உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272


நெல் தூவப்படுவது ஆன்டன்றோ? இதுபோன்று வெட்சிப் பூவையும் தினையையும் கலந்து தூவி விருச்சி சொல்லப்படும் பழக்கம் உண்டு. - யதாரும் புள்ளும் கேளா ஊக்கமொடு எங்கேசன் ஆயினன் ஆதலின் யாமத்தும் செங்கால் வெட்சியும் தினையும் துர உய்' -என்று தகடூர் யாத்திரைப் பாடல் (புறத்திரட்டு காட்டும் பாடல்) தினையொடு வெட்சிப் பூ துவப்பட்டு விருச்சி கேட்டதைக் காட்டுகின்றது. இவ்வாறு விருச்சி சொல்ல வெட்சிப் பூ கொள்ளப்பட்டது கொண்டு விருச்சிக்குரிய பூ - விருச்சிப் பூ - விருச்சி என்று பெயராயிற்று. அவ்வாறாயின் இப்புதுப் பூவின் இயற்பெயர் ចា ក្? வெட்சியை விளக்கும் கலைக்களஞ்சியத்தில் வெட்சியின் மாற்றுப் பெயர்களாகத் தெட்டி', 'தச்சி' என்னும் சொற்கள் குறிக்கப்பட்டுள்ளன. இதன்படி தெட்டி அல்லது தச்சி என்பது இதன் பெயராக இருக்கலாம். மேலும் "சுளுந்துக் கோரை' என்று இதன் நாட்டு வழக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெட்டி தச்சி என்னும் சொற்களின் ஒலி வெட்சி ஒவியை ஒத்திருப்ப தாலும், செம்மை நிறம் முதலிய சில ஒற்றுமைகளாலும் இது வெட்சி என கருதப்படலாயிற்று. ஆனால், விருச்சி என்றோ, தெட்டி, தச்சி என்றோ பூவின் பெயர்கள் இலக்கியங்களில் குறிக்கப்படவில்லை. பிற்கால அகர முதலிகளில் இச்சொற்களில் தெட்டி மட்டும் வெட்சி எனும் பொருளில் காட்டப்பட்டுள்ளது. "விருச்சி, தெட்டி’ எனும் பூ வழக்கு காணப்படவில்லை. இவற்றைக்கொண்டு நோக்கினால் இச்செடிப் பூ பிற் காலத்தில் வந்தேறிய செடியாதல் வேண்டும். தற்காலத்தில் காட்டுக் கருவை என்றொரு சிறு மரவகை பல்கிப் பரவி விளங்குவதைப் போன்று இங்கு பரப்பப்பட்டுப் பல்கியிருக்கலாம். தெட்டி' என்னும் சொற்கு வஞ்சகன் என்று பொருள். இச்செடியுமவஞ்சமாக வெட்சியின் பெயரைச் சூட்டிக்கொண்டது