உள்ளடக்கத்துக்குச் செல்

ஹேமா உபாத்யாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹேமா உபாத்யாய்
பிறப்புஹேமா ஹிரானி
1972
வடோதரா, குசராத்து, இந்தியா
இறப்பு11 December 2015 (aged 43)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
உடல் கண்டறியப்பட்ட
இடம்
12 டிசம்பர் 2015
தேசியம்இந்தியன்
கல்விபிஎஃப்ஏ வில் ஓவியம் மற்றும் எம்எஃப்ஏ வில் அச்சிடுவது மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம், 1997

ஹேமா உபாத்யாய் (Hema Upadhyay 1972 டிசம்பர் 11- டிசம்பர் 11, 2015 அன்று பிறந்த இவர் மும்பையை அடிப்படையாகக் கொண்ட இந்திய கலைஞர் ஆவார். அவர் புகைப்படத்திற்காகவும் சிற்பக் கலைக்காகவும் நிறுவல் கலைக்காகவும் அறியப்படுகிறார். 2015ஆம் ஆண்டில் அவர் மரணமடையும் வரை அந்த செயலில் இருந்தார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

பரோடாவில் பிறந்த இவர் 1992 இல் தனது எதிர்கால கணவரும் மற்றும் சக கலைஞமான சின்டன் உபாத்யை என்பவரைச் சந்தித்தார். இவர்கள் 1998 இல் திருமணம் செய்து கொண்டனர், மற்றும் மும்பையில் வசிக்க ஆரம்பித்தனர். 2010 ஆம் ஆண்டில் விவாகரத்து கோரும் முன் பல கண்காட்சிகளில் அவர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றினர். இவர்கள் 2014ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்தனர்.[1] பின்னர், சின்டன் தில்லி சென்றார், ஹேமா ஜுஹு-தாரா சாலையில் ஒரு அடுக்கு மாடி வீட்டில் வாழ்ந்தார்.[2]

அருங்காட்சியகம், கண்காட்சிகள்

[தொகு]

2004 ஆம் ஆண்டு முதல், ஹேமா உபாத்யாய் சீனாவின் பெய்ஜிங்கில், "உல்லன்ஸ் சென்டர் ஃபார் த கான்டெம்பரரி ஆர்ட்" என்ற பல்வேறு குழு நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக நிறுவப்பட்டது. உரோமில் நடைபெற்ற "மேக்ரோ அருங்காட்சியகத்தின் துவக்க நிகழ்வில் பங்கேற்ற ஒரே இந்திய கலைஞர் ஆவார்.

இறப்பு

[தொகு]

ஹேமா உபாத்யா மற்றும் அவரது வழக்கறிஞர் ஹரேஷ் பம்பானி ஆகியோர் வெள்ளிக்கிழமை 11 டிசம்பர் 2015 அன்று கொல்லப்பட்டனர். அவரது முன்னாள் கணவர் சின்டன் மீதான நீதிமன்ற வழக்குகளில் ஹேமாவிற்காக வாதாடினார். 2010 இல் விவாகரத்து கோரி தாக்கல் செய்த பின்னர், 2014 ஆம் ஆண்டில் விவாகரத்து பெறும் வரை சின்ண்டன் மற்றும் ஹேமா ஆகிய இருவரும் மும்பை வீட்டில் வெவ்வேறு அறைகளில் வாழ்ந்தனர்.[3]

குறிப்புகள்

[தொகு]
  1. Gautam Sandip Mengle (14 December 2015). "Artist Hema Upadhyay, her lawyer found dead in drain". The Hindu.
  2. Manish K Pathak (14 December 2015). "Bodies of Mumbai artist Hema Upadhyay, her lawyer found in drain". Hindustan Times. http://www.hindustantimes.com/mumbai/mumbai-bodies-of-artist-hema-upadhyay-her-lawyer-harish-bhambhani-found-in-drain/story-GGiWlhOZ2HoNKqA1OGC2AL.html. 
  3. Ankita Sinha (13 December 2015). "Bodies Of Artist Hema Upadhyay, Her Lawyer Found In Mumbai Drain". NDTV. http://www.ndtv.com/mumbai-news/bodies-of-artist-hema-upadhyay-her-lawyer-found-in-mumbai-drain-1254383. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமா_உபாத்யாய்&oldid=3776566" இலிருந்து மீள்விக்கப்பட்டது