215
திக்குயானை ஒன்றிற்குக் குமுதம்’ என்னும் பெயரைக் கண் டோம். ஆம்பல் என்னும் சொல்லும் அதற்குப் பயன்படுத்தப்படும். இவ்வகையில் ஆம்பல் யானைக்கும் பெயராயிற்று. இத்தொடர்பில் யானைமுகக் கடவுளர்க்கும் ஆயிற்று. 'ஒரு கோட்டு ஆம்பல் (பிள்ளையார்) ஈன்று' எனக்குற்றாலக்குறவஞ்சி பிள்ளைக் கடவுளுக்கு ஆம்பலைப் பெயராக்கியது.
இத்துனை பெருமைகளைப் பரவலாகப் பெற்ற ஆம்பல் செருக்கில்லாத மலர். பணிவுடைமை பெற்ற மலர். தலைவியைச் சுற்றிப் பணிப்பெண்கள் நிற்பர். தலைவி சினந்தால் பணிப்பெண் கள் கைகுவித்து வணங்கி நிற்பர். இது போன்று குளம் என்னும் இல்லத்தில் தாமரைஎன்னும்தலைவி செம்மாந்திருந்தாள். அவளது செந்நிறம், சினங்கொண்ட குறியாக மாறியது. சினத்தால் ஒரு பெருமூச்சு விட்டாள். அம்மூச்சு எனும் காற்றால் பக்கத்தில் இருந்த ஆம்பல் தலை சாய்த்தது. குவிந்திருந்த ஆம்பல் கைகுவித்தது போன்று இருந்தது. காற்றால் அசைந்து தாழ்ந்தது பணிந்து இறைஞ்சியதுபோன்றுகற்பனைசெய்யப்பட்டது. இக்கற்பனையைப் பெரும்புலவர் பரணர் தம் சொற்களால் இவ்வாறு வடித்துள்ளார்:
"சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென அதனெதிர் மடத்தகை ஆயம் (தோழிமார்) கைதொழு தாங்கு உறுகால் (காற்று) ஒற்று ஒல்கி ஆம்பல் தாமரைக்கு இறைஞ்சும் தண்டுரை' !
மக்கள் மலராம் ஆம்பல் இவ்வாறு பணிவுடைமை காட்டி மக்கள் பணிவுடைமை கொள்ள வேண்டியதையும் குறிக்கின்றது.
ஆம்பலின் வரலாற்றைத் தொகுத்தால்,
ஆம்பல் நீர்ப் பூ. நீர்வளங்கொண்ட மருத நிலப் பூ , நீருள்ள பருவமெல்லாம் பூக்குமாயினும்
கார்காலப் பூ. தன்னில்வெண்மையும் செம்மையுமாக இருவகைகொண்டது. தன் குடும்பத்தாரின் நீல நிறங்கொண்டது. இலக்கியங்களில் கண்ணிற்கு உவமையானது.
1 நற் : 300; 1 - 4,