2012 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா
இந்தியா ஜூலை 27 முதல் 12 ஆகஸ்ட் 2012 வரை, லண்டன், ஐக்கிய ராஜ்யத்தில் நடந்த 2012 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது. இந்திய ஒலிம்பிக் சங்கம், ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் நாட்டின் மிக பெரிய குழுவை அனுப்பியது. 83 விளையாட்டு வீரர்கள், 60 ஆண்கள், 23 பெண்கள், 13 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். குழு அடிப்படையிலான விளையாட்டுகளில், ஆண்கள் ஹாக்கியில் மட்டுமே, இந்தியாவின் பிரதிநிதித்துவம் இருந்தது. சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு ஊக்கமருந்து விவகாரத்தில், வீரர்களுக்கு விதித்த இரண்டு வருட இடைநீக்கத்திற்கு பிறகு இந்தியா ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் பங்கேற்றது.[1][2][3]
பெய்ஜிங் ஒலிம்பிக்கில், தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா உட்பட பதக்கம் வென்ற பல வீரர்கள், இந்திய அணியில் இடம்பெற்றனர். மல்யுத்த வீரர் மற்றும் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சுஷில் குமார், ஆண்கள் ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் வெள்ளி வென்று மற்றொரு பதக்கம் பெற்றார். இந்திய ஒலிம்பிக் சங்கம் அவருக்கு தொடக்க விழாவில், நாட்டின் கொடியை தாங்கி செல்லும் பெருமைமையை வழங்கியது.
இந்த 6 பதக்கங்கள் (2 வெள்ளி, 4 வெண்கலம்) வெற்றி, பதக்க தரவரிசை அடிப்படையில் இந்தியாவின் மிக வெற்றிகரமான ஒலிம்பிக்காக இருந்தது. துப்பாக்கி சுடுதலிலும், மல்யுத்தத்திலும் இந்தியா, தலா இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றது. பெண் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு வரலாற்று மைல்கல்லாக இந்த ஒலிம்பிக் போட்டி அமைந்தது. இறகுப்பந்தாட்டம் விளையாட்டு வீரர் மற்றும் உலக ஜூனியர் சாம்பியன் சாய்னா நேவால் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் ஆனார். குத்துச்சண்டையில் மேரி கோம், அரை இறுதி போட்டியில் கிரேட் பிரிட்டனின் நிக்கோல் ஆடம்ஸிடம் தோற்றார், ஆனால் வெண்கலப் பதக்கம் வென்றார்.
பதக்கம் வென்றவர்
[தொகு]விளையாட்டின்படி
விளையாட்டு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|
குறி பார்த்துச் சுடுதல் | 0 | 1 | 1 | 2 |
மற்போர் | 0 | 1 | 1 | 2 |
இறகுப்பந்தாட்டம் | 0 | 0 | 1 | 1 |
குத்துச்சண்டை | 0 | 0 | 1 | 1 |
மொத்தம் | 0 | 2 | 4 | 6 |
பதக்கம் | பெயர் | விளையாட்டு | போட்டி | தேதி | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வெள்ளி | விஜய் குமார் | குறி பார்த்துச் சுடுதல் | ஆண்கள் 25 மீ விரைவு கைத்துப்பாக்கி | 3 ஆகத்து | |||||
வெள்ளி | சுசீல் குமார் | மற்போர் | ஆண்கள் 66 கிலோ கட்டற்ற வகை | 12 ஆக
த்து|- |
வெண்கலம் | ககன் நரங்க் | குறி பார்த்துச் சுடுதல் | ஆண்கள் 10 மீ குறி பார்த்துச் சுடுதல் | 30 ஜூலை |
வெண்கலம் | சாய்னா நேவால் | இறகுப்பந்தாட்டம் | மகளிர் ஒற்றையர் | 4 ஆகத்து | |||||
வெண்கலம் | மேரி கோம் | குத்துச்சண்டை | பெண்கள் ஃப்ளை வெயிட் | 8 ஆகஸ்ட் | |||||
வெண்கலம் | யோகேசுவர் தத் | மற்போர் | ஆண்கள் 60கிலோ கட்டற்ற வகை | 11 ஆகஸ்ட் |
போட்டியாளர்கள்
[தொகு]விளையாட்டு | ஆண்கள் | பெண்கள் | மொத்தம் |
---|---|---|---|
வில்வித்தை | 3 | 3 | 6 |
தடகள விளையாட்டு | 8 | 6 | 14 |
இறகுப்பந்தாட்டம் | 2 | 3 | 5 |
குத்துச்சண்டை | 7 | 1 | 8 |
வளைதடிப் பந்தாட்டம் | 18 | 0 | 18 |
யுடோ | 0 | 1 | 1 |
துடுப்பு படகோட்டம் | 3 | 0 | 3 |
குறி பார்த்துச் சுடுதல் | 7 | 4 | 11 |
நீச்சற் போட்டி | 1 | 0 | 1 |
மேசைப்பந்தாட்டம் | 1 | 1 | 2 |
டென்னிசு | 5 | 2 | 7 |
பாரம் தூக்குதல் | 1 | 1 | 2 |
மற்போர் | 4 | 1 | 5 |
வில்வித்தை
[தொகு]லண்டன் ஒலிம்பிக்கில் ஆறு இந்திய வில்லாளர்கள்- 3 ஆண்கள்,3 பெண்கள் தகுதி பெற்றனர்.
