துறைமுகப் பட்டினங்கள் இந்த மாவட்டத்தின் கிழக்கு எல்லையாக அமைந் துள்ள முன்னுாறு கிலோ மீட்டர் தொலைவு கடற்கரை பாக் நீரிணைப்பையும் மன்னர் வளைகுடாவையும் தொட்டுக் கொண்டு இருக்கிறது. வடக்கே சுந்தர பாண்டியன் பட்டினத்திலிருந்து தெற்கே கன்னி ராஜபுரம் வரையிலாக இந்த நீண்ட கடற்கரை காலத்தின் பல நிகழ்ச்சிகளுக்கு நிலைக்களகை அமைந்து வரலாறு படைத்துள்ளது. இங்கு பல பட்டி னங்கள் எழுந்து சிறப்புற்றது போல, அவை நலிந்து மறைந்தும் இருக்கின்றன். இன்னும் சில பட்டினங்கள் பழமையின் பெருமையைப் பறைசாற்றும் சின்னமாக மேட்டும் இன்றுவரை இருந்து வருகின்றன. அவைகளில் தொண் டி, தேவிபட்டினம், பெரியபட்டினம், கீழக்கரை ஆகியவை குறிப்பிடத்தக்கன. அவை பற்றிய சில தகவல்கள் இங்கே கொடுக்கப்படுகின்றன. கீழக்கரை கிழக்குக்கரையில் உள்ள பட்டினம் என்ற பொருளில் தான் கீழக்கரை கடந்த முன்னுாறு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. வடகரை, தென்கரை, பெருங்கரை, மடக்கரை என்ற தமிழ்நாட்டு சிற்றுார் களைப் போன்று இந்த ஊரின் பெயரும் கரை என்ற விகுதியுடன் உள்ளது. இந்த ஊரின் உண்மையான பெயர் என்ன என்பதை அறுதியிட இயலவில்லை. என்ருலும் இங்குள்ள பதினேழாவது நூற்ருண்டு கல்வெட்டின்படி இந்த ஊர் நினைத்ததை முடித்த விஜயன் பட்டினம் என்றும், அறுந்தொகை மங்கலம் என்றும் பெயர் பெற்று இருந்ததாகத் தெரிகிறது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/72
Appearance