3.48 - கவி பாடலாம்
(3) இருவகை வெண்டளையும் கலந்து வருவது ஒழுகிசைச் செப்பலோசை,
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.”
இந்தப் பாட்டில் அகரமுதல, முதல-எழுத் தெல்லாம், ஆதி-பகவன், பகவன்முதற்றே, முதற்றேஉலகு என்பவற்றில் மாமுன் நிரை வந்தது. இது இயற்சீர் வெண்டளை. எழுத்தெல்லாம்-ஆதி என்பதில் காய்முன் நேர் வந்து வெண்சீர் வெண்டளை ஆயிற்று. இப்படி இருவகை வெண்டளையும் விரவி வந்ததனால் இது ஒழுகிசைச் செப்பலோசை ஆயிற்று.
ஆசிரியத்துக்குரிய அகவலோசையும் இப்படியே மூன்று வகைப்படும்; அவை ஏந்திசை அகவலோசை, தூங்கிசை அகவலோசை, ஒழுகிசை அகவலோசை என்பன.
(1) நேரொன் றாசிரியத்தளை மட்டும் வந்தால் ஏந்திசை அகவலோசை வரும்.
வேலன் செவ்வேள் மெத்தென் பாதம் சீலர் போற்றி செய்வர் என்ப தோத வேண்டுங் கொல்லோ யாதும் யாண்டும் ஈவான் அன்றோ? இதில் எல்லாச் சீர்களும் தேமாவாகவே வந்தன; மாமுன் நேர் வந்த நேரொன்றாசிரியத் தளையே வந்தது.
(2) நிரையொன்றாசிரியத்தளை மட்டும் வந்தால் அது தூங்கிசை அகவலோசை. .
‘அணிநிழலசோகமர்ந் தருனெறி நடாத்திய
மணிதிக ழவிரொளி வரதனைப் பணிபவர் பவநளிை பரிசறுப் பவரே."