ஆண்கள்
[தொகு]வீரர் | போட்டி | தகுதி சுற்று | 64 பேர் சுற்று | 32 பேர் சுற்று | 16 பேர் சுற்று | காலிறுதி | அரையிறுதி | இறுதி | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
புள்ளிகள் | தரவரிசை | எதிரணி புள்ளிகள் |
எதிரணி புள்ளிகள் |
எதிரணி புள்ளிகள் |
எதிரணி புள்ளிகள் |
எதிரணி புள்ளிகள் |
எதிரணி புள்ளிகள் |
தரவரிசை | ||
ஜயந்த தாலுக்தார் | ஒற்றையர் | 650 | 53 | வூக்கி (12) தோ 0–6 |
முன்னேறவில்லை | |||||
இராகுல் பானர்ஜீ | 655 | 46 | காண்டாக்சு (19) வெ 6–0 |
தாப்ராவோல்சுகி (14) தோ 3–7 |
முன்னேறவில்லை | |||||
தருண்தீப் இராய் | 664 | 31 | சுடீவன்சு (34) வெ 6–5 |
கிம் பி-எம் தோ 2–6 |
முன்னேறவில்லை | |||||
ஜயந்த தாலுக்தார் இராகுல் பானர்ஜீ தருண்தீப் இராய் |
குழ��� | 1969 | 12 | N/A | யப்பான் தோ 214 (27)–214 (29) |
முன்னேறவில்லை |
பெண்கள்
[தொகு]வீரர் | போட்டி | தகுதி சுற்று | 64 பேர் சுற்று | 32 பேர் சுற்று | 16 பேர் சுற்று | காலிறுதி | அரையிறுதி | இறுதி | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
புள்ளிகள் | தரவரிசை | எதிரணி புள்ளிகள் |
எதிரணி புள்ளிகள் |
எதிரணி புள்ளிகள் |
எதிரணி புள்ளிகள் |
எதிரணி புள்ளிகள் |
எதிரணி புள்ளிகள் |
தரவரிசை | ||
பாம்பேலா தேவி இலைசுராம் | ஒற்றையர் | 651 | 22 | சாரா(43) வெ 6–4 |
உரோமான் (11) தோ 2–6 |
முன்னேறவில்லை | ||||
தீபிகா குமாரி | 662 | 8 | ஆலிவர் தோ 2–6 |
முன்னேறவில்லை | ||||||
செக்ரோவோலு சுவூரோ | 625 | 50 | நிக்கோல்சு(15) தோ 5–6 |
முன்னேறவில்லை | ||||||
பாம்பேலா தேவி இலைசுராம் தீபிகா குமாரி செக்ரோவோலு சுவூரோ |
குழு | 1938 | 9 | N/A | டென்மார்க் (8) தோ 210–211 |
முன்னேறவில்லை |
தடகளம்
[தொகு]தடகள விளையாட்டுகளில் பதினான்கு இந்திய வீரர்கள் தகுதி பெற்றனர்.
