1925
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1925 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1925 MCMXXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1956 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2678 |
அர்மீனிய நாட்காட்டி | 1374 ԹՎ ՌՅՀԴ |
சீன நாட்காட்டி | 4621-4622 |
எபிரேய நாட்காட்டி | 5684-5685 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1980-1981 1847-1848 5026-5027 |
இரானிய நாட்காட்டி | 1303-1304 |
இசுலாமிய நாட்காட்டி | 1343 – 1344 |
சப்பானிய நாட்காட்டி | Taishō 14 (大正14年) |
வட கொரிய நாட்காட்டி | 14 |
ரூனிக் நாட்காட்டி | 2175 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4258 |
1925 (MCMXXV) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 3 - இத்தாலியின் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றுவதாக பெனிட்டொ முசோலினி அறிவித்தார்.
- பெப்ரவரி 21 - த நியூ யோர்க்கர் இதழ் வெளிவந்தது.
- மார்ச் 18 - அமெரிக்காவின் மிசோரி, இலினோய் மற்றும் இண்டியானா மாநிலங்களில் பரவிய புயலினால் 695 பேர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 16 - பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில் சென் நெடெலியா ஆலயத்தில் கம்யூனிஸ்டுகள் தாக்கியதில் 150 பேர் கொல்லப்பட்டு 500 பேர் படுகாய���டைந்தனர்.
- ஜூன் 13 - சார்ள்ஸ் ஜென்கின்ஸ் படங்களையும் ஒலியையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தார். 10-நிமிட அசையும் படத்தை 5 மைல்கள் தூரத்திற்கு அனுப்பினார்.
- ஜூன் 29 - கலிபோர்னியாவில் 6.3 நிலநடுக்கம் ஏற்பட்டதில் சாண்டா பார்பரா என்ற இடம் முற்றாக அழிந்தது.
- ஜூலை 25 - சோவியத்தின் டாஸ் செய்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
- அக்டோபர் 30 - ஜோன் லோகி பயர்ட் பிரித்தானியாவின் முதலாவது தொலைக்காட்சி பரப்பியை அமைத்தார்.
- டிசம்பர் 16 - இலங்கையில் "கொழும்பு வானொலி" (பின்னர் இலங்கை வானொலி) தனது சேவையை ஆரம்பித்தது.
- டிசம்பர் 26 - நாக்பூரில் நடந்த மாநாட்டில் தமிழரான சிங்கார வேலர் கலந்து கொண்டபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
நாள் அறியப்படாதவை
[தொகு]- குயீன்ஸ்லாந்து வாரத்துக்கு 44-மணி வேலை நேரத்தை அறிவித்தது.
- விளாடிமீர் சுவோர்க்கின் (Vladimir Zworykin) வர்ணத் தொலைக்காட்சிக்கான காப்புரிமம் பெற்றார்.
- லண்டனில் இரட்டைத் தட்டு பேருந்து அறிமுகப்படுத்தப்படட்து.
- ச்கொட்ச் டேப் (Scotch Tape) கண்டுபிடிக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- ராஜம் கிருஷ்ணன், தமிழக எழுத்தாளர் (இ 2014)
- சனவரி 1 - வி. எஸ். ராகவன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (இ. 2015)
- ஜனவரி 7 - தங்கம்மா அப்பாக்குட்டி
- மார்ச் 30 - தி. க. சிவசங்கரன், மார்க்சிய திறனாய்வாளர் (இ. 2014)
- ஏப்ரல் 21 - வாண்டுமாமா, குழந்தை எழுத்தாளர் (இ. 2014)
- ஏப்ரல் 21 - கண்டதேவி எஸ். அழகிரிசாமி, தமிழக வயலின் இசைக்கலைஞர் (இ. 2000)
- மே 19 - மல்கம் எக்ஸ்
- ஜூன் 5 - வ. அ. இராசரத்தினம்
- ஜூன் 10 - வே. தில்லைநாயகம்
- ஜூன் 25 - ராபர்ட் வெஞ்சூரி
- சூலை 11 - கா. மீனாட்சிசுந்தரம், தமிழறிஞர் (இ. 2015)
- அக்டோபர் 2 - ஆன் றணசிங்க
- அக்டோபர் 20 - ஆர்ட் புச்வால்ட்
இறப்புகள்
[தொகு]நோபல் பரிசுகள்
[தொகு]- இயற்பியல் - ஜேம்ஸ் பிராங்க் (James Franck), குஸ்டாவ் ஹேர்ட்ஸ் (Gustav Ludwig Hertz)
- வேதியியல் - ரிச்சார்ட் சிக்மொண்டி (Richard Adolf Zsigmondy)
- மருத்துவம் - வழங்கப்படவில்லை
- இலக்கியம் - ஜோர்ஜ் பேர்னார்ட் ஷா
- அமைதி - ஓஸ்டென் சாம்பர்லெயின் (Austen Chamberlain), சார்ல்ஸ் டோஸ் (Charles Gates Dawes)