உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்தை வீடு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 89 பற்றிக் கொண்டார்கள். ஆனாலும் அந்த விடுதியின் நுழை வாயிலுக்குப் போன உடனேயே அவர்களுக்குப் பயம் தெளிந்தத���. கடலோர விடுதி. ஆகாயம் வளைந்தது போன்ற கட்டிடம். அதில் அப்பிய கலர் பல்பு நட்சத்திரங்கள். அண்ணாந்து பார்த்த கங்காவை முதுகைப் பிடித்து நகர்த்தியபடியே வரவேற்பு அறைக்குள் நுழைந்தான். அங்கே துரங்கி வழிந்தவன், தூக்கக் கலக்கத்தில், கண்களால் அதட்டினான். கீழே நான்கு ஐந்துபேர் குறுக்கும் நெடுக்குமாய்ப் படுத்திருந்தார்கள். வரவேற்பாளன், பிணக்காட்டில் நடப்பதுபோல் அவர்களுக் கிடையே குறுக்கும் நெடுக்குமாய் நடந்து வரவேற்பு வளைவுக்கு வெளியே வந்து சாவியை நீட்டினான். நேற்று மத்தியானமே பதிவு செய்துவிட்டுப்போன முத்துசாமியை புன்னகைத்துப் பார்த்தான். இவன், அப்போது கொடுத்த ஐம்பது ரூபாய் அன்பளிப்பை இன்று மத்தியானம் தான் ஆப்பாக்கி ஆப்பானவன் இப்போதுதான் எழுந்தான். ஒரு புல்லை எதிர்பார்த்து, அவனே அவர்களை முதலாவது மாடிக்கு நகர்த்தி மூன்றாவது அறைக்குள் கொண்டு போய் விட்டான். அந்த அறையைப் பார்த்து, கங்கா அதிசயித்தாள். அருமையான கிளுகிளுப்பு. அதுவே குரலிடுவதுபோன்ற மென்மையான சத்தம். அவர்களை வரவேற்பதுபோல் டிரான்ஸ்பார்மர் அதிர்வேட்டாய் முழங்கி ஒரு சிவப்பு விளக்கைக் காட்டுகிறது. அவள் தரை தெரியாத கம்பளத்தில் நடந்து, மெத்தையைத் தொட்டாள். எம்மாடியோ என்று குரலிட்டபடியே அவனை நன்றியுடன் பார்த்தாள். கட்டில் சட்டத்தில் பதித்த சுவிட்சுகளைத் தட்டி விட்டாள் அந்த விளையாட்டில் மேல்தளம் வானவில்லானது. அறை முழுக்க மஞ்சள் வெயில் வெளிச்சம். கங்காவுக்கும், பயம் போய்விட்டது. வெல்வெட் சோபா இருக்கைக்குத் தாவினாள். பேண்டை கழட்டிப்போட்டு விட்டு லுங்கியைக் கட்டிக்கொண்டு இருந்தவனை பல்லிபோல் அப்பிக் கொண்டு, அவனோடு படுக்கையில் விழுந்தாள். ஒரே நிமிடத்தில் அவன் அவளிடமிருந்து விடுபட்டான். அவளோ என் ராசா ராசா. என்று அரற்றினாள். அவனுக்கோ, அவள் முத்தம் எச்சிலாகப் பட்டது. இதற்கா இவ்வளவு அலைச்சல் என்று தன்னையே நொந்து கொண்டான். அவனுக்கு நல்ல வேளையாக கதவு தட்டப்பட்டது. தவில் அடிப்பதுபோல் சத்தமிட்டது. அதுதான் சாக்கென்று விடுபட்டான். கதவை திறந்தான் அவள் ஆடைகளைச் சரிப்படுத்த முடியாமல், குளியலறைக்குள் போகவேண்டும் என்று நினைப்பில்லாமல், கட்டிலுக்குக் கீழே பதுங்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/90&oldid=762387" இலிருந்து மீள்விக்கப்பட்டது