ஆண்கள்
[தொகு]தடகளப் போட்டிகள்
வீரர் | போட்டி | இறுதி | |
---|---|---|---|
முடிவு | தரவரிசை | ||
பசந்த பகதூர் இரானா | 50 கிமீ நடை | 3:56:48 | 36 |
பல்ஜிந்தர் சிங் | 20 கிமீ நடை | 1:25:39 | 43 |
குர்மீத் சிங் | 1:23:34 | 33 | |
இர்பான் கொலொதம் தோடி | 1:20:21 | 10 | |
இராம் சிங் யாதவ் | மாரத்தான் | 2:30:06 | 78 |
களப் போட்டிகள்
வீரர் | போட்டி | தகுதி | இறுதி | ||
---|---|---|---|---|---|
தூரம் | தரவரிசை | தூரம் | தரவரிசை | ||
விகாசு கவுடா | வட்டு எறிதல் | 65.20 | 5 Q | 64.79 | 8 |
ஓம் பிரகாசு சிங் கரானா | குண்டு எறிதல் | 19.86 | 19 | முன்னேறவில்லை | |
ம. இரஞ்சித் | மும்முறை தாண்டுதல் | NM | 27 | முன்னேறவில்லை |
பெண்கள்
[தொகு]தடகளப் போட்டிகள்
வீரர் | போட்டி | தகுதி | அறையிறுதி | இறுதி | |||
---|---|---|---|---|---|---|---|
முடிவு | தரவரிசை | முடிவு | தரவரிசை | முடிவு | தரவரிசை | ||
டின்ட்டு லூக்கா | 800 மீ | 2:01.75 | 3 | 1:59.69 | 6 | முன்னேறவில்லை | |
சுதா சிங் | 3000 மீ ஸ்டீபில்சேஸ் | 9:48.86 | 13 | முன்னேறவில்லை |
களப் போட்டிகள்
வீரர் | போட்டி | தகுதி | இறுதி | ||
---|---|---|---|---|---|
தூரம் | தரவரிசை | தூரம் | தரவரிசை | ||
மயூக்கா ஜானி | மும்முறை தாண்டுதல் | 13.77 | 22 | முன்னேறவில்லை | |
சகானா குமாரி | உயரம் தாண்டுதல் | 1.80 | 29 | முன்னேறவில்லை | |
சீமா அண்டில் | வட்டு எறிதல் | 61.91 | 13 | முன்னேறவில்லை | |
கிருஷ்ண பூனியா | வட்டு எறிதல் | 63.54 | 8 | 63.62 | 7 |
இறகுப்பந்தாட்டம்
[தொகு]5 இந்திய இறகுப்பந்தாட்ட வீரர்கள் லண்டன் ஒலிம்பிக்கில் தகுதி பெற்றனர்.
வீரர் | போட்டி | குழு சுற்று | தகுதி சுற்று | காலிறுதி | அரையிறுதி | இறுதி | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
எதிரணி புள்ளிகள் |
எதிரணி புள்ளிகள் |
எதிரணி புள்ளிகள் |
தரவரிசை | எதிரணி புள்ளிகள் |
எதிரணி புள்ளிகள் |
எதிரணி புள்ளிகள் |
எதிரணி புள்ளிகள் |
தரவரிசை | ||
பாருபள்ளி கஷ்யப் | ஆண்கள் ஒற்றையர் | யுஹன் டான் வெ 21–14, 21–12 |
ங்குயன் டி எம் வெ 21–9, 21–14 |
N/A | 1 Q | கருணரத்னே வெ 21–14, 15–21, 21–9 |
லீ சி டபிள்யூ தோ 19–21, 11–21 |
முன்னேறவில்லை | ||
சாய்னா நேவால் | பெண்கள் ஒற்றையர் | ஜாகெல் வெ 21–9, 21–4 |
எல் டான் வெ 21–4, 21–14 |
N/A | 1 Q | யாஓ ஜே வெ 21–14, 21–16 |
பாஒன் W 21–15, 22–20 |
வாங் தோ 13–21, 13–21 |
வாங் X வெ 18–21, 0–1* RET |
3(வெண்கலம்) |
ஜுவாலா குட்டா/ அசுவினி பொன்னப்பா |
பெண்கள் இரட்டையர் | ஃபூஜீ / ககீவா தோ 21–16, 21–18 |
செங் வென்-ஹ்சிங்/ ஷியன் வெ 25–23, 16–21, 21–18 |
சரி/ யாஓ வெ 21–16, 21–15 |
3 | முன்னேறவில்லை | ||||
வலியவிட்டில் திஜூ/ ஜுவாலா குட்டா |
கலப்பு இரட்டையர் | அஹ்மத் / எல் நத்ஸிர் தோ 16–21, 12–21 |
லேபோர்ன் / கே ஆர் ஜுஹ்ல் தோ 12–21, 16–21 |
லீ ஒய்-டீ / ஹா ஜங்-யூன் தோ 15–21, 15–21 |
4 | முன்னேறவில்லை |
குத்துச்சண்டை
[தொகு]எட்டு இந்திய குத்துச்சண்டை வீரர்கள் லண்டன் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றனர்.
