உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

 என்றும் நான்கு வகைப் பூக்களைப் பறி ந் த மை யைது காணலாம், அவ்வாறு பறிப்பவற்றைத் தமது ஆடை மடியில் தொகுத்துக்கொள்வர். நெய்தற்பூவையும் ஆம்பற்பூவையும் பறிக்க சிறுமியர் சிலம்பு ஒலிக்க ஓடுவராம். இவ்வாறு பறிக்கும் போது அப்பக்கத்தே வருவோருக்கு சூடிக்கொள்ள வழங்குவர். பரிசு பெற விரும்பும் பாணருக்கு மற். றொரு பாணன் வழி சொல்லுகின்றான். கடந்து செல்லும் இடங். களில் என்னென்ன கிடைக்கும் என்று சொல்பவன், 'பொய்கையில் பூப்பறிப்போர் பல மலர்களை உங்களுக்கு இடுவர். அவற்றைக் காலையிலே தலையில் பிணையலாகச் சூடிச் செல்க' என்றான். ஒரு கருத்தை இழையோட்டமாக நினைவில் நிறுத்திக் கொண்டே இவற்றைக் காண வேண்டும். . நீர்ப்பூக்களைக் களைவோர், குறுவோர் யாவரும் உழவர் குடும்பத்துப் பெண்கள்; எளியவர்கள். அதனைப் பெறுவோரும், பாணர் என்னும் கலைஞர்கள்; எளியவர்கள். . பறிக்கும்போது, நீருக்குள் அமிழ்ந்து மேலே வராதிருக்கும் செவ்வரும்புகளை - செங்கழுநீர் அரும்புகளை - மிக விரும்பிப் பறிப்பர். திருமுருகாற்றுப்படை இதனை, .. 'கீழ்நீர்ச் செவ்வரும்பு’ என்றது. இதற்கு நச்சினார்க்கினியர் "நீர்க்கீழ்நின்ற சிவந்த அரும்பு. அது மிகச் சிவத்தலின் ஒப்பனைக்குக் கொள்வர்'2 -என்று. விளக்கினார். இதினிலும் கழுநீர் ஒரு குறிப்பிடத்தக்கதாகின்றது. களையாகப் பறித்தவற்றைத் தொகுத்துப் போட்டிருப்பர். அது நெற்கூடுபோன்று குவியலாகக் கிடக்குமாம். இது 1 "பொய்கை குறுநர் இட்ட கூம்புவிடு பன்மலர் ருநாள் அமையத்துப் பிணையினிர் பெருகுவீர்" பெரும்பான்: 294-26