உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138


'முல்லை என்னாது வை நுனை என்றதனால் அவை அரும்பியது அணித்தென்பது பெறப்பட்டது; சின்னாள் கழியின் வைந்துணையாகாது (கூர்மை போய்) மெல்லென்னுமாகலின்' என்றார். இவர் காட்டிய இந்த மென்மைப் பொருளும் முல்லைக்கு உண்டு, 'முல்', என்பதன் மாற்று உருவத் தோற்றச் சொல் மெல்’ என்பது. எனவே, மென்மைப் பொருளும் கொண்டது முல்லை. மேலும் 'முல் முன்’ என்றொரு கவடுவிட்டுக் கிளைக்கும். அந்த முன்- முன்னம் (முதன்மை) என முல்லைக்கு முன்னிடத் தையும் குறிக்கின்றது. தமிழ் மாந்தர் வாழ்வியலில் முல்லைக்கே முதலிடம் உண்டு. மலர்களில் உயிராகிய மணத்திலும் முல்லையே முன்னிடம் பெற்றது. இந்த முன்னிடம் பற்றித் தொல்காப்பியக் கருத்து ஒன்றை முன்னரே கண்டோம். நிலப்பாகுபாட்டை அறிவிக்கும் தொல்காப்பியர், 'முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்' - என முல்லையை முதற்கண் அமைத்தார். அதற்கு உரை வகுத்த நச்சினார்க் கினியர், - 'கற்பொடு பொருந்திக் கணவன் சொற்பிழையாது இல்லிருந்து நல்லறஞ் செய்தல் மகளிரது இயற்கை முல்லை யாதலின், அது முற்கூறப்பட்டது’8 -என்று முதலில் வைத்த முறை வைப்பிற்குக் காரணம் காட்டினார். தொல்காப்பியர் போன்றே இளங்கோவடிகளாரும் முதலில் குறிக்க வேண்டிய குறிஞ்சியை முன் வைக்காது, “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து -என்று முன்னிடம் தந்தார். முல்லைக்கு யாப்பருங்கல விருத்தியும் 'முல்லை குறிஞ்சி மருதத்தின் பின்நெய்தல்" - ன. முன்னிடம் வைத்தது. இலக்கண நூல்கள் மாறாது முதன்மை தந்தமை முல்லையின் முதன்மைக்கு முத்திரை குத்தியதாகும். தொல் : பொருள்: செய்யுள் ; 104 பேராசிரியர் உரை தொல் : பொருள் : அகத்திணை : 5. தொல் பொருள் அகத்திணை : 5 நச்சர் உரை. சிலம்பு, 11:54, . . . . யாப். வி இழிபு:2.எ. காட்டு .