ஆண்கள்
[தொகு]வீரர் | போட்டி | 32 பேர் சுற்று | 16 பேர் சுற்று | காலிறுதி | அரையிறுதி | இறுதி | |
---|---|---|---|---|---|---|---|
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
தரவரிசை | ||
தேவேந்திர சிங் | Light flyweight | மொலினா வெ RSC |
புரெவ்தோரி வெ 16–11 |
பார்ன்ஸ் தோ 18–23 |
முன்னேறவில்லை | ||
சிவ தாப்பா | Bantamweight | வால்டெஸ் தோ 9–14 |
முன்னேறவில்லை | ||||
ஜெய் பகவான் | Lightweight | அல்லிசாப் வெ 18–8 |
ஜைலோவ் தோ 8–16 |
முன்னேறவில்லை | |||
மனோஜ் குமார் | Light welterweight | ஹுடாய்பெர்டியேவ் வெ 13–7 |
ஸ்டாக்கர் தோ 16–20 |
முன்னேறவில்லை | |||
விகாசு கிருசன் யாதவ் | Welterweight | N/A | ஸ்பென்ஸ் தோ 13–15 |
முன்னேறவில்லை | |||
விஜேந்தர் சிங் | Middleweight | சுசனோவ் வெ 14–10 |
கௌஷா வெ 16–15 |
அடெவ் தோ 13–17 |
முன்னேறவில்லை | ||
சுமித் சங்வான் | Light heavyweight | ஃபால்காவ் தோ 14–15 |
முன்னேறவில்லை |
பெண்கள்
[தொகு]வீரர் | போட்டி | 16 பேர் சுற்று | காலிறுதி | அரையிறுதி | இறுதி | |
---|---|---|---|---|---|---|
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
தரவரிசை | ||
மேரி கோம் | Flyweight | கரோலினா வெ 19–14 |
ரஹலி வெ 15–6 |
ஆடம்ஸ் தோ 6–11 |
முன்னேறவில்லை | வெண்கலம்03 |
வளைதடிபந்தாட்டம்
[தொகு]இந்திய தேசிய வளைதடிபந்தாட்ட அணி, பிப்ரவரி 26 2012 அன்று, 8-1 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில், பிரான்ஸ் எதிரான தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்று, 2012 கோடைகால ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது. இந்திய அணி பி குழுவில் வைக்கப்பட்டது.
ஆண்கள் போட்டி
[தொகு]வேலை முறை கொண்ட பெயர்ப் பட்டியல்:
தலைமை பயிற்சியாளர்: மைக்கேல் நோப்சு
- இக்நேசு திர்கி
- சந்தீப் சிங்
- பரத் சேத்ரி (த, கோ.கா.)
- மன்பிரீத் சிங்
- சர்தாரா சிங் (துத)
- தரம்வீர் சிங்
- வோ.இரா. இரகுநாத்
- குர்பாய் சிங்
- துசார் காண்டுகர்
- ச. கு. உத்தப்பா
- ப. அர. சிறிஜேசு (கோ.கா.)
- தனீசு முசுதபா
- சிவேந்திர சிங்
- குர்விந்தர் சிங் சாண்டி
- எசு. வி. சுனில்
- பிரேந்திர இலாக்ரா
கையிருப்பு:
குழு விளையாட்டு:
அணி | போட்டி | வெற்றி | சமநிலை | தோல்வி | அடித்த கோல் | எதிர் கோல் | கோல் வித்தியாசம் | புள்ளி |
---|---|---|---|---|---|---|---|---|
நெதர்லாந்து | 5 | 5 | 0 | 0 | 18 | 7 | +11 | 15 |
ஜெர்மனி | 5 | 3 | 1 | 1 | 14 | 11 | +3 | 10 |
பெல்ஜியம் | 5 | 2 | 1 | 2 | 8 | 7 | +1 | 7 |
கொரியா | 5 | 2 | 0 | 3 | 9 | 8 | +1 | 6 |
நியூசிலாந்து | 5 | 1 | 2 | 2 | 10 | 14 | -4 | 5 |
இந்தியா | 5 | 0 | 0 | 5 | 6 | 18 | -12 | 0 |
ஒலிம்பிக்கில் இந்தியாவின் மிக மோசமான செயல்பாடாக இது இருந்தது
யுடோ
[தொகு]இலண்டன் ஒலிம்பிக்கில் ஒரே ஒரு இந்தியர் யுடோ விளையாட்டில் கலந்து கொண்டார்.
