உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவி பாடலாம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
��ப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 கவி பாடலாம்

“வேதங்கள் அறைகின்ற

உலகெங்கும் விரிந்தனநின் பாதங்கள் இவையென்னிற்

படிவங்கள் எப்படியோ ஒதங்கொள் கடலன்றி

ஒன்றினோ டொன்றொவ்வாப் பூதங்க டொறுநிறைந்தால்

அவையுன்னைப் பொறுக்குமோ.” இந்தப்பாட்டில் காய்முன்நிரை வந்த கலித்தளையும், காய்முன் நேர் வந்த வெண்சீர் வெண்டளையும், விளமுன் நேர்வந்த இயற்சீர் வெண்டளையும் வந்துள்ளன,

(3) பல தளையும் விரவி வருவது பிரிந்திசைத் துள்ளலோசை. -

‘குடநிலைத் தண்புறவிற்

கோவல ரெடுத்தார்ப்பத்

தடநிலைய பெருந்தொழுவில்

தகையேறு மரம்பாய்ந்து

வீங்குமணிக் கயிறொரீஇத்

தாங்குவனத் தொன்றப்போய்க்

கலையினொடு முயலிரியக்

கடிமுல்லை முறுவலிப்ப.”

இதில் குடநிலைத்-தண்புறவிற்’ என்பதில் விள முன் நேர் வந்தது. இது இயற்சீர் வெண்டளை. தண்புறவிற்கோவலர்-இதில் காய் முன் நேர் வந்தது. இது வெண்சீர் வெண்டளை. கோவல-ரெடுத்தார்ப்ப-விள முன் நிரை வந்தது. இது நிரையொன் றாசிரியத் தளை. தடநிலைய பெருந்தொழுவில்.இதில் காய் முன் நிரை வரக் கலித்தளை அமைந்தது. இப்படிப் பல தளைகளும் கலந்து வந்தது

5fry5. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/151&oldid=655746" இலிருந்து மீள்விக்கப்பட்டது