உள்ளடக்கத்துக்குச் செல்

ஹர்தீப் சிங் பூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹர்தீப் சிங் பூரி
அமைச்சர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
30 மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்சுரேஷ் பிரபு
இணை அமைச்சர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
பதவியில்
2 செப்டம்பர் 2017 – ஏப்ரல் 2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்நரேந்திர சிங் தோமர்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
9 சனவரி 2018
முன்னையவர்மனோகர் பாரிக்கர்
தொகுதிஉத்திரப் பிரதேசம்
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவின் தலைவர்
பதவியில்
1 ஆகத்து 2011 – 31 ஆகத்து 2011
முன்னையவர்பீட்டர் விட்டிக் மற்றும் கைடோ வெஸ்டர்வெல்லே
பின்னவர்நவாஃப் சலாம், மைக்கேல் சுலைமான் மற்றும் நஜிப் மிகாட்டி
பதவியில்
1 நவம்பர் 2012 – 30 நவம்பர் 2012
முன்னையவர்ஜெர்ட் ரோசெனல் மற்றும் ஹரோல்ட் கேபல்லரிஸ்
பின்னவர்முகமது லொலிக்கி மற்றும் சாதேடியன் ஒத்மணி
ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி
பதவியில்
4 மே 2009 – 27 பிப்ரவரி 2013
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்நிருபம் சென்
பின்னவர்அசோக் குமார் முகர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 பெப்ரவரி 1952 (1952-02-15) (அகவை 72)
தில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்லஷ்மி சிங் பூரி
முன்னாள் கல்லூரிஇந்து கல்லூரி, தில்லி
வேலைஅரசியல்வாதி

ஹர்தீப் சிங் பூரி (Hardeep Singh Puri, பிறப்பு: 15 பிப்ரவரி 1952) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.[1][2]இவர் தற்போது இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக உள்ளார்.

இளமைக் காலம்

[தொகு]

இவர் இந்தியாவின், தில்லியில் பிப்ரவரி 15, 1952 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தில்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியில், இளங்கலை வரலாறும் மற்றும் முதுகலை வரலாறும் படித்து, பட்டம் பெற்றார். பின்னர் தில்லி, செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்று பேராசிரியராக பணியாற்றினார்.[3] இவருக்கு லஷ்மி சிங் பூரி என்னும் மனைவி உள்ளார். இவர் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச்செயலாளராக உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

குடிமுறை அரசுப்பணி

[தொகு]

1994 முதல் 1997 வரை மற்றும் 1999 முதல் 2002 வரை வெளியுறவு அமைச்சரகத்தில், இணை செயலாளராகப் பணியாற்றினார். 1997 முதல் 1999 வரை, இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின், இணைச் செயலாளராகப் பணியாற்றினார். பின்னர் 2009 முதல் 2013 வரை வெளியுறவு அமைச்சகத்தின், செயலாளராகவும் பணியாற்றினார்.

2011 சனவரி முதல் பிப்ரவரி 2013 வரை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு குழுவின் - (பயங்கரவாத எதிர்ப்புக் குழு) தலைவராகவும், ஆகத்து 2011 மற்றும் நவம்பர் 2012 இல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.[4]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

இவர் சனவரி 2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[5][6] இவர் 2019 ஆம் ஆண்டு முதல் வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி, விமானப் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில் ஆகிய துறைகளின் இணை அமைச்சராகப் (தனி பொறுப்பு) பதவி வகிக்கின்றார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Welcome To IANS Live - NATION". IANS Live.
  2. "Hardeep Puri to be next Permanent Representative of India to UN". One India News. Archived from the original on 14 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Stephen’s wins war of words". The Times Of India. 23 December 2011 இம் மூலத்தில் இருந்து 2 பிப்ரவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140202225347/http://articles.timesofindia.indiatimes.com/2011-12-23/delhi/30550359_1_hindu-college-shashi-tharoor-brand-india. பார்த்த நாள்: 21 October 2012. 
  4. "CTC Chairman Biographical Note". United Nations. 12 January 2011. Archived from the original on 31 January 2014. பார்க்கப்பட்ட நாள் 31 January 2013.
  5. "Ex-UN envoy Hardeep Singh Puri joins BJP" (in en). @businessline. http://www.thehindubusinessline.com/news/politics/exun-envoy-hardeep-singh-puri-joins-bjp/article5530038.ece. 
  6. Kaushal, Akshat (2014-01-11). "I admire the BJP's approach towards national security: Hardeep Singh Puri". Business Standard India. http://www.business-standard.com/article/opinion/i-admire-the-bjp-s-approach-towards-national-security-hardeep-singh-puri-114011100766_1.html. 
  7. "PM Modi allocates portfolios. Full list of new ministers", Live Mint, 31 May 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹர்தீப்_சிங்_பூரி&oldid=3792693" இலிருந்து மீள்விக்கப்பட்டது