து கலித்தளை ஆயிற்று. ஆகவே ஒவ்வோரடியளவில் மட்டும் வெண்டளை அமைவது கட்டளைக் கலித்துறையின் இலக்கணம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

பழங்காலத்தில் கட்டளைக் கலித்துறையை விருத்தம் என்று சொல்லி வந்தார்கள் என்று தெரிகிறது. தேவாரத்தில் அப்பர் சுவாமிகள் பாடிய திருவிருத்தங்களும், திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள திருவிருத்தமும் கட்டளைக் கலித் துறைகளே.

“குனித்த புருவமுங் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணிறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.” இது அப்பர் சுவாமிகள் பாடிய திருவிருத்தம். இது - கட்டளைக் கலித்துறையே.

கட்டளைக் கலிப்பா

இங்கே கட்டளைக் கலிப்பா என்ற ஒருவகைப் பாட்டின் இலக்கணத்தையும் தெரிந்து கொள்வது நலம். அதுவும் எழுத்துக் கணக்கு உடையதாகும்.

கட்ட ளைக்கலிப் பாவில் எழுத்தினில்

காட்டு மோர்கணக் குண்டுமெய் போக்கியே ஒட்டு கின்ற அரையடிக் கேமுதல்

உற்ற தாம்நிரை யென்றி.டின் பன்னிரண் டெட்டும்; அந்த அரையடி நேர்முதல்

ஏய்ந்த தென்னிற் பதினொ ரெழுத்துறும் திட்ட மாக அடிக்கெட்டுச் சீருறும்

சேரு மிந்தக் கணக்கு வழாதரோ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/198&oldid=655797" இலிருந்து மீள்விக்கப்பட்டது