உள்ளடக்கத்துக்குச் செல்

2016 தமிழருக்கெதிரான கருநாடக கலவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2016 தமிழருக்கெதிரான கருநாடக கலவரம் என்பது காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்தான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து கருநாடகத்தில் தமிழர் உடைமைகளுக்கும் உயிருக்கும் எதிராக 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடந்த கலவரத்தைக் குறிக்கும்.[1]

பின்னணி

[தொகு]

கருநாடகத்தை காவிரியில் நீர் திறந்து விடச்சொல்லி தமிழ் நாடு தொடுத்த வழக்கில், 05 செப்டம்பர் 2016 அன்று உச்ச நீதிமன்றம் 10 நாட்களுக்கு 15,000 கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று ஆணையிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழருக்கு எதிராக கலவரம் மூண்டது.[2] மேல்முறையீட்டில் கலவரம் காரணமாக விநாடிக்கு 15,000 என்பதற்கு பதிலாக 12,000 கன அடி நீரை திறக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால் செப்டம்பர் 20 வரை அந்த அளவு நீரைத் தரவேண்டும் என்றது.[3] உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பு 600 சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என்று கருநாடக உள்துறை அமைச்சர் பரமேசுவர் ராவ் கூறினார்.[4] சட்டத்தை மக்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கருநாடக உள்துறை அமைச்சர் பரமேசுவர் ராவ் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.[5]

வன்முறை

[தொகு]

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த கே. பி. என் டிராவல்சு பேருந்துகள் 30 தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.[6][7] தமிழகத்துக்கு செப்டம்பர் 20-ந் தேதி வரை காவிரி நீரை திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு வெளியான உடனேயே பெங்களூரு மாண்டியா மைசூரு உள்ளிட்ட நகரங்களில் வன்முறை வெடித்தது.[8]

பெங்களூருவில் செப்டம்பர் 12 அன்று மாலை பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு 14 இரவு வரை நீட்டிக்கப்பட்டது.[9]

கருநாடகத்தில் காவிரி நீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 9 அன்று கடையடைப்பும் மறியலும் நடந்தது.[10] மறியல் நடந்த ஒன்பதாம் தேதியிலிருந்து பதினாறாம் தேதி வரை இரு மாநில பேருந்துகளும் அடுத்த மாநிலத்துக்குள் நுழையவில்லை.[11]

செப்டம்பர் 12 அன்று மறியலுக்கு தான் அழைப்பு விடுக்கவில்லை என்றும் 15 அன்று ரயில் மறியலுக்கே தான் அழைப்பு விடுத்துள்ளதாகவும் வாட்டாள் நாகராசு கூறினார்.[12] ரயில் மறியல் போராட்டத்துக்கு 15 செப்டம்பர் அன்று சில கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இதனால் ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை.[13] காவிரி நீரை திறந்து விட சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய முழுவடைப்பு நடந்தது , வட கருநாடகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை[14] சனதா தளம் (மதசார்பற்ற) 8-இந்தேதியில் இருந்து காவிரி தீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறது.ஏமாவதி அணையில் அதிக நீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது, அவ்வணையிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால்14-இந் தேதி நடக்கவிருந்த முழு அடைப்பை நிறுத்திவிட்டது [15]

மறியலின் போது பெங்களூருவில் உமேசு என்ற இளைஞர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார் [16] செப்டம்பர் 12 மறியல் அன்று கலவரம் நடைபெறும் என்ற பீதி காரணமாக, பெங்களூருவில் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனஙக்ள் மூடப்பட்டிருந்தன. திரை அரங்குகளில் படம் திரையிடப்படவில்லை., பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருந்தன, நகர பேருந்துகள் குறைந்த அளவில் மட்டுமே இயங்கின. மாலை மெல்ல பெங்களூரு இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியது, நகர பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்கப்பட தொடங்கியுள்ளன. பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டன [17] . உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் நீர் திறப்பு தொடரும் என கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கூறினார்.[18]

