உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180


மேலே காணப்பட்ட இலக்கிய அடிகள் யாவும் மலைத் தொடர்பிலேயே ஆம்’ என்னும் சொல்லை நீர் என்னும்பொருளில் வழங்கியுள்ளன. காலப்போக்கில் மருத நிலத்து நீருக்கும் இச்சொல் வழங்கப் பட்டதைப் புறநானூறு, “ஆம் இருந்த அடை (மருதநிலத்து ஊர்ப்பெயர்) நல்கி'1 -எனக் கூறியது. இவ்வாறு "ஆம்" என்னும் நீரில் முதன் முதலில் பூத்துப் பல்கிப் பெருகியதால் ஆம்பல் பெயர் அமைந்தது. எனவே, நீர்ப் பூக்களில் "ஆம்பல் முதலாக, அதன் குடும்பம் கிளைத்துத் தழைத்தது. நீர் என்னும் பொருள் தொடர்பிலேயே நீர் இறைக்கும் மிடா "ஆம்பி’ எனப்பட்டது. மழை பெய்ததும் நீர்ப்பிடிப்பில் முளைக்கும் காளான் ஆம்பி’ எனப்பட்டது. நீர்க்குளிர்ச்சி போன்று குளுமையைப் பொழியும் முழுமதி, 'ஆம் நாள் நிறைமதி"2 -எனப்பட்டது. ஆம் என்னும் சொல் அம்' என்னும் சொல்லின் வளர்ச்சி. 'அம் 'அல் என்னும் வேர்ச்சொல்லில் முளைத்தது. தமிழில் அ, இ, உ என்னும் சுட்டெழுத்து ஒலிகளே தமிழ்ச்சொற்களின் தோற்றத்திற்கு வேர்கள் என்பது மொழி நூற்கொள்கை. எனவே, 'அல் என்னும் மூல ஆணிவேரில் முளைத்துத் தோன்றிய மூன்றாவது மொழிநிலையைக்கொண்டது ஆம்’ என்னும் சொல். இது மூலப்பொருள்களில் இன்றியமையாத ஒன்றாகிய நீருக்கு அமைந்தது மிகப் பொருத்தமே. இங்கே கண்டுள்ள அல்’ என்னும் வேர்ச்சொல் பல முளை களை விடும். அவற்றில் ஒன்று 'அர் என்றாகி அரு' என உருப் பெறும். இதற்கும் நீர்ப்பொருள் உண்டு. அரு' என்னும் நீர் வீழ்வதே அரு +விழ்= அருவீழ்-அருவீ-அருவி என்றாயிற்று. & இவ்வாறு ಅಲ್ಲ. என்னும் ೯೯. தொடர்பு அறாது விழும் நீரைக் குறித்து. நீர்க்குறைவு அற்ற நீர் நிலைகளில் தோன்றும்