64 இருமம்
64 இருமம் (64bit) / 64 பிட் என்பது கணினி கட்டுமானத்தின் வரையறைப்படி, கணனியின் மின்னணுப் பாகமான செயலியின் திறனையும், இயல்பையும் குறிக்கிறது. அச்செயலியின் தரவுப்பாதையின் அகலத்தை, இது தெரிவிக்கிறது. 64 இலக்க இருமங்களை அடிப்படையாகக் கொண்டு, நினைவகங்களையும், தரவுகளையும் கொண்டுள்ள நுண்செயலிகளையும், நுண்கணினியும் இவ்வகையான கட்டுமானத்தில் இயங்கி947வருகின்றவை, 64-இருமம் கணினி எனவும், அதற்கு பயன்படுத்தப்படும் மென்பொருட்களை, 64 - இரும மென்பொருட்கள் எனவும் அழைப்பார்கள். ஒரு கணினியை, நமது இலக்கிற்கு, பயன்பாட்டிற்கு தேர்ந்தெடுக்கும் போதே, அது எத்தகையது என்பதை நாம் அறிந்து கொள்ளல் அவசியம் ஆகும். இந்நோக்கில், கணினி விளையாட்டுகள், நிகழ்படத்தொகுப்பு போன்றவற்றிற்கு, பெரும்பாலும், 64 இரும வன்பொருட்களும், மென்பொருட்களும் சிறந்தவையாகத் திகழ்கின்றன. உரைக்கோப்பு போன்ற எளிய மேலாண்மைக்கு, 32 இரும கணினிகளே போதுமானது.
கண்டறிதல்
[தொகு]ஒரு கணினி நன்��ு செயற்பட அதன் வன்பொருள், அந்த வன்பொருளுக்கு ஏற்ற சரியான இருமம் கொண்ட மென்பொருள் என்ற இரண்டுமே மிகவும் முக்கியமானது ஆகும். இவை (32 இருமம்/64 இருமம்) பற்றிய குறிப்புகளை, நமது கணினியிலேயும், அதன் மென்பொருளிலேயும், நாம் அறிந்து கொள்ளும் வகையில், அதனுள்ளேயேத் தெரியப்படுத்தப்பட்டுள்ளன. இவை குறித்த விவரங்களை, உரிய இணையப்பக்கத்திலும் காண இயலும்.[1] 64 இரும வகை வன்பொருள் திறன் கொண்ட கணினியில், 32 இரும வகை இயக்குதளத்தை நிறுவிப் பயன்படுத்தலாம். ஆனால், 32 இரும வகை வன்பொருள் திறன் கொண்ட, ஒரு கணினியில் 64 இரும வகை இயக்குதளத்தை நிறுவி பயன்படுத்த முடியாது. ஒரு லினக்சு வகை இயக்குதளத்தை உருவாக்கும் போதே, இருவகையான இரும வகைக்கும் ஏற்றவகையில், தனித்தனியே உருவாக்கித் தரப்படுகிறது. நமது வன்பொருள் திறனுக்கு ஏற்ப, 32 இருமம் / 64 இருமம் என, இதில் ஏதாவது ஒன்றினைத் தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கணினிக் கட்டமைப்பில், 64 இருமக் கணிப்பு (64-bit computing) என்பது 64 இருமங்கள் அல்லது எட்டு எண்மங்கள் அகலம் உள்ள செயலிகளையும் தரவுத்தட அகலங்களையும் நினைவக முகவரியையும் கொண்ட கணினிக் கட்டமைப்பு ஆகும். மையச் செயலகங்களுக்கும் எண்ணியல் ஏரண அலகுகளுக்குமான 64 இருமக் கட்டமைப்பு என்பதில் செயலிப் பதிவகங்கள், முகவரிப் பெருந்தடங்கள், தரவுப் பெருந்தடங்கள் ஆகியவையும் அதே அளவைக் கொண்டிருக்கும். மென்பொருள் கண்ணோட்டத்தின்படி, 64 இருமக் கணிப்பு என்பது மெய்நிகர் நினைவக முகவரிகள் 64 இரும எந்திரக் குறிமுறையைப் பயன்படுத்தும் கணிப்புமுறையைக் குறிக்கிறது. என்றாலும், அனைத்து 64 இரும கட்டளைத் தொகுப்புகள் முழுமையான 64 இரும மெய்நிகர் நினைவக முகவரிகளை ஏற்பதில்லை; x86-64, ARMv8 ஆகியவை எடுத்துகாட்டாக 48 இருமங்கள் உள்ள மெய்நிகர் முகவரிகளையே ஏற்கின்றன; மெய்நிகர் முகவரியின் எஞ்சிய 16 இருமங்கள் அனைத்தும் 0 களாகவோ அல்லது அனைத்தும் 1 களாகவோ அமைகின்றன; பல 64 இருமக் கட்டளைத் தொகுப்புகள் 64 இருமங்களை விட குறைந்த புறநிலை நினைவக முகவரிகளையே ஏற்கின்றன.
