699
இங்கு மோப்ப என்பதற்குப் பொருள் அழுத்தமுண்டு. மோத்தல் என்பது மணத்தை உள்ளே கொள்ள முக்கு வழியே காற்றை உள்ளிழுத்தல். மலரை மோக்கும்போது காற்று மூக்கு வழியே வெளியே வருதலும் உண்டு. எனினும் மோத்தல் என்பது உள்ளிழுக்கும் செயலேயாகும். எனவே, அனிச்சத்திற்கு ஊறும் புலன் உணர்வு வெளியிலிருந்து நிகழும் ஈர்ப்பால் நிகழ்வது. மாந்தர் உள்ளிழுக்கும் உயிர்வளி (OXYGEN) வெப்ப முள்ளது. அவ்வெப்பத்தாலும் ஈர்ப்பாம் தாக்குதலாலும் அனிச்சம் குழைகின்றது. மேலும் ஆழமாக நோக்கினால் உள்ளிழுக்கும் உயிர்வளியைவிட .ெ வ எளி வி டு ம் கரியமிலவளி (CARBON DIOXIDE) கூடுதல் வெப்பமுள்ளது. அவ்வளவு வெப்பத் தாக்குதலுக்கு முன்னே, உயிர்வளியின் குறைந்த அளவு வெப்ப ஈர்ப்பிலேயே குழைந்துவிடும். இந்நிலை அனிச்சத்தில் குழைவு மென்மையை இன்னும் துணுக்கமாக்குகின்றது. உரையாசிரியர்களது குறிப்பு மேலும் ஒரு கருத்தைத் துாண்டுகின்றது. மோப்பக் குழையும் என்பதற்குப் பரிமேலழகர் "மோந்துழியன் றிக் குழையாது" என்றார். மணக்குடவர் 'மோந் தால் அல்லது வாடாது' என்றார். இவ்விளக்கங்கள் உவமிக்கப் படும் பொருளாகிய விருந்தின் குழைவை உளத்துக்கொண்டு எழுதப்பட்டனவாயினும்வேறுவகைத்தாக்குதல்களுக்குக் குழைவது என்பதனைவிட மோக்கும் செயல் ஒன்றே இதற்குரியதாக அவர் களால் கருதப்பட்டுள்ளது. இக்கருத்தும் கவனத்திற்கொள்ளத் தக்கதே. இக் கவனத்தால் அனிச்சத்தின் குழைவிற்கு ஊறும் புலன் உணர்வு உயிர்வளியின் ஈர்ப்பு - ஈர்ப்பின்போது நேரும் வெப்ப நிலை இவற்றின் தனிக் கரணியத்தால் நேர்வதாகக் கொள்ள வேண்டும். இவ்வாறாகும் கருத்து அறிவியல் தொடர் புடன் மேலும் ஆயத்தக்கது. இதுவரை அனிச்சத் தொடர்பில் காணப்பட்ட பாடற் கருத்துகளை நோக்கும்போது திருக்குறளின் கருத்துகளே மூல மாகவும், பிறவெல்லாம் அவற்றை வழிமொழிபவையாகவும் உள்ளன. இவைகொண்டு அனிச்சமலரைப் பற்றிய முழுமையான கருத்து களைக் கொள்ள இயலவில்லை. இவற்றைக் கூர்ந்து நோக்கும் போது 'சங்ககால அளவிலும் அனிச்சம் என்பது அருகி யே காட்சிப்பட்டது' என முடிவு கொள்வது பொருந்தும். . திருக்குறட் கருத்தளவிலும் அனிச்ச மலரின் தன்மையைத் தான் அறிகின்றோம். இம்மலரின் வடிவமைப்பு, நிறம், பருவம்