வீரர் | போட்டி | 32 பேர் சுற்று | 16 பேர் சுற்று | காலிறுதி | அரையிறுதி | ரெபசாஜ் | வெண்கலப்பதக்கம் | இறுதி | |
---|---|---|---|---|---|---|---|---|---|
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
தரவரிசை | ||
கரிமா சௌதரி | பெண்கள் 63 கிலோ | யோஷி யூயினோ தோ 0000–0100 |
முன்னேறவில்லை |
படகுப்போட்டி
[தொகு]ஆண்கள்
[தொகு]வீரர் | போட்டி | தகுதிச்சுற்று | ரெபசாஜ் | காலிறுதி | அரையிறுதி | இறுதி | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நேரம் | இடம் | நேரம் | இடம் | நேரம் | இடம் | நேரம் | இடம் | நேரம் | இடம் | ||
சவரன் சிங் | ஒற்றைத்துடுப்பு | 6:54.04 | 4 R | 7:00:49 | 1 Q | 7:11.59 | 4 SC/D | 7:36.25 | 2 FC | 7:29.66 | 16 |
சந்தீப் குமார் (படகோட்டம்) மஞ்சீத் சிங் |
இரட்டைத்துடுப்பு | 6:56.60 | 4 R | 6:54.20 | 6 SC/D | N/A | N/A | 7:19.31 | 4 FD | 7:08.39 | 19 |
துப்பாக்கி சுடுதல்
[தொகு]லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்க பதினொரு (ஏழு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள்) இந்தியர்கள் தகுதி பெற்றனர். இந்தியாவின் ககன் நரங்க மற்றும் விஜய் குமார் முறையே வெண்கல மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்ற இந்த ஆண்டு மிக வெற்றிகரமானதாக இருந்தது.
ஆண்கள்
[தொகு]வீரர் | போட்டி | தகுதிச்சுற்று | இறுதி | ||
---|---|---|---|---|---|
புள்ளிகள் | தரவரிசை | புள்ளிகள் | தரவரிசை | ||
அபினவ் பிந்த்ரா | 10 மீ ஏர் ரைஃபிள் | 594 | 16 | முன்னேறவில்லை | |
ககன் நரங் | 598 | 3 Q | 701.1 | 03(வெண்கலம்) | |
ஜாய்தீப் கர்மகர் | 50 மீ ரைஃபிள் | 595 | 7 Q | 699.1 | 4 |
ககன் நரங் | 593 | 18 | முன்னேறவில்லை | ||
விஜய் குமார் | 10 மீ ஏர் பிஸ்டல் | 570 | 31 | முன்னேறவில்லை | |
25 மீ பிஸ்டல் | 585 | 4 Q | 30 | 02(வெள்ளி) | |
ககன் நரங் | 50 மீ ரைஃபிள் | 1164 | 20 | முன்னேறவில்லை | |
சஞ்சீவ் ராஜ்புட் | 1161 | 26 | முன்னேறவில்லை | ||
மனவ்ஜித் சிங் சாந்து | ட்ராப் | 119 | 16 | முன்னேறவ���ல்லை | |
ரஞ்சன் சோதி | டபிள் ட்ராப் | 134 | 11 | முன்னேறவில்லை |
பெண்கள்
[தொகு]வீரர் | போட்டி | தகுதிச்சுற்று | இறுதி | ||
---|---|---|---|---|---|
புள்ளிகள் | தரவரிசை | புள்ளிகள் | தரவரிசை | ||
ஷாகுன் சௌத்ரி | ட்ராப் | 61 | 20 | முன்னேறவில்லை | |
ராஹி ஸமோபட் | 25 மீ பிஸ்டல் | 579 | 19 | முன்னேறவில்லை | |
அன்னுராஜ் சிங் | 575 | 30 | முன்னேறவில்லை | ||
அன்னுராஜ் சிங் | 10 மீ ஏர் பிஸ்டல் | 378 | 23 | முன்னேறவில்லை | |
ஹீனா சித்து | 382 | 12 | முன்னேறவில்லை |
நீச்சல்
[தொகு]ஆண்கள்
[தொகு]வீரர் | போட்டி | தகுதிச்சுற்று | அரையிறுதி | இறுதி | |||
---|---|---|---|---|---|---|---|
நேரம் | தரவரிசை | நேரம் | தரவரிசை | நேரம் | தரவரிசை | ||
உள்ளல்மத் ககன் | 500 மீ | 16:31.14 | 31 | முன்னேறவில்லை |
மேசைப்பந்தாட்டம்
[தொகு]இந்திய மேசைப்பந்தாட்டத்தில் 2 கோட்டாக்கள் பெற்றது.
