622
"கருவிளைக் கண் போற் பூத்தன” (கார் 9) எனப் பலராலும் பொருத்தப்பட்டது.
உழவுத் தொழிலால் உடல் கருத்த வேளாளன் உடல் நிறத் தால், "கருவிளை புரையும் மேனியன்’ எனப்பட்டான். மேல் அகன்று அடி குவிந்த இதன் அமைப்பைக் கொண்டு புலவர் ஏறு மீனாட்சிசுந்தரனார், கடிதடங் காக்கணமே'2 எனப் பெண் குறிக்கு உவமையாக்கினார்.
இதற்கு உரைகாரர் காலத்திலேயே 'காக்கணம்' என்னும் பெயர் வழங்கலாயிற்று. கருவிளைக்கு மாறுபட்ட நிறங்கொண்ட வெண்மைப் பூ உண்டு. அது 'வெண்காக்கணம்' எனப்பட்டது. 'சொ' என்றால் 'மாறுபாடு' என்று பொருள். கருமைக்கு மாறு பட்ட வெண்மை கொண்ட காக்கணம் செருவிளை’ எனப்பட்டது. குறிஞ்சிப்பாட்டில் செருவிளை மணிப்பூங் கருவிளை'8 -என இரண்டு வகை விளையும் அடுத்தடுத்து வைக்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்த நச்சர் செருவிளை' என்பதற்கு 'வெண் காக்கணம்’ எனப் பொருள் எழுதினார்.
இவ்வெண் காக்கனம் அருகிக் காணப்படுவது போன்றே இலக்கியங்களில் குறிஞ்சிப் பாட்டு ஒன்றில் ஒரிடத்தில் மட்டும் அருகி அமைந்துள்ளது. இப் பூ மருந்துக்குப் பயன்படும் இரும்பைக் குழம்பாக்க இம்மலர்ச்சாறு பயன்படும் என்பர்,
இஃதொரு கொடிப் பூ. புதலில் படர்வதாகப் பாடப் பட்டுள்ளது.
'தண்புனக் கருவிளை' என்பதாலும் குறிஞ்சி நில மலர் களோடு கூட்டிப் பேசப்படுவதாலும் இது குறிஞ்சி நிலமலர்.
'கருவிளை மலர ... ... ... ...
சிதர் சினை துரங்கும் அற்சிரம்'5 -என்பதால் வாடைக் காற்று வீசும் முன்பணிக்காலம் இதன் பருவமாகும். முன்பணிக்கால வாடைக்காற்றால் இது பூப்பதையும் அசைந்தாடு வதையும் பாடியுள்ளனர்.
நாட்டு வழக்கில் 'காக்கட்டான், காக்கரட்டான்' என்பது ஆண்டாள் இதனைக் கார்க்கோடப் பூ” என்றாள். சங்கு
1. சிலம்பு : 22 : 89 4 நற் : 262 : 1. 2 сх. ւ ւ տ : 79 5 அகம் : 294 : 5, 11, 8 &ρ, ut ; 68- - 8 நாச்சியார் : 40 : 4: