உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580


"சிறுமலைச் சிலம்பிற் செங்கூதாள மொடு - என்றும் 'செண்பகம் கருவிளம் செங்கூதாளம்? - என்றும் ஈரிடங் களில் செங்கூதாளத்தையும் காட்டியுள்ளார். இவற்றிற்கு வெண்கூதாள நறும்பூ” செங்கூதாள நறும்பூ' என உரை எழுத பட்டது. வேறு நூல்களில் இவ்வாட்சி இல்லை. பசிய குறுகிய காம்புடன் கூடிய இப்பூ உள் துளைகொண்ட பூ இத்துளை துாம்பு என்றும், உளை என்றும் வழங்கப்படும். இப்பூ காம்பிவிருந்து கழன்று விழுவதை நாகன்போத்தன் என்பார் கைவளை கழன்று விழுவதற்கு உவமையாக்கினார். 67 (00لهيك (68 ممم. .... ... ،... هم. ... " நீர்திகழ் சிலம்பின் ஒராங் கவிழ்ந்த வெண்சு. தாளத்து அம் துரம்பு புதுமலர் ஆர்கழல் உதவ போலக் சோர்குவ’3 -எனப் பாடியுள்ளார். இது மணங்கமழும் பூ. இதன் மனத்தை 'அசையா நாற்றம்”4 என்றார் இளவேட்டனார். எனவே மகளிரும் ஆடவரும் சூடினர். வெறியாடும் வேலன் குளவியொடு, "வெண்கூதாளம் தொடுத்த கண்ணிய"னாக -விளங்கினான். இதன் தாதுத் துTள் பொன் நிறமானது. இப்பூவில் உராய்ந்து போன ஒரு பன்றியின் முதுகில் இப்பொன் தாது படிந்து, 'பொன்னுரை கட்டளை கடுப்பப் 6 -போயிற்றாம். பன்றி யின்முதுகைப் பொன்னை உரைத்துப்பார்க்கும் உரைகல்லாக்கியது இதன் தாதுத்துாள். இப்பொன் தாதைக்கொண்ட கூதாளி மலர், கொடிப் பூ குறிஞ்சி நிலப் பூ, கூதிர்காலப் பூ; வெண்மை நிறங்கொண்டது; இதிற் செம்மை வகையும் உண்டு மனங்கொண்டது; சூடும் பூ நிற உவமையால் இஃதொரு குருகு மலர். 1. சிலம்பு : 14 : 88, 4 அகம் : 272 : 8. 2. சிலம்பு 22:40, 5 கிருமுருகு : 192. 8 குறுந் 282 :4-8, 5 அகம் : 178 9