உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19.5 _ விடுதலை செய்து கொடுக்குமாறு கேட்டார். அந்தப் பாளையக்காரரும் அவ்விதமே செய்தார் என அந்தப் பகுதியில் சம்யப்பணியில் ஈடுபட்ட கிறித்துவப் ப்ெரியாரது கி. பி. 1663-ஆம் ஆண்டுக் குறிப்பு களில் காணப்படுகிறது. நமது மாவட்டத்தின் இருண்ட கால வரலாற்றின் இரு ஏடுகள் என இவற்றைக் கொள்ளலாம். C. திக்குளித்த காரிகைகள் தனது அன்பிற்குரிய தெய்வமாகப் போற்றப்பட்ட கணவன் தங்களை விட்டு இறந்த பிறகு மேலும் கைம்மைக் கோலத்துடன் வாழ விரும்பாத பூதப் பாண்டியன் தேவியார் தீப்புகத்துணிந்ததை சங்கப் பாட்டு சொல்கிறது. ஆனல் தமிழ் சமுதாயத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் எங்கோ நிகழ்ந்த ஒருநிகழ்ச்சி யாகத்தான் தோன்றியது. ஆனால் இத்தகைய கற்புடைப் பெண்டிர்கள் தமிழ கத்தில் பல ஊர்களில் இறந்த கணவனுடன் தீப் புகுந்த இடங்கள் 'தீப் புரஞ்சிக் காணி என்றும்’ 'எரிச்சி நாச்சியார் கோவில்” என்றும் சுட்டப்பட்டு வருகின்றன. இத்தகைய இரண்டு சிறு வழிபாட்டு இடங்கள் இன்றும் இராமேஸ்வரம், இராஜபாளையம் வட்டங்களில் உள்ளன. அவை பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனல் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களது வர்ல்ாற்றில் இத்தகைய இரண்டு நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.