64 இருமம் எனும் சொல், வரன்முறையாக 64 இருமச் செயலிகளைப் பயன்படுத்தும் கணினிகளின் தலைமுறையையே குறிப்பிடும். 64 இருமங்கள் என்பது கணினித் தரவு வகையின் சொல் அளவாகும். இது சிலவகைக் கணினிக் கட்டமைப்பையும் வழித்தடங்களையும் நினைவகத்தையும் மையச் செயலிகளையும் மேலும் இதன் விரிவாக, இவற்றில் இயங்கும் மென்பொருள்களையும் வரையறுக்கிறது. 64 இரும மையச் செயலிகள் 1970 களில் இருந்தே மீக்கணினிகளில் பயன்பட்டு வருகின்றன (Cray-1, 1975), வரம்புள கட்டளைத் தொகுப்புக் கணிப்பு (RISC) சார்ந்த பணிநிலையங்கள், பொதுத்தரவுக் கணினிகள் ஆகியவற்றில் 1990 களின் தொடக்கத்தில் இருந்தே, குறிப்பாக MIPS தொழில்நுட்பங்கள் அமைப்பின் R4000, R8000, R10000 ஆகியவற்றிலும் Digital Equipment Corporation DEC Alpha, Sun Microsystems இன் UltraSPARC, IBM RS64, POWER3 ஆகியவற்றிலும் பின்னர், IBM POWER நுண்செயலிகளிலும் பயன்பட்டு வருகின்றன. 64 இரும மையச் செயலகங்கள் 2003 இல் (முந்தைய 32 இருமத்) தனியாள் கணினிச் சந்தையில் x86-64 வகைச் செயலிகளாகவும் PowerPC 970அல்லது PowerPC G5 வகையாகவும் அறிமுகப்படுத்தப்பட்டன; மேலும் 2012 இல்[2] ARM கட்டமைப்பிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. இது 2013 செப்டம்பர் 20 இல் விற்பனைக்கு வந்த துடிக்கணினிகளிலும் குளிகைக் கணினிகளிலும் iPhone 5S இலும் பயன்படலானது. இவை ARMv8-A, Apple A7, ஒற்றைச் சில்லு அமைப்பு (SoC) ஆகியன வழியாக மின்சாரம் பெறுகின்றன.
ஒரு 64 இருமப் பதிவகம் 264 ( 18 குவாண்டில்லியனை விடக் கூடுதலான அல்லது 1.8×1019) வேறுபட்ட மதிப்புகளையும் தேக்க வல்லன. 64 இருமங்களில் தேக்க்கவல்ல முழுவெண் மதிப்புகளின் நெடுக்கம் முழுவெண் குறிப்பிட பயன்படும் முறையைச் சார்ந்துள்ளது. பொது வழக்கில் பெரிதும் பயன்படும் இரண்டு குறிப்பீட்டு முறைகளில், ஒன்றில் இந்நெடுக்கம் 0 முதல் 18,446,744,073,709,551,615 (264 − 1) வரையிலும் (குறியிலாத இரும எண்களுக்கான முறை) மற்ரொன்றில் −9,223,372,036,854,775,808 (−263) முதலாக 9,223,372,036,854,775,807 (263 − 1) வரையிலும் (ஈருறுப்பு குறிப்பீட்டு முறை) அமைகிறது. எனவே, 64 இரும நினைவக முகவரிகள் கொண்ட செயலி நேரடியாக 264 பைட்டுகள் (இது 16 மீபைட்டுகள் (exabytes) அளவு நினைவக முகவரி அணுகலுக்குச் சமம் ஆகும்) நினைவகத்தை அணுகலாம்.
