உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



420


என்று பூசலிடப்படவில்லை. சங்க இலக்கியங்களில் விலங்கைக் குறிக்கப் புலி என்னும் சொல்லேமிகுதியாக இன்னும் சொன்னால் நிறைவாக (167 இடங்களில்) ஆளப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் ஒருங்கு வைத்து நோக்கும்போது வேங்கை என்னும் சொல் மரத்திற்கே உரியதாகின்றது. சொல்லமைப்பிலும், வெம்மை’ என்னும் பண்புச்சொல் வெம்’ என்னும் பண்படியில் நின்று விகுதிபெற்று (ஈங்கை, காங்கை போங்கை, மூங்கை.) வேங்கை ஆனதாகக் கொள்ள வகையுண்டு. முன்னரும் 'வெப்புள் விளைந்த வேங்கை’ என்று கண்டோம். மலைப் பாறைகளிடையே பெருவெப்பத்தில் வளர்வதாகையாலும் அவ்வாறு வளரும் பலவற்றுள் இது குறிக்கத்தக்க ஒன்றாக இருத்தலாலும் இச்சொல் அமைந்தது எனலாம். . மரத்திற்கான வேங்கை என்னும் சொல் விலங்காம் புலிக்கும் ஏறியது எவ்வாறு? பெரும்பகுதி வேங்கைப் பூவின் கொத்தாலும் சிறு பகுதி வேங்கை மரத்தாலும் புலி இயைபுடைய தாயிற்று. வேங்கையின் உவமையால் புலிவேங்கை புலப்பட்டதே முழுக் காரணம் எனலாம். வேங்கை மரக்கிளை கரிய பட்டையைக் கொண்டது. இக் கருநிறமும் கிளையின் திரட்சியும், புலியின் உடல் மயிர் நிறத்தை யும் உருவத் திரட்சியையும் நினைவு படுத்துவனவாயின. கருங் கிளையில் கொத்தாக நீண்டு தவழ்ந்த செம்மை நிற மலர் வரி, புலி உடலில் வரி வரியாக அமைந்த செம்மைக்குப் பொருத்த மாயிற்று (தனிப்பூ சிறுத்தைப்புலியின் உடற்புள்ளிக்குப் பொருத்த மாயிற்று) இரண்டும் சேர்ந்த தோற்றம் புலிக்கு உவமையாக, "மறப்புலிக் குழுஉக் குரல் (மயிர்) செத்து (என்று . கருதி)' -என்று கருங்கிளையும். 'வேங்கை ஒள்வி புலிப்பொறி கடுப்ப' . -எனச் செம்பூவும் சேர்ந்து ' உறுபுலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கை’? -என்றும் 1. பதிற் : 41 : 1. 2. கலித் : 88 : 1.