உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அணியும் அனைத்து வகைத் துணிகளையும் உற்பத்தி செய்து கொடுத்தார்கள். - அவர்களது தறியொன்றுக்கு நான்கு பணமும், துணி களே வாங்குகிற இடைத்தரகரும், வியாபாரியும் 1/8 பணமும் இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குத் தீர்வையாகச் .ெ ச லு த் தி வந்தனர். அத்துடன் பரமக்குடியில் உள்ள கறிகளில் 132 தறிகள் சேது மன்னர்களது 'ஆர்டர்களை' நிறைவேற்றும் ஒப்பந்தத் தறிகளாக இருந்தன. இவ்வாறு உற்பத்தி செய்யப் பட்ட து னி க ளை பரங்கிப்பேட்டை, புதுச்சேரி கல்கத்தா போன்ற இடங்களுக்கு சேதுபதி மன்னர்கள் அனுப்பிவைத்து நல்ல ஊதியம் பெற்றுவந்ததை ஆங்கிலகிழக்கிந்தியக் கம்பெனியார் மிகுந்த பொரு மையுடன் கவனித்து வந்ததாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. o கடந்த இருநூறு ஆண்டுகளில், தமிழகத்தில் கைத்தறி துணி உற்பத்தியில் சிறந்து விளங்கிவரும் குறிப்பிட்ட ஒரு சில மையங்களில் ஒன்ருக பரமக்குடி திகழ்ந்து வருகிறது. இங்கு நிலையாகத் தங்கிவிட்ட பட்டுநூல் காரர்களது உழைப்பும் உத்வேகமுந்தான் இவற் றிற்குக் காரணம் என்ருல் மிகையில்லை. - பரமக்குடியில் தற்போது 7300 தறி க ள் உள்ளன. அவற்றில் 2000 பனரஸ் தறிகளும், 150 அசல் பட்டுத் தறிகளும் போக எஞ்சியவை பருத்தி மற்றும் பம்பர் ரகத்தறிகளாகும். பட்டுத்தறிக்கென்றே தனியாக ஒரு சொஸைட்டி உள்ளது. சொந்தத்தில் தறி இல் லாதவர்களுக்கென "இன்டஸ்டிரியல் சொஸைட்டி, ஒன்றை அரசு அமைத்துக்கொடுத்துள்ளது. ஆண்டுக்கு