��ப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
128 கவி பாடலாம்
(4)கூழை: முதல் மூன்று சீரிலும் அமைவது.
வேதம் விரித்த வியன்மலர்த் திருவாய். இந்த அகவலடியில் கூழை மோனை வந்தது.
வேலன் பாலன் போலும் நெஞ்சன். இந்த ஆசிரிய அடியில் கூழை எதுகை வந்தது. (5) மேற்கதுவாய்: இரண்டாம் சீரிலன்றி மற்ற மூன்று சீர்களில் அமைவது.
ஆறு முகத்தா னாகும் அமுதம். இதில் மேற்கதுவாய் மோனை வந்தது.
கற்றவர் போற்றும் நற்றவச் சுற்றம். இதில் மேற்கதுவாய் எதுகை வந்தது. இரண்டாம்
சீரில் முதல் எழுத்து நெடிலாக வந்தமையால் எதுகை அமையவில்லை. -
(6) கீழ்க்கதுவாய்: மூன்றாவது சீரிலின்றி மற்ற மூன்று சீர்களில் வருவது.
அவிர்மதி அனைய திருநுதல் அரிவை. இதில் கீழ்க்கதுவாய் மோனை வந்தது.
அன்ன மென்ன அழகுற மன்னும். இதில் கீழ்க்கதுவாய் எதுகை வந்தது. (7) முற்று: நான்கு சீரிலும் வருவது.
“தூய துணைவன் துறந்தமை தூற்றும்.” இதில் முற்று மோனை வந்தது.