ஒரு 64 இருமக் கணினிக் கட்டமைப்பு பொதுவாக 64 இரும அகல முழுவெண், முகவரி செயலிப் பதிவகங்களைக் கொண்டுள்ளன. இவை 64 இருமத் தரவு வகைமைகளையும் முகவரிகளையும் ஏற்கின்றன. என்றாலும், மையச் செயலி வேறுபட்ட பதிவகங்கள் அமைந்த வெளித் தரவுப் பெருந்தடங்களை அல்லது முகவரிப் பெருந்தடங்களைப் பெற்றிருக்கலாம் . நடைமுறையில் மிகப் பெரிய 32 இருமப் பெண்டியம் 64 இருமப் பெருந்தடத்தைப் பெற்றுள்ளது[3]). இந்தச் சொல் தாழ்மட்ட தரவு வகைமைகளையும் அதாவது 64 இரும தெப்ப்ப் புள்ளி எண்களையும் குறிப்பிடலாம்.
கட்டமைப்பு விளைவுகள்
[தொகு]செயலியின் பதிவகங்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன, அவை முழுவெண் வகை, தெப்பப் புள்ளிவகை, ஒற்றைக் கட்டளை, பன்முகத் தரவுவகை (SIMD), கட்டுப்பாட்டுவகை, முகவரிக்கும் எண்களுக்குமான சிறப்புவகைப் பதிவகங்கள் என்பனவாகும். பின்னர் கூறிய சிறப்புப் பதிவகங்கள் பலவகை பயன்களையும் பெயர்களையும் கொண்டுள்ளன. இவை முகவரி, சுட்டி, அல்லது அடிப்படைப் பதிவகங்கள் என வழங்கப்படலாம். என்றாலும், அண்மை வடிவமைப்புகளில், இந்தச் செயல்கள் அடிக்கடி மிகப் பொது நொக்க்க முழுவெண் பதிவகங்களால் நிகழ்த்தப்படுகின்றன. பெரும்பாலான செயலிகளில், முழுவெண், முகவரி பதிவகங்கள் மட்டுமே நினைவகத் தரவுகளை அழைக்க பயன்படுகின்றன; மற்ரவகைப் பதிவகங்களால் இது முடியாது. எனவே, இவ்வகைப் பதிவகங்களின் அளவு இயல்பாக நேரடியாக அழைக்கமுடிந்த நினைவக அளவை, அகன்ற தெப்பப் புள்ளி பதிவகங்கள் இருந்தாலும் வரம்புபடுத்துகின்றன.
பெரும்பாலான உயர்திறமுள்ள 32 இரும, 64 இருமச் செயலிகளும் ( இதற்குச் சில குறிப்பிட தக்க விதிவிலக்குகளாக பழைய அல்லது உட்பொதிந்த ARM கட்டமைப்பு (ARM), 32 இரும MIPS கட்டமைப்பு (MIPS) மையச் செயலிகள் அமைகின்றன.) ஒருங்கிணைந்த தெப்பப் புள்ளி வன்கலங்களையே பெற்றுள்ளன; இவை அடிக்கடி, ஆனால் எப்போதும் அல்ல, 64 இருமத் தரவு அலகுகளைச் சார்ந்துள்ளன. எடுத்துகாட்டாக, x86/x87 கட்டமைப்பு 64 இரும, 32 இருமத் தெப்பப் புள்ளிமதிப்புகளை ஏற்றுத் தேக்கும் கட்டளைகளை நினைவகத்தில் பெற்றிருந்தாலும், இவற்றின் அகத் தெப்பப் புள்ளி தரவும் பதிவகமும் 80 இரும அகலப் படிவத்தில் அமைந்துள்ளன; ஆனால், பொதுநோக்கப் பதிவகங்களின் அளவோ 32 இரும அகலங் கொண்டதே. மாறாக, 64 இரும DEC ஆல்பா குடும்பம் 64 இருமத் தரவு, பதிவகப் படிவத்தையும் 64 இரும முழுவெண் பதிவகங்களையும் பயன்படுத்துகின்றன.