வீரர் | போட்டி | Preliminary round | முதல் சுற்று | இரண்டாம்சுற்று | மூன்றாம் சுற்று | நான்காம் சுற்று | காலிறுதி | அரையிறுதி | இறுதி | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
தரவரிசை | ||
சௌம்யஜித் கோஷ் | ஆண்கள் ஒற்றையர் | BYE | சுபோய்வெ 4–2 | கிம் ஹ்யோக்-பாங் தோ 1–4 |
முன்னேறவில்லை | |||||
அங்கிதா தாஸ் | பெண்கள் ஒற்றையர் | BYE | ரமிரெஸ் தோ 1–4 |
முன்னேறவில்லை |
வரிப்பந்தாட்டம்
[தொகு]இந்தியா வரிப்பந்தாட்டத்தில் 7 கோட்டாக்கள் பெற்றது.
ஆண்கள்
[தொகு]வீரர் | போட்டி | 64 பேர் சுற்று | 32 பேர் சுற்று | 16 பேர் சுற்று | காலிறுதி | அரையிறுதி | இறுதி | |
---|---|---|---|---|---|---|---|---|
எதிர் புள்ளிகள் |
எதிர் புள்ளிகள் |
எதிர் புள்ளிகள் |
எதிர் புள்ளிகள் |
எதிர் புள்ளிகள் |
எதிர் புள்ளிகள் |
தரவரிசை | ||
சோம்தேவ் தேவ்வர்மன் | ஒற்றையர் | நெமினன் தோ 3–6, 1–6 |
முன்னேறவில்லை | |||||
விஷ்ணு வர்தண் | ப்ளாஸ் தோ 3–6, 2–6 |
முன்னேறவில்லை | ||||||
மஹேஷ் பூபதி/ ரோஹன் போபண்ணா |
இரட்டையர் | N/A | பரி மிர்ன்யி/ வெ 7–6(7–4), 6–7(4–7), 8–6 |
பென்னெட்டொ காச்கெட் தோ 3–6, 4–6 |
முன்னேறவில்லை | |||
லியாண்டர் பயஸ்/ விஷ்ணு வர்தண் |
N/A | ஹாசே / ரோஜர் வெ 7–6(7–1), 4–6, 6–2 |
லோட்ரா / ட்ஸோங்கா தோ 6–7(3–7), 6–4, 3–6 |
முன்னேறவில்லை |
பெண்கள்
[தொகு]வீரர் | போட்டி | 32 பேர் சுற்று | 16 பேர் சுற்று | காலிறுதி | அரையிறுதி | இறுதி | |
---|---|---|---|---|---|---|---|
எதிர் புள்ளிகள் |
எதிர் புள்ளிகள் |
எதிர் புள்ளிகள் |
எதிர் புள்ளிகள் |
எதிர் புள்ளிகள் |
தரவரிசை | ||
ருஷ்மி சக்ரவர்த்தி/ சானியா மிர்சா |
இரட்டையர் | சுஆங் சியா-ஜங்/ ஹ்ஸிய சு-வெய் தோ 1–6, 6–3, 1–6 |
முன்னேறவில்லை |
கலப்பு
[தொகு]வீரர் | போட்டி | 16 பேர் சுற்று | காலிறுதி | அரையிறுதி | இறுதி | |
---|---|---|---|---|---|---|
எதிர் புள்ளிகள் |
எதிர் புள்ளிகள் |
எதிர் புள்ளிகள் |
எதிர் புள்ளிகள் |
தரவரிசை | ||
லியாண்டர் பயஸ்/ சானியா மிர்சா |
கலப்பு இரட்டையர் | அனா இவனோவிக் / ஸிமோஞ்சிக் வெ 6–2, 6–4 |
அசரென்கா/ மிர்ன்யி தோ 5–7, 6–7(5–7) |
முன்னேறவில்லை |
பளு தூக்குதல்
[தொகு]இந்திய பளு தூக்குதலில் 2 கோட்டாக்கள் வென்றது.
