58 ஒத்தை வீடு என்னடான்னா ஒரு மணி நேரம் புரட்டினதாச் சொல்றாள். இங்கே என்னடான்னா அதைவிட அதிக நேரம் ஆகும் போல இருக்கு. இன்னும் ஒயல. பாவம். பாவப்பட்டதுகள். சந்தோஷமாய் இருந்துட்டு போகட்டும் ஆமாம். பாவப்பட்டது யார்.? என்றாலும், சங்கரிக்கு மகிழ்ச்சிதான் வீட்டுக்காரன் பேசிவிட்டான் என்பதால் மட்டுமல்ல. இன்றைக்கு அவன் பிடி அசத்தலாயிருந்தது முகத்தில் கூட ஒரு மலர்ச்சி. அவரோட அழகுக்கு வேற சொர்க்கம் இருக்க முடியாது. சங்கரி, அந்த மொட்டை மாடியையே சுற்றிச் சுற்றி வந்தாள். படிகளில் இறங்கி பக்குவமாகப் பார்த்தாள். சத்தம் ஒய்ந்தது. அண்ணி அழுது கொண்டிருந்தாள். மாமியார் மூலையில் சாய்ந்து கிடந்தாள் அவரோ அக்காவின் கைகளைப் பிடித்து ஏதோ பேசுகிறார். அம்மாக்காரி ஓடி வந்து அந்தக் கையைத் தட்டி விடுகிறாள். விவஸ்தை கெட்ட ஜென்மங்கள். பாவம் அவரு. கீழே போய் ரெண்டு கேள்வி கேக்கலாமா. வேண்டாம் ஒருவேளை அவரு காட்டுமிராண்டினு கத்திடப்படாது. சங்கரி, சலிப்போடு அறைக்கு வந்து, மல்லாக்கப் படுத்தாள். குப்புறப் புரண்டாள். ஒரு பக்கமாய் குடை சாய்ந்தாள். திடீரென்று அவள் உடலோடு உடல் உரசியது. தோளில் ஒரு முகம் விழுந்தது ஆனந்தமாய் திரும்பினாள். அவன், அவளை அங்கும் இங்குமாய் உருட்டினான். அவள் இன்னைக்கு உங்களுக்கு என்னாச்சு. என்று திக்கித் திக்கிச் சொன்னபடி அவன் தலையைச் செல்லமாகக் குட்டினாள் குட்டிய தலையைக் கோதிவிட்டாள் அவன் கழுத்துக்குள் தன் முகத்தைப் பதியவிட்டாள். அவள் ஆடைகள் அறைகுறையாகின. அந்தச்சுரனை இல்லாமலேயே அவள் அரை மயக்கத்தில் கிடந்தாள். உடம்பு கனத்தது. ஒரு சுமை சிறிது நேரத்தில் கனம் தெரியாமல் போன சுகமான சுமை அவன் கழுத்தை வளைத்துக் கொண்டு ஐ லவ் யூ ஐ லவ் யூ, மனோ என்று உளறுவது போல் உணர்ச்சிகளை கொட்டினாள் ஒரே ஒரு நிமிடத்திற்கும் குறைவே. மனோகர், குழைந்து போனான். அப்படிப் போகப்போக, அவனுக்கு, அவள் வெறும் சதைப் பிண்டமாகத் தெரிந்தது அவளுக்கும், அவன் சுமையாகப்பட்டது. அவளே அவனை கீழே தள்ளிப் போட்டாள். பிடித்ததும் பிடிபட்டதும் பொய்யாய், பழங்கதையாய் போனது அவள் அந்த இருட்டில் அவனை எரிச்சலோடு பார்த்தாள். வீம்புக்குதன் மேல் சாயப் போனவனை ஒரு தள்ளு தள்ளிவிட்டு, படுக்கையில் உட் கார்ந்தாள் அவனாவது சும்மா இருந்திருக்கலாம் அந்தச் சமயம் பார்த்து, நெருப்புக் கோழியாய் ஒரு கேள்விக்குள் தன்னை மறைத்துக் கொண்டதாய் தன்னை நினைத்துக் கொண்டான்.
பக்கம்:ஒத்தை வீடு.pdf/59
Appearance