உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63


ரினின்று சிறிது வேறுபடுதலால் இகமலர்' எனப்படுவேன். தொடர்ப்பூ என்றொரு குறியும் எனக்குண்டு. நடுங்கிச் சிலிர்த் தலால் இப்பொருளைத் தரும் வெதிர்' என்னும் சொல்லை நிகண்டுகள் எனது இப்பருவத்திற்குக் காட்டின. இதற்கு இலக்கிய ஆட்சியைக் காணமுடியவில்லை. அலர்தலை உடையது அலரி. அலரி என்பதும் இப்பருவப் பெயர். இப்பருவப் பெயரை என்னினத்தில் ஒரு மலர் பெயர்பெற்று 'அலரி எனக்குறிக்கப்பட்டது. இவ்வாறு விரிவதையும் பரவுதலையும் கொண்டே அகத் துறையில் களவுக்காதல் வெளிப்பட்டுப்பரவுதலை அலர்’ என்றதை முன்னரும் குறித்தேன்.

பரவி விரிந்த காட்சியாலும் யாவர்க்கும் மணம் பரப்பும் ஒப்புரவாலும் தேனை வழங்கும் ஈகையாலும் அலர் ஒரு புகழ்ப் பருவம். அலராக நிறைவாழ்வு பெற்ற நான் 弱 'கழன்று உகு வீ'25 என்றபடி காம்பி 7. பருவம் - வி விருந்து கழன்று கீழே வீழ்வேன். 'குவி குழை கழன்ற o ஆலி ஒப்பின் துரம்புடைத் திறள் வி’ என்றபடி காம்பின் இணைப்பிலிருந்து கழன்றதால் அடியில் உள்துளையுடன் (தும் புடன்) காட்சி தருவேன். வி' என்னும் சொல்? நீங்குதல், வீழ்தல், என்னும் பொருள் களைத் தருவது. தாயின் பிடிப்பிலிருந்து நீங்கி வீழ்வதால் "வி" எனப்பட்டேன். பிடிப்புகழன்றுவீழாது ஒட்டிநிற்கும்நிலையிலும்"வி" எனப்படுவேன். இச்சொல்லுக்குச் சாதல், ஒழிதல், மடிதல் என்னும் பொருள்களும் உள. நான் செத்தொழிந்து மடிந்துவிடவில்லை. 25 புறம் : 807 : 5 : 26 அகம் - 95 : 6, 7: 27. பூவும் ஒழிவும் நீக்கமும் மடிவும் - புள்ளின் பெயரும் சாவும் வீயே" பிங், நி, 4089.