வீரர் | போட்டி | Snatch | Clean & Jerk | மொத்தம் | தரவரிசை | ||
---|---|---|---|---|---|---|---|
முடிவு | தரவரிசை | முடிவு | தரவரிசை | ||||
கடுலு ரவி குமார் | ஆண்கள் 69 கி | 136 | 16 | 167 | 15 | 303 | 15 |
ங்கங்பம் சோனியா சானு | பெண்கள் 48 கி | 74 | 8 | 97 | 7 | 171 | 7 |
இந்தியா பின்வரும் நிகழ்வுகளில் 5 கோட்டாக்கள் வென்றது.
ஆண்கள் கட்டற்ற வகை
[தொகு]வீரர் | போட்டி | தகுதி | 16 பேர் சுற்று | காலிறுதி | அரையிறுதி | ரெபசாஜ் 1 | ரெபசாஜ் 2 | இறுதி | |
---|---|---|---|---|---|---|---|---|---|
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
தரவரிசை | ||
அமித் குமார் | ஆண்கள் 55 கி | BYE | ரஹிமி வெ 3–1 PP |
கின்செகஷ்விலி தோ 1–3 PP |
முன்னேறவில்லை | BYE | வெலிகோவ் தோ 0–3 PO |
முன்னேறவில்லை | 10 |
யோகேசுவர் தத் | ஆண்கள் 60 கி | கிடியா வெ 3–1 PP |
குடுகோவ் தோ 0–3 PO |
முன்னேறவில்லை | முன்னேறவில்லை | கோமேஸ் வெ 3–0 PO |
எஸ்மயில்பொர் வெ 3–1 PP |
ரி ஜோங்-ம்யோங் வெ 3–1 PP |
03(வெண்கலம்) |
சுசீல் குமார் | ஆண்கள் 66 கி | BYE | சாஹின் வெ 3–1 PP |
நவ்ருசோவ் வெ 3–1 PP |
டனடாரோவ் வெ 3–1 PP |
BYE | யோனெமிட்சு தோ 0–3 PO |
02(வெள்ளி) | |
நரசிங் பன்சம் யாதவ் | ஆண்கள் 74 கி | BYE | கெண்ட்ரி தோ 1–3 PP |
முன்னேறவில்லை | 14 |
பெண்கள் கட்டற்ற வகை
[தொகு]வீரர் | போட்டி | தகுதி | 16 பேர் சுற்று | காலிறுதி | அரையிறுதி | ரெபசாஜ் 1 | ரெபசாஜ் 2 | இறுதி | |
---|---|---|---|---|---|---|---|---|---|
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
எதிர் முடிவு |
தரவரிசை | ||
கீதா போகத் | பெண்கள் 55 கி | BYE | வெர்பீக் தோ 1–3 PP |
முன்னேறவில்லை | BYE | லசரெவா தோ 0–3 PO |
முன்னேறவில்லை | 13 |
ஆயத்தங்கள்
[தொகு]இந்திய அணி இந்திய அரசாங்கத்தின் மூலம் 48.1 மில்லியன் அமெரிக்க மற்றும் தனியார் விளம்பரதாரர்கள் மூலம் கூடுதல் 11 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஆதரவு பெற்றது. விளையாட்டின்படி நிதி பகிர்வு அமெரிக்க டாலர்களில்:
நிகழ்வு | தேசிய முகாம்கள் | சர்வதேச அளவில் | தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி |
---|---|---|---|
வில்வித்தை | 3.44 | 3.57 | - |
தடகளம் | 6.48 | 4.11 | 1.36 |
இறகுப்பந்தாட்டம் | 4.35 | 6.12 | - |
குத்துச்சண்டை | 7.51 | 11.71 | 0.24 |
ஜிம்னாஸ்டிக்ஸ் | 1.38 | 4.98 | 0.9 |
ஹாக்கி | 7.69 | 11.21 | - |
ஜூடோ | 2.1 | 2.1 | - |
படகுப்போட்டி | 1.08 | 2.37 | - |
பாய்மரப்போட்டி | 1.13 | 2.04 | - |
துப்பாக்கி சுடுதல் | 11.22 | 11.5 | 1.05 |
நீச்சல் | 1.12 | 0.68 | - |
மேசைப்பந்தாட்டம் | 2.5 | 2.07 | - |
டைக்குவாண்டோ | 1.46 | 1.22 | - |
வரிப்பந்தாட்டம் | - | - | 3.49 |
பளு தூக்குதல் | 3.61 | 3.11 | - |
மல்யுத்தம் | 5.2 | 5.1 | - |
மொத்தம்(139.2) | 60.27 | 71.89 | 7.04 |
சர்ச்சைகள்
[தொகு]தொடக்க விழா
[தொகு]சாதாரண உடையில் ஒரு பெண், நாடுகளின் அணிவகுப்பின் போது, இந்திய ஒலிம்பிக் அணியின் தலைமையில் காணப்பட்டார். இது இந்தியா முழுவதும் ஊடக கவனத்தை ஈர்த்தது மற்றும் ஒலிம்பிக் போட்டிகளின் பாதுகாப்பு பற்றி கேள்விகள் எழுப்��ப்பட்டன. அப்பெண் பின்னர் மதுரா நாகேந்திரா, லண்டனில் வாழும் ஒரு பெங்களூர் பட்டதாரி மாணவர், திறப்பு விழாவில் நடனக்குழுவில் உள்ளவர் என அடையாளம் காணப்பட்டார். ஒலிம்பிக் லண்டன் அமைப்பு குழு இச்சம்பவம் தொடர்பாக இந்தியக்குழுவிடம் மன்னிப்பு கேட்டது மற்றும் நாகேந்திரா இந்தியா திரும்பிய பின் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.