வன்முறைக்கு எதிரான தமிழகப் போராட்டங்கள்

[தொகு]

செப்டம்பர் 16 அன்று தமிழகத்தில் கருநாடகத்தில் தமிழர் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டதற்கும் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தும் காவிரி நீர் வேண்டியும் பல்வேறு விவசாய அமைப்புகளாலும் வணிகர் அமைப்புகளாலும் முழு அடைப்பு நடந்தது. ஆளும் அதிமுக மற்றும் அதன் சார்பு தொழிற்சங்கங்கள் தவிர எல்லா அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன. .[19] நாம் தமிழர் கட்சியின் விக்னேசு என்பவர் தீக்குளித்ததினால் 16 செப்டம்பர் அன்று மருத்துவமனையில் இறந்தார்.[20]

காவிரி நீர் திறப்பு தொடர்பாக கருநாடக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் செப்டம்பர் 20ஆம் தேதி வரை தினமும் 12,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. இது எதிர்பாராத தீர்ப்பு என்றும், மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கோரிக்கை விடுத்துள்ளார்.[21]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "IT sector thrown off gear in Bengaluru". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 15, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Protests erupt in Mandya over Supreme Court's direction". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 15, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "SC slams Karnataka, but modifies order on Cauvery water release to TN". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 15, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Karnataka government released 600 hooligans before the Bangaluru riots: KPCC General Secretory agreed at Times now's newshour debate (18-20நிமிடம்)". கொரியா தமிழ் பாரம். Archived from the original on 2016-09-18. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 17, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "சட்டத்தை மக்கள் கையில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்". தமிழ் ஒன் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 17, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "Karnataka erupts in anger over SC order on Cauvery". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 15, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "அழைத்து 2 மணி நேரம் கழித்து அசைந்து வந்த போலீஸ்.. ரூ.35 கோடி பஸ்கள் நாசம்.. கேபிஎன் மேனேஜர் குமுறல்". ஒன் இந்தியா - தமிழ். பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 17, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "மாண்டியாவில் தொடரும் போராட்டம்- பேருந்துகள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து நிறுத்தம்!! # cauvery". தமிழ் ஒன் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 17, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "பெங்களூருவில் 144 தடை உத்தரவு இன்று இரவு வரை நீட்டிப்பு- ஊரடங்கு உத்தரவும் நீட்டிப்பு". தமிழ் ஒன் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 17, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. "Karnataka hit by bandh over Cauvery dispute, schools, offices shut". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 17, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. "Eight days of disrupted traffic between State and T.N." இந்து. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 17, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. "பந்துக்கு நான் அழைப்பு விடுக்கவில்லை.. பல்டி அடித்த வாட்டாள் நாகராஜ்! #bengaluru". தமிழ் ஒன் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 17, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. "Train services normal in Mysuru, fewer passengers". இந்து. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 16, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  14. "Karnataka bandh: As it happened". இந்து. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 16, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  15. "JD(S) withdraws dharna over Hemavati water release". இந்து. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 16, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  16. "One killed in riots in Bengaluru over Cauvery dispute". ரியூட்டர். பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 17, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  17. "காலையிலிருந்து பந்த் சூழல்.. மாலைக்கு மேல் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிய பெங்களூர்". தமிழ் ஒன் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 17, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  18. "உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் நீர் திறப்பு தொடரும்.. கேபினட் கூட்டத்தில் முடிவு: சித்தராமையா". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 17, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  19. "As it happened: Tamil Nadu bandh passes off peacefully". இந்து. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 16, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  20. "Naam Tamilar cadre Vignesh dies after self-immolation". இந்து. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 16, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  21. "எதிர்பாராத தீர்ப்பு இது... மக்கள் அமைதி காக்க வேண்டும்: சதானந்த கவுடா". தமிழ் ஒன் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 17, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)