வரலாறு
[தொகு]செயலிகளின் குறைபாடுகளும் வரம்புகளும்
[தொகு]64 இருமத் தரவுகளின் காலநிரல்
[தொகு]64 இரும முகவரியின் காலநிரல்
[தொகு]64 இரும இயக்க அமைப்புகளின் காலநிரல்
[தொகு]64 இருமப் பயன்பாடுகள்
[தொகு]32-இருமமும் 64-இருமமும் ஒப்பீடு
[தொகு]மேம்பாடும் குறைபாடும்
[தொகு]மென்பொருள் கிடைப்புதிறம்
[தொகு]64-இருமத் தரவுப் படிமங்கள்
[தொகு]தரவுப் படிமம் | சிறு (முழுவெண்) | முழுவெண் | நீண்ட (முழுவெண்) | மிகநீண்ட | காட்டிகள், அளவு_t |
பதக்கூறு இயக்க அமைப்புகள் |
---|---|---|---|---|---|---|
LLP64, IL32P64 |
16 | 32 | 32 | 64 | 64 | Microsoft Windows (x86-64 and IA-64) ( Visual C++; MinGW பயன்படுத்துவன) |
LP64, I32LP64 |
16 | 32 | 64 | 64 | 64 | பெரும்பாலும் Unix, Unix-போன்ற அமைப்புகள், எ.கா., Solaris, Linux, BSD, macOS. Cygwin பயன்படுத்தும் Windows ; z/OS |
ILP64 | 16 | 64 | 64 | 64 | 64 | HAL கணினி அமைப்புகள், சொலாரிசு முதல் SPARC64 வரை |
SILP64 | 64 | 64 | 64 | 64 | 64 | செவ்வியல் UNICOS[4] (versus UNICOS/mp, etc.) |
நடப்பு 64 இருமக் கட்டமைப்புகள்
[தொகு]செயலிகள் கிடைக்கும் நடப்பு (2017 திசம்பர் நிலவரப்படி) 64-இருமக் கட்டமைப்புகள் பின்வருமாறு:
- இண்டெல்லின் x86 கட்டமைப்புக்காக Advanced Micro Devices நிறுவனம் உருவாக்கிய 64 இருமக் கட்டமைப்பு விரிவாக்கம் (பின்னர் இண்டெல் இதற்கு உரமம் வழங்கியது); இவை பொதுவாக, x86-64, AMD64, x64 என வழங்குகின்றன.
