376
இங்கு, தோன்றியைத் தோன்றுபு' எனத் தோன்றுவதாகக் குறிப் பது இது மேல் தோன்றி எனக் காட்டுவதாகும். இதுபோன்றே
நறு வி முல்லையொடு தோன்றி தோன்ற” T
总,弱 -எனத் தோன்றுவதாகத் குறித்தமையும் குறிக்கத்தக்கது. -
விளக்காகக் கூறப்பட்ட இதனைக் கல்லாடரும் விளக்காகக் கொண்டு இதன் பசுமையான நீண்டிருக்கும் தண்டை விளக்குத் தண்டாகக் காண்கின்றார். (இங்கு தண்டு என்பது முன்னே கோடலில் கண்ட துடுப்பு) இத்தண்டு பச்சையாக ஒளிர்வதால் "மரகதத் தண்டு’ என்றார்: -
"மரகத் தண் டின் தோன்றி விளக்கெடுப்ப" 2 ஒளி பரவிற்றாம்.
கொடியில் பல மலர்கள் பூத்திருக்கும் காட்சி வரிசையாக விளக்கு வைத்தது போன்று இருக்குமன்றோ? நாட்டு மக்கள் எப் போது விளக்குவைப்பார்கள்? கார்த்திகையின்போது தானே?
'நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப் புலமெல்லாம் பூத்தன தோன்றி" 8
- -என்னும் மதுரைக் கண்ணங் கூத்தனாரது பாடல் தோன்றியை மருத நிலத்தோடு தொடர்பு படுத்திக் காட்டுகின்றது. -
குருதிப் பூ.
தோன்றி, நிறத்தால் மேலும் முற்றிவிட்டது. நல்ல செஞ் சிவப்பு கொண்டுவிட்டது. இச்சிவப்பு குறுதிச்சிவப்பு.
"தோடார் தோன்றி குருதி"யாக (முல். பா: 96) 'குருதிமலர்ந்த தோன்றியாகத் (கைந்நிலை:26) தோன்றிப் g பெயரிலும்,
1 அகம் : 64 : 3, -
2. கல் : 14 : , 8 கார்: தா: 29,