436
"சுடர்ப் பூங் கொன்றை” யாகச் சுடர்கின்றது. அச் சுடரைக் கண்ட பேயனார்,
tg
... ... ... ... ... ... கொன்றை அடர்பொன் என்னச் சுடரிதழ் விரியும்? -எனத் தகட்டுப் பொன்னாகக் கண்டு, அப்பொன்னையும் -
"கடுபொன் அன்ன கொன்றை'3 -என உருக்கி வார்த்தி சுடுபொன் என்றார். குமரகுருபரர்
'கொன்றை எரியிலிட்ட பொன் ஒக்கும்" - என்றார்.
இவையெல்லாம் கொன்றையின் நிறங்கருதிய வடிப்புகள்.
கொன்றை கொத்தாகப் பூக்கும். முறியினர்க் கொன்றை" 'துரங்கினர்க் கொன்றை' கொன்றை ஒள்ளினர்' என்றெல்லாம் இணராகப் பாடப்பட்டுள்ளது. இக்கொத்தும் ஒரே தொகுப்பான கொத்து அன்று, மேலே மலரும், கீழ் கீழே போது, முகை, அரும்பு, நனை என்னும் அடுக்குமாக நீண்டிருக்கும் கொத்தாகும். தூக்கிக் கட்டித் தொங்கவிட்டது போன்றிருக்கும். இதனை, -
'ஆய்பொன் அவிரிழை துக்கி யன்ன - . நீடு இணர்க் கொன்றை”5 -என மருதங்கிழார் நீண்ட கொத்தெனக் காட்டினார். அதனால், தேர்ந்த பொன்னால் செய்யப்பட்டு ஒளிவிடும் இழை அணி போன்றது என்றும் காட்டினார். இழை உருவம் பெற்ற கொன்றைக் கொத்தை,
"இழையணி மகளிரின் விழைதகப் பூத்த
நீடு சுரி இணர சுடர்விக் கொன்றை' -என்று நீண்டிருப் பதையும் அடிமுனையில் சுரிந்திருப்பதையும் காட்டினார் மருதன் இளநாகனார். இதைத் தொடர்வார் போன்று ஒதலாந்தையார் என்பார்,
"பொன்செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப்பூங் கொன்றை'7 -என பூங்
t மது. கா :217 5 அகம் , 864 : 4, 5, 2 జమ్గా : 480 = 1, 2 6 நற் : 392 :1, 2, . . . .” 7 குறுந் : 21 : 1, 2
திருவாகர்தான்மணிமாலை : 89:2, 8,