உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52


'பசுவே, பசுவே! உன் வாலை எனக்குத் தருவாயா?' என்று கேட்டது.

பசு காதில் விழாதது போல் புல்லைக் கடித்துக் கொண்டிருந்தது.

'பசுவே, பசுவே என்னைக் கடவுள் அனுப்பினார். நீ ஒப்புக் கொண்டால், உன் வாலை எனக்கு ஒட்டித் தருவதாகக் கூறியிருக்கிறார். தயவு செய்து உன் வாலை எனக்குத் தா. நானும் என் பரம்பரையும் உனக்கு என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.'

பசு பதில் கூறவில்லை. தன் வாலைத் தூக்கி முதுகில் உட்கார்ந்திருந்த ஈயின் மேல் ஒரு போடுப் போட்டது.

அவ்வளவுதான். அடிபட்ட ஈ பொத்தென்று சுருண்டு தரையில் விழுந்தது. வலி தாங்க முடியாமல் துடித்தது.

பிரம்மா கீழே குனிந்து பார்த்தார்.

'உனக்கு வேண்டியது இப்போது கிடைத்து விட்டது. இனிமேல் நீ வாலைப்பற்றிப் பேசமாட்டாய்?' என்று தன் மனத்துக்குள் கூறிக் கொண்டார்.

அவர் கை தங்க நிறமான களி மண்ணைப் பிசைந்து கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரு_ஈயின்_ஆசை.pdf/54&oldid=1165236" இலிருந்து மீள்விக்கப்பட்டது