166
கொய்த முல்லை, கண்ணியாகவும் மாலையாகவும் தாராகவும் உருக்கொள்ளும். ஆவினத்தை மேய்க்கும் ஆயர் 'முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர்' ' எனப்பட்டனர். அவர் முல்லை குருந்தொடு (குருந்தம்பூ) முச்சி வேய்வர்” ஆயர்களில் ஆடவர் குருந்தம்பூ அணிதல் இயல்பு. சிவபெருமானும் 'முல்லைக் கண்ணி முடியாய் 3 எனப்பட்டார். கடவுளர் யாவருக்கும் முல்லைக் கண்ணியும் முல்லைச் சூட்டும், முல்லைத்தாரும் சூட்டி அணிவிக்கப் பட்டன.
முல்லைத்தாரைப் புணர்ச்சியின் போது அணிவதுபோன்று போர் வெற்றியின் போதும் அணிவர். இவ்வாறு சூடிய ஒரு சோழன் 'முல்லைத்தார்ச் செம்பியன்' 4 எனப்பட்டான். சிவக சிந்தாமணியில் கோவிந்தையின் தந்தை நந்தகோன் 'முல்லைத் தாரான்” எனப்பட்டதை வழக்கு நோக்கி எழுதப்பட்டதாகக் கொள்ளலாம். - >
போரில் வெற்றித் திணை வாகைத் திணையாகும். இதன் உட்பிரிவான துறைகள் பல. அவற்றுள் முல்லையால் பெயர் பெற்ற துறைகள் 12 வாகைத் திணையில் வெற்றியை இருவகை யாகப் பேசுவர். உறழ்ச்சியால் பெற்ற வாகை, இயல்பால் பெற்ற வாகை. இவ்விரண்டில் முல்லைப் பெயர் பெற்றவை இயல்பால் பெற்றவை என்பது ஒரு இயல்புப் குறிப்பு.
-- வெற்றி நிலையில்:
அரசனது வெற்றி மேம்பாடு கூறுவது - அரச முல்லை
பார்ப்பனனது நடுவுநிலைச்சிறப்புக் - பார்ப்பனமுல்லை அவையோர் நடுவுநிலைப் பெருமை - அவைய முல்லை கணித்துக் கூறும் சோதிடன் புகழ் - கணிவன் முல்லை. பழங்குடி வீரத்தாயின் மனவலிமை . - மூதின்முல்லை
ஏறுபோன்றவனால் பெற்ற குடிப்பெருமை - ஏறாண் முல்லை குடி,ஊர்கூறிவீரனது நல்லாண்மைகுறிப்பது - வல்லாண் முல்லை அரசனது காவற் சிறப்பு - காவல் முல்லை அரசன்போர்க்களத்தில்காட்டியபேராண்மை- பேராண் முல்லை.
1. பதிற் : 21 : 70, . 4. புற. வெ. மா 9: 34 2. கலி 118; 25. 5 சிவ சி :485 8 அப் தே : திகுவதிகை ఓ :