உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147

-♔അ

3. வைசியர் இந்து சமயத்தில் இரண்டாவது நிலையில் உள்ள இந்த மக்கள், இந்த மாவட்டத்தில் இராமநாதபுரம்: இராமேஸ்வரம் வட்டங்களில் மட்டும் உள்ளனர் . இவர்கள், இன்றைய ஆந்திர மாநிலத்தினின்றும் பல நூற்ருண்டுகளுக்கு முன்னர் இங்கு குடியேறியவர்கள் என்ருலும், அவர்களது நடை, உடை, பாவனைகள் தமிழ்ச் சமுதாயத்தின் சூழலில் முற்றிலும் மாற்றம் பெற்றுள்ளன. ஆனல் அவர்களது பேசும்மொழிமட்டும் தெலுங்காக இருந்து வருகிறது. வைதிக இந்து சமுதாயத்தைப் பின்பற்றும் இவர்கள் சைவ, வைணவ நெறிகளைக் கடைப்பிடித்தாலும், சக்தி வழிபாட்டில் மிகுதியாக ஈடுபட்டு உள்ளனர். சக்திபை கன்னித் தெய்வமாக வாசவி என்றும், கன்னிகா பரமேஸ்வரி என்று வழங்கி வழிபட்டு வருகின்றனர். ஏனைய செட்டி மக்களைப் போன்று இவர்களும் வாணிபத்தை குறிப்பாக பலசரக்கு வாணிபத்தைத் தங்களது வாழ்க்கையாக மேற் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்களில், சிறந்து விளங்கியவரும் நாகூரை இருப்பி டமாகக் கொண்டிருந்தவருமான தனவணிகர் ஒருவர் கி. பி. 1434 இல் இராமேஸ்வரம் திருக்கோயிலின் மேற்கோபுர அமைப்பிலும், ஆலயத்திருமதில்களை நிர் மாணிப்பதிலும் பெரும்பங்கு கொண்டதாகத் தெரிய வருகிறது. இத்தகைய திருப்பணியினை இராமநாதபுரம் கோதண்டராம சுவாமி ஆலயத்திலும், இந்தக் சமூ கத்தைச் சேர்ந்த சென்னை தம்புசெட்டி கி. பி. 171520 இல் நிறைவேற்றியதாகத் தெரிகிறது. மற்றும் இந்த நூற்ருண்டில் இந்தச் சமூகத்தினர் இராமநாத புரம் பகுதியில் சிறப்புடன் இருந்ததை சேதுபதி மன்