உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228


தாமரைக் காடு அவற்றிலும் திருமாலிய மதத்தார் தாமே முழுக் குத்தகை யாக்கிக் கொண்டுள்ளனர் எனலாம். தாமரையின் தோற்றமே திருமாலால்தான் என்பர். நீர் தோன்றி நிலந் தோன்றாத போதே அந்த வெள்ளத்தின் நடுவில் மலர்ந்தது தாமரை : என்றனர். அதனை நின்னில் தோன்றிய நிறை இதழ்த் தாமரை”? என்றனர். திருமாலிடம் எங்கு தோன்றியதாம். 'உந்தி எழுந்த உருவ மலர்”. திருமாலினது கொப்பூழ்க் கொடிதான் முதன் முதல் தோன்றிய தாமரையின் தண்டு. அதனாலேயே திருமாலுக்கு வடமொழியில் "பதுமநாபன்' என்றொரு பெயர். அது முளைத்து மலர்ந்தபோதே அதனில் படைப்புக் கடவுளாம் நான்முகனும் தோன்றினான். t பெரியாழ்வார், 'உத்தி எழுந்த உருவ மலர்தன்னில் சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தனன்'3 -என்று பாடினார். திருமாலினது முகம் செந்தாமரை, முகம் மட்டுமோ? அடையிறந்து அவிழ்ந்த வள்ளிதழ்த் தாமரை அடியும் கையும் கண்ணும் வாயும்'4 ஆயிற்று. தாமரைக் கண்ணன்' என்பதொரு சிறப்புப் பெயர். அவன் உடலால் கருநீல நிறத்தன். உறுப்புகள் யாவும் தாமரை போன்றவை இக்காட்சி "கார்க்கடல் கமலம் பூத்தது' போன்றி ருந்ததாம். உறுப்பெல்லாம் தாமரை தாமரை தாமரையாகவே மண்டினமையால் "கமலக் காடன்ன கண்ணன்" என்றனர். "மாநிலம் இயலா முதன்முறை அமையத்து நாம வென்னத்து நடுவண் தோன்றிய வாய்மொழி மகனொடு மலர்ந்த - தாமப் பொருட்டுநின் நேமி நிழலே: -பரி : 3: 91-94 பரி : 4 : 60 பெரி. திரு : பின்னை மணாளன் . 8 பசி : 13 : 50, 51 கம்ப இலங்கை காண் படலம் : 28 திருவாய் : ; : :