உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 of =l துரத்துக்குடியில் இருந்து நாகபட்டினம் வரையான கடற்கரை பற்றிய விவரங்களைத் தருகிற கிறித்துவ சமயச் சான்ருேர் நியூ ஹோஃப், இந்த ஊரைப் பதினேழாம் நூற்ருண்டில், பெரியபட்டினம் என்றே குறிப்பிட்டுள்ளார். அப்பொழுது இந்தப் பகுதியில் வழக்கில் இருந்த இராமேஸ்வரப்பட்டினம், தொண்டிப்பட்டினம் ஆ கி ய கடற்றுறைகளே வி ட அளவிலும், சிறப்பிலும் பெரிது என்பதைக் குறிக்க இந்த ஊரின் பெயரில், பெரிய" எ ன் ற .ெ ச | ல் இணைந்து இருத்தல் வேண்டும். = பராக்கிரம பட்டினம், பவித்திர மாணிக்கப் பட்டின மாகி, பத்தன் என்ற வழக்குப்பெற்று இப்பொழுது, பெரியபட்டினம்ாகப் பெயர் பெற்றுள்ளது. இங்குள்ள மக்கள் இஸ்லாமியர்; சோனகர் என: அழைக்கப்படுவர். தென்னகத்திற்கு -յ a ւ நாட்டி லிருந்து வந்த மாலிக் இபுனுதீனர் தலைமையில் வந்த சமயப் பணிக் குழுவின் காலந்தொட்டு இங்கு இஸ்லாமியரது குடியேற்றம் ஏற்பட்டதாக கருதப் படுகிறது. ஆனல் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ம தினத்திலிருந்து வந்த புனித சுல்தான் சையது இபுராகீம் ஷகீது அவர்கள், இங்கு ஆட்சி செய்த விக்கிரம பாண்டியனை வென்று தங்களது ஆட்சியை நிலைநாட்டியதன் காரணமாகவும் அடுத்து அரபு நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்குமிடையில் நடை பெற்ற விறுவிறுப்பான குதிரை வியாபாரம் காரண மாகவும் இந்தப் பகுதியில் இஸ்லாமிய மக்களது பெருக்கம் மிகுந்திருத்தல் வேண்டும். இவர்கள் அனைவரும் கடல் வாணிகத்தில் தேர்ந்து இருந்தது போல, முத்துக்குளித்தல், சங்கு எடுத்தல்,