- AMDயின் AMD64 விரிவாக்கங்கள் ( Athlon 64, Opteron, Sempron, Turion 64, Phenom (செயலி), Athlon II, Phenom II, AMD FX நுண்செயலிகள், Ryzen, Epyc) ஆகிய செயலிகளில் பயன்படுவது)
- இன்டெல்லின் Intel 64 விரிவாக்கங்கள், ( Intel Core 2-i3-i5-i7-i9, சில Intel Atom, புதிய Celeron, Pentium, Xeon ஆகிய செயலிகளில் பயன்படுவது)
- இன்டெல்லின் K1OM கட்டமைப்பு, CMOV, MMX, SSE ஆகிய கட்டளைகள் இல்லாமல் திருத்திய Intel 64 வடிவம், (Xeon Phi இணைசெயலிகள், x86-64 நிரல்களுடன் பொருந்தாத இரும அமைப்புகளில் பயன்படுவது)
- VIA Technologies அமைப்பின் 64-இரும விரிவாக்கங்கள், (VIA மீநுண் செயலிகளில் பயன்படுவது)
- IBM இன் Power கட்டமைப்பு:
- IBM இன் POWER4, POWER5, POWER6, POWER7, POWER8, POWER9, IBM A2 ஆகிய செயலிகள்
- SPARC V9 கட்டமைப்பு:
- ஆரக்கிளின் M8, S7 செயலிகள்
- பியூயித்சுவின் SPARC64 XII, SPARC64 XIfx செயலிகள்
- IBM z/கட்டமைப்பு, 64-bit version of the ESA/390 கட்டமைப்பின் 64 இரும வகைக் கட்டமைப்பு ( IBM இன் IBM System z இலும் IBM முதன்மைச் சட்டகத்திலும் பயன்படுவது:
- IBM z13 (நுண்செயலி), IBM z14 (நுண்செயலி)
- இட்டாச்சியின் AP8000E
- HP-இண்டெல்லின் IA-64 கட்டமைப்பு:
- இண்டெல்லின் இட்டானியம் செயலிகள்
- MIPS தொழில்நுட்பங்கள் அமைப்பின் MIPS64 கட்டமைப்பு
- ARM Holdings அமைப்பின் AArch64 கட்டமைப்பு
- எல்பிரசு கட்டமைப்பு:
- எல்பிரசு-8S
- NEC SX கட்டமைப்பு
- SX-அவுரோரா TSUBASA
அனைத்து 64 இருமக் கட்டமைப்புகளும் 32 இருமக் கட்டமைப்புகளின் கட்டமைப்பில் இருந்தே கொணரப்பட்டவை ஆகும். எனவே இவை 32 இருமக் கட்டமைப்புகளிலும் செயல்பாட்டுக் குந்தகமின்றி இயங்கவல்லன.[சான்று தேவை] This kind of support is commonly called bi-arch support or more generally multi-arch support.
எடுத்துக்காட்டுகள்
[தொகு]கீழ்கண்ட இணைப்புகளின் வழியே பல்வேறு வகை லினக்சு வகை இயக்குதளங்களின், 64 இரும இயக்குதளத்தை, கட்டணமின்றியும், கட்டற்ற உரிமத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும் போது, அந்தந்த பக்கங்களில் உள்ள பிட்டொரென்ட் வழியைத் தேரந்தெடுத்தல் மிகச்சிறப்பானது. ஏனெனில், பதிவிறக்கத்தை நிறுத்தி (pause), நமது தரவுப் பயன்பாட்டிற்கு ஏற்ப, சிறிது சிறிதாகச் செய்து கொள்ளலாம்.
- டெபியன் இயக்குதளம்
- உபுண்டு இயக்குதளம் வகைகள்
- உபுண்டு வகை இயக்குதளங்கள்
- உபுண்டுவை அடிப்படையாக் கொண்டு, உபுண்டு வழித் தோன்றி இயக்குதளங்கள்
- ஃபெடோரா இயக்குதளத்தின் 64 இருமவகை பதிவிறக்கப் பக்கம்
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- This article is based on material taken from the Free On-line Dictionary of Computing prior to 1 November 2008 and incorporated under the "relicensing" terms of the GFDL, version 1.3 or later.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வின்டோசு 7 இயக்குதளத்தில் அறியும் முறை
- ↑ ARM Holdings. "ARM Launches Cortex-A50 Series, the World’s Most Energy-Efficient 64-bit Processors". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2012-10-31.
- ↑ Pentium Processor User's Manual Volume 1: Pentium Processor Data Book (PDF). இன்டெல். 1993.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Cray C/C++ Reference Manual". August 1998. Table 9-1. Cray Research systems data type mapping. Archived from the original on அக்டோபர் 16, 2013. பார்க்கப்பட்ட நாள் October 15, 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- 64-bit Transition Guide, Mac Developer Library
- Andrey Karpov. A Collection of Examples of 64-bit Errors in Real Programs
- Mark J. Kilgard. Is your X code ready for 64-bit? at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது சூன் 3, 2001)
- Lessons on development of 64-bit C/C++ applications
- 64-Bit Programming Models: Why LP64?
- AMD64 (EM64T) architecture