428
இத்தாதைத் தாமே மார்பிடங்களில் அப்பிக்கொள்வதை விடத் தம் காதலர் கையால் சொரிந்து தூவுவது ஒருக் காமக் களியாட்டாகும். -
ஒரு காதல் மங்கை, புலிபோலப் பூத்த வேங்கைப் ಇ கொத்தைக் கொய்தாள். ஒளிமிக்க அப்பூங்கொத்தில் பதிந்திருந்த தாதுத் துளை உகுத்தாள். உகுத்தவள் அண்டி நின்ற காதல விடம் நீட்டினாள். அவன் தன் கையில் அதனை ஏந்தினான். வேங்கை தந்த துளை அவளது மார்புச் சுணங்கு என்னும் வேங்கையோடு படியுமாறு அவளது கொங்கைக் குவட்டின்மேல் பெய்தான். அவன் கையால் பெய்துகொள்வதில் அவளுக்கொரு அவா. இவ்வாறு எழுதிக்காட்டுவதிலே சிவஞானமுனிவருக்கு ஒரு புலமை அவா. அவாவில் வெளிவந்த பாடல் :
'புலியுரு முருளப் பூத்த பூந்துணர் வேங்கை ஒள்விப் பல பறித் துகுத்த தாது பைந்தொடி மகளிர் நீட்ட அவர்கரத் தேந்தி அம்பொற் சுணங்கெனும் வேங்கையோடும் குலவு வெங் களபக் கொங்கைக் குவட்டின்மேற் சொரியப்
பெய்தார்'1 -என்பது
மாந்தர்தம் வாழ்வியலில் இவ்வாறெல்லாம் பங்குகொண்ட வேங்கை கடவுளர்க்கும் உரியதாயிற்று.
இவ்வேலன் வேங்கை மலரும் சூடுபவன். குமரமுருகன் குன்றக் குரவர்தம் குலதெய்வம். குறக்குமரி தன் திருமணம் விரைந்து நிறைவேற வேண்டி.
“மன்ற வேங்கை மலர்சில கொண்டு
மலையுறை கடவுள் குலமுதல் வழுத்"துவாள். (ஐங்குறு நூறு : 259 : 2, 3.) இவ்வகையில் காதல் துறைப் பூசைக்கு வேங்கைப் பூ வழிபாட்டு மலராயிற்று. -
சிவபெருமான் கணிவளர் வேங்கையோடு கடிதிங்கள் கண்ணி” குடியவன். சிவ பூசெய்க்கு வேங்கைப் பூ பயன் படுத்தப்படும். திருமாலிய ஆழ்வார்கள் வேங்கையைப் ಲFಭ. யுள்ளனர். அருகக்கடவுளை வழிபட எழுந்த சீவகன், X
1 காஞ், பு திருக்கண் :25,