வேலு ஆசான்
வேலு ஆசான் | |
---|---|
பிறப்பு | வேல்முருகன் அலங்காநல்லூர், மதுரை |
தேசியம் | இந்தியர் |
பணி | பறை இசைக்கலைஞர் |
விருதுகள் | பத்மசிறீ (2025) |
வேலு ஆசான் (Velu Aasaan) என்பவர் இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த பறை இசை கலைஞரும் பத்மசிறீ விருதாளரும் ஆவார்.
வேலு ஆசானின் இயற்பெயர் வேல்முருகன். வேலு ஆசானின் தந்தை இராமையா ஆவார். ஆரம்பத்தில் இவரிடமே பறை இசைக்க கற்றுக்கொண்டாலும், இப்பகுதியினைச் சேர்ந்த சேவுகன் வாத்தியார் என்பவரிடம் பறை இசையின் நுட்பங்களை அறிந்துகொண்டார். தமிழர்கள் வாழும் சீனா, சிங்கப்பூர், துபாய், மலேசியா, அமெரிக்கா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து பறையிசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.[1] பறையிசையினை முழுமையாக தொழிலாகக்கொண்டு இசைத்து வரும் இவருக்கு இந்திய அரசு இந்தியக் குடிமக்களுக்கு வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான பதமசிறீ விருதினை 2025ஆம் ஆண்டு வழங்கியது.[2][3] அய்யா அழகர்சாமி விருது, சிறந்த மக்கள் கலைஞன் விருது, ஞானப்பறை, பறையிசை சிற்பி, கிராமிய கலைச்சுடர், தந்தை பெரியார் விருது, பாவலர் ஓம் முத்துமாரி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வேலு ஆசான் பெற்றுள்ளார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bharat, E. T. V. (2025-01-26). "'இந்த விருதை எனது குரு சேவுகன் வாத்தியாருக்கு சமர்ப்பிக்கிறேன்' - பத்மஸ்ரீ விருