2. எதுகை
தமிழ்ச் செய்யுளுக்கே உரிய அழகு எதுகை என்பது. அதை ரைம் (Riyme) என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். மற்றப் பாஷைகளிலும் எதுகை உண்டு. ஆனால் தமிழில் அடியின் ஆரம்பத்தில் எதுகை இருக்கும். இதுதான் தமிழுக்கே சிறப்பாக அமைந்தது. எதுகை, மோனை என்ற இரண்டும் பாட்டுக்கு அழகு தருபவை. அவை இரண்டும் ஒசை இனிமையை உண்டாக்குபவை. எகனை, மொகனை என்று நாடோடியாக இவற்றைச் சேர்த்துச் சொல்வார்கள். பேசுகிறபோதுகூட இப்போது எதுகையையும் மோனை யையும் இணைக்கிறார்கள். அடுக்கு மொழிக்கு இப்போது மேடைப் பேச்சிலும் சினிமாப் பேச்சிலும் ஒரு மோகம் உண்டாகியிருக்கிறது. அடுக்கு என்பது மோனை.
ஒவ்வோர்.அடியின் ஆரம்பத்திலும் எதுகை இருப்பது தமிழ்ச் செய்யுளின் இயல்பு. அடியை வேறு பிரித்து அறிவதற்கு இந்த எதுகை துணையாக இருக்கிறது. அகவல், கலிவெண்பா, பெரும்பாலான கலிப்பாக்கள், சில வகை வெண்பாக்கள் இவற்றையன்றி மற்றப் பாடல்களில் பெரும்பாலானவை நான்கு அடிகளால் ஆன பாடல்களே. மிகவும் பெரிய பாடல்களாகத் தோன்றும் திருப்புகழ்ப் பாடல்கூட நான்கே அடிகளால் ஆனவை. ஒரே அடி, மடக்கி மடக்கி நீளமாக வருவதால் பல வரிகளாக இருக்கிறது. வரி வேறு; அடி வேறு. அடிகளை எதுகையைக் கொண்டு அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.
இரண்டாவது எழுத்து ஒரே மாதிரி அமைவதை எதுகை என்று சொல்வார்கள். இரண்டாம் எழுத்து ஒன்றுவது எதுகை என்று இலக்கண முறையில் சொல்வது