உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

547


'நீரிற் பிரியாப் பருஉத்திரி கடுக்கும் r பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ" - எனப் பாடினார். ஆம், பகன்றையின் வெண்மையான முகை அவ்வாறு திருகியதாகக் காட்சிதரும். அத்திருகலிலும் முகையின் முனை யிலமைந்த திருகலுக்கு ஆவூர் மூலங்கிழார் கண்ட உவமை ஒன்று எண்டு. - வேள்வித் தொழிலை விடுத்த பார்ப்பான் ஒருவன் வளையல் அறுக்கும் தொழிலை மேற்கொண் டா ன். வெண்மையான சங்கின் அகன்ற வாய்ப்புறத்திலிருந்து வளையல்களை அறுத்தெடுத்தான், சங்குமுனை சிறிய தாகையால் அதை விடுத்தான்; இவ்வாறு, 'வனைகளைத் தொழிந்த கொழுந்தின் அன்ன தளை பிணி அவிழாச் சுரிமுகப் பகன்றை"? - என உவமை பெற்றது, பகன்றை முகை. சங்கின் முனை சுரிந்திருப்பது போன்ற தால் சுரிமுகப் பகன்றை” எனப்பட்டது. இம்முகை விரிந்தால் இதழ்கள் வட்டமாக நல்ல வெண்மை யுடன் காட்சிதரும். இவ்வாறு பல பூக்கள் பச்சை இலைகளின் இடையே தோன்றுவது. 'நீல வண்ணம் ஏற்றிய தோல் கேடயத்தில் ஆங் காங்கு பாண்டில் என்னும் வட்ட வட்ட பளிங்குக் கண் ணாடி பதித்திருப்பது போன்றிருந்ததாம்.' இன்னும், தனியொரு மலர் அகல விரிந்துள்ள புற இதழ்களுடன் வெண்மையான அகவிதழ்கள் வட்டமாக விரிந்து தோன்றுவதைப் பாண்டில் என்னும் வட்டக்கிண்ணத்திற்கு உவமை கூறினார் நக்கீரர். 4 1 குறு: 880 : 8, 4. 8 அகம் : 217 : 7, 8. 2 அகம் : 24 2, 8. 4 நற் : 88 :2-4,