464
இலவத்து, ஒள்ளினர் வான் யூ” என்றபடி பளபளக்கும் செவ் வொளி கொண்ட பூவாகும்.
பின்னிலவம், மஞ்சள் நிறங்கொண்டது. இம்மஞ்சளும் பளிச்சிடுவது அன்று; சற்று மங்கலானதேயாகும்.
இவையிரண்டும் பஞ்சு தரும் மரங்கள். இக்காரணத்தால் ஆங்கிலத்தில் இவ்விரண்டும் பட்டெனும் பஞ்சு மரம்' என்னும் பொருளில் Silk cotton tree’ எனும் பெயரிடப்பட்டன. இவற் றின் வேறு பாட்டைக் குறிக்க மலரின் நிறங்களை வைத்து *GlæÞu,û Li;: @L-ĝo)Ib L 1555;1pj ū.” Red flower Silk Cotton tree என்று முள்ளிலவமும், மஞ்சட்பூப் பட்டெனும் பஞ்சுமரம்'Yellow flower Silk cotton orsyril 1955 g)606.jh & 53.5G Li-Lor,
இங்கு ஒன்றைக் கருதல் வேண்டும். முன்னதாகிய முள்ளிலவத்தினின்றும் மலர் நிறத்தால் வேறுபடும் பின்னதைக் குறிக்கவே "கோங்கிலவம்' என்னும் குறியீடு எழுந்தது. பின்னது பஞ்சு முதலிய அமைப்பால் இலவம் ஆயினும் மலரால், கோங்கு மலர்போன்று மஞ்சள் நிறங்கொண்டது என்பதைக் குறியாக வைத்துக் கோங்குமலர் போன்ற மஞ்சள் நிறமுடைய இலவம்’ என்னும் பொருளில் கோங்கிலவம்’ எனப்பட்டது. இத்தொடர் உவமத் தொகைத் தொடர். இத்தொடரில் கோங்கு இலவத்திற்கு அடைமொழி என்பதை உணர்ந்து பொருள் காணின் இத் தொடர் கோங்கைக் குறிப்பது அன்று; இலவைக் குறிப்பது என்பதை அறியலாம்.
இதனைப் பிறழ உணர்ந்தோர் கோங்கிலவம்’ என்பதைக் கோங்கின் மறுபெயராகக் கொண்டு கோங்கிற்கும் பஞ்சு உண்டு என்றனர். கோங்கு வேறு; இலவம் வேறு. இரண்டிலவத் திற்கும் வேறுபாடு காட்ட எழுந்த தொடரே கோங்கிலவம்’ இஃதும் பிற்கால வழக்கு இலக்கிய வழக்கன்று.
பிற்கால ஆங்கிலப் பெயர் இவ்விரண்டின் மலர் நிற வேறு பாட்டைக் காட்டுவது போன்ற இவற்றின் செடியியற் பெயர்கள். இவற்றின் இட வேறுபாட்டைக் காட்டுகின்றன. இரண்டும் காய்கள் முற்றியதும் வெடித்துப் பஞ்சைப் பறக்க விடுபவை
1 ஐங்: 82 : 1.