உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189


எந்த நேரத்தில் மலர்பவை? 'வைகறை மலரும் நெய்தல் போல' (ஐங் : 188) என நெய்தல் காலையில் மலர்வதைக் குறிக்கின்றது. எனவே, இவை மூன்றும் காலையில் மலர்ந்து மாலையில் குவிபவை. ... ... ... ... ... 'வாவியுள் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்’ என ஆண்டாள் விடியலில் பாடியதால் ஆம்பலும், பிறவும் மலரும் பொழுதில் வேறுபாடுடை யவை என அறியலாம். இவ்வேறுபாடு, இம்மலர்கள் உவமையாகக் கூறப்படு வதிலும் வெளியாகின்றது. இவ்வுவமை வகை வேறுபாட்டைத் தொகுத்துச் சுருக்கிக் காட்டுவது போன்று, “முகம் தாமரை முறுவல் (வாய்) ஆம்பல் கண் நீலம் 2 எனத் திணைமாலை நூற்றைம்பதில் உருவகச் சொற்றொடர்கள் அமைந்துள்ளன. இதுபோன்றே 'வாவிதொறும் வண் கமலம் முகம் காட்டச் செங்குதமும் வாய்கள் காட்டக் காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண் காட்டும்' -எனத் தேவாரமும் அமைந்துள்ளது. மற்றைய இலக்கியங்களும் ஆம்பலை வாய்க்கும், பிறவற்றைக் கண்ணுக்கும் உவமைகளாகப் பல்லிடங்களில் காட்டுகின்றன. ஒவ்வொன்றிற்கும் ஒன்றிரண்டு காணலாம்: ஆம்பல் வாய்: 'அரக்காம்பல் நாறும் வாய்’ (நாலடி : 396) "செவ்வாய் ஆம்பல்' (பரி : 8; 116) 1 திருப்பா : 14 2 திணை. நூ. 72. 8 ஞான. தே : கழுமலப் பதிகம் : 3, 4.