குத்துச்சண்டை
[தொகு]குத்துச்சண்டை வீரர் சுமித் சங்வான் லைட் ஹெவிவெயிட் பிரிவில், 32 பேர் சுற்றில் பிரேசிலின் யமகுசி ஃபால்கோ ஃப்ளோரண்டைன் எதிரான போட்டியில், 14-15 என இழந்தார். ஈ.எஸ்.பி.என் வர்ணனையாளர் இதை "பகல் கொள்ளை" என விவரித்தார். அவர் வெற்றி பெற்றார் என்ற நம்பிக்கையில் நீதிபதிகளின் முடிவை எதிர்த்து விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மகான் வற்புறுத்தலினால் முறையீடு தாக்கல் செய்யப்பட்டு, அது நிராகரிக்கப்பட்டது. குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணனின் வெற்றி, எதிர்ப்பாளர் எர்ரால் ஸ்பென்ஸின் முறையீட்டால் பின்னர் மாற்றப்பட்டது. விகாஸுக்கு நான்கு தண்டனை புள்ளிகள் வழங்கப்பட்டது மற்றும் ஸ்பென்ஸிற்கு ஆதரவாக 11-13இல் இருந்து 15-13 என புள்ளிகள் மாற்றப்பட்டது. மூன்றாவது சுற்றில் இந்திய வீரர் செய்த ஒன்பது முறைகேடுகளை சுட்டி காட்டி புள்ளிகள் மாற்றப்பட்டன.நடுவர் முடிவே இறுதி என்பதால்,இந்தியர்கள் முறையீடு செய்ய அனுமதிக்கப்படவில்லை. குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமார் சர்ச்சைக்குரிய முறையில், கிரேட் பிரிட்டனின் டாம் ஸ்டாக்கர் எதிராக தனது காலிறுதிக்கு முந்தைய போட்டியை இழந்தார். சந்தேகத்திற்குரிய தீர்ப்புகள் பல அவருக்கு எதிராக வழங்கப்பட்டன.அவர் குத்துச்சண்டை அரங்கை விட்டு செல்லும் முன் வெளிப்படையாக "மோசடி" என கத்தினார்.
இறகுப்பந்தாட்டம்
[தொகு]ஜுவாலா குட்டாவும் அசுவினி பொன்னப்பாவும் இறகுப்பந்தாட்டத்தில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் காலிறுதிக்கு முன்னேற தவறினர்.ஜப்பானின் மிசுகி ஃபுஜி மற்றும் ரெய்கா ககீவா ஜோடி, சீன தைபேயின் செங் வென் ஹ்ஸிங், செயின் யு சின் ஜோடியிடம் தோற்றது. காலிறுதியில் வலுகுறைந்த அணியுடன் விளையாட, ஜப்பான் வேண்டுமென்றே இந்த போட்டியில் தோற்றதாக இந்திய இறகுப்பந்தாட்ட சங்கம் முறையீடு செய்து அது தள்ளுபடி செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Olympics 2012: India to send biggest ever contingent". பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
- ↑ "Archery Contingent". Archived from the original on 2012-08-04. பார்க்கப்பட்ட நாள் 2012-08-04.
- ↑ "iaaf.org – Top Lists". IAAF. பார்க்கப்பட்ட நாள் 6 September 2011.