உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/756

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

736


முதலியவற்றை எய்வர். இதனை ஆலத்துார் கிழார் பாடி யுள்ளார். கண்ணப்பனாகிய திண்ணனும் தன் தோழருடன் இவ்வாறு விளையாட்டு வேட்டையாடியதாகச் சீகாளத்தி புராணம்? அறிவிக்கின்றது. இவ்வீர்க்குத் தொகுதி கூரை வேயவும்3 பயன்பட்டது. இதில் மலரும் இதன் பூ பற்றிப் புறநானூற்றில் மட்டும் ஒரு பாடலில் வருகின்றது. பூ பற்றி இரண்டு அடிகளே உள்ளன. அவ்விரண்டு அடிகளே இப்பூ பற்றிய கருத்துகளை வழங்கிவிடுகின்றன. 'முதுவேனிற் பருவத்தில் மலரும்; சுரமாம் பாலையில். வளரும்; கழன்று விழும் கொத்துப் பூ. நன்கு மலர்ந்து முதிர்ந்த பின்னரே கழன்று விழும். முதுகில் வரிகளைக் கொண்ட அணிலின் வால் போன்ற வடிவமைப்பு உடையது. வெண்மை நிறங்கொண்டது. இவற்றை அறிவிக்கும் அடிகள் இவை: "வேனல் வரியனில் வாலத் தன்ன கான ஊகின் கழன்று கு முது வீ'4 - இவ்வாறு கழன்று வீழ்ந்த பூ போர்க்களத்தில் களிறோடு பட்டு வீழ்ந்த மன்ன னுடைய சுரிந்த குடுமியில் தங்கியதாம். இக்குறிப்பன்றி இப் பூ பற்றி எவ்விலக்கியத்திலும் செய்தியில்லை. இப்புறநாநூற்றுப் பாடலைப் பாடியவர் பெயரும் தெரிந்திலது. - 8. தண்டொட்டி மலர். கள்ளி, குறத்தி ஒருத்தி நாடெங்கும் போய்க் குறி சொன்னாள். பல அணிகலன்களைப் பரிசாகப் பெற்று அணிந்து கொண்டு மீண்டாள். பார்த்த குறவன் வியந்தான். அவன் அணிகலன் களது பெயர்களையும் அறியாதவன். தான் அறிந்த பொருள் களைக் கொண்டு ஒவ்வொன்றாக உசாவினான். காதணிகளைக் கண்டான். ஒன்றிற்குத் "தண்டொட்டி' என்று பெயர். அதனைப் பார்த்ததும் அவனது மனக்கண்ணில்.கள்ளிப் பூதான் தெரிந்தது. வினவினான்; விடை தந்தாள்;