உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100


பாவேந்தர் பாரதிதாசனார் இதனை உளத்துக்கொண்டே, 'கோட்டுப்பூ கொடிப்பூ நிலப்பூ நீர்ப்பூ நாட்டத்து வண்டெல்லாம் நல்ல இசைபாட' -என்று நிலவளர்ச்சிக்கேற்ற முறைவைப் பாக்கிக் காட்டினார். புட்பவிதி எ ன் றொரு சிறு நூல் வழிபாட்டிற்கு என்னைக் கொள்ளுதற்கு விதிகளைக் கூறும் நூல். அதில் என து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு பாடல் உள்ளது. அவற்றில் அவ்வக் குடும்பத்தைச் சேர்ந்த நான் பட்டியல் இடப்பட்டுள்ளேன். வழி பாட்டிற்குப் பச் சிலையும் கொள்ளப்படுவதால் என்னோடு இலைகளும் பட்டியலில் உள்ளன. அவற்றை நீக்கிப் பார்த்தால், கோட்டுப் பூவாக 26.உம், கொடிப்பூவாக 12உம், நிலப்பூவாக 15உம் நீர்ப்பூவாக 7 உம் கூறப்படுகின்றன. ாகக் குறிஞ்சிப்பாட்டில் தலைவியும் தோழிமாரும் ஒடித்தேடி என்னில் 99 இனத்தாரைத் தொகுத்தனர். இவற்றில் நான்கு பச்சிலை போக, கோட்டுப்பூ 15, கொடிட்யூ 28; நிலப்பூ 13; நீர்ப்பூ 5 கூறப்பட்டுள்ளன. இவற்றுடன் எனது இனம் நிறைவடைந்ததாகக் கூறக் கூடாது. மேலும் பலப்பல உள. ஆயினும், குறிக்கப்படுபவற்றை வைத்து நோக்கினும் கோட்டுக் குடும்பமே நிறைய உள்ளன எனவே, இது முதலிடம் பெற்றது. மரம், உயர்ந்து கிளைவிட்டு வளரும் செடி ஆகியவற்றில் தோன்றும் நான் கோட்டுக் குடும்பத்தன். இக்குடும்பத்து நான் 'கிளைப் பூ, மரப்பூ. சினைப்பூ, செடிப்பூ என்றெல்லாம் பெயர் பெறுவேன். இக்குடும்பத்து தான் மலர்ந்தால் கூம்புவதில்லை. நில அமைப்பால் கொடிக் குடும்பம் அடுத்துப் பேசப்பட வேண்டுமாயினும் நீர்க்குடும்பம் அடுத்துக்குறிக்கத்தக்கதாகின்றது நீர்க்குடும்பத்தில் என்னிற் சிறந்த தாமரை உளது. நீர்ப்பூ குவிந்து மலர்ந்து சில நாள்கள் வாழ்வது. அதன் மேல் எல்லை ஏழுநாள்களாகும் நீர்ப்பூவாக நீர் தேங்கிய இடமெல்லாம் தோன்றுவேன். மலையிடத்துச் சுனையில் தோன்றிச் சுனைப்பூ' 12 பா: த க. முதல் தொகுதி. 154 குறி: பா. 32-96 158 புட் வி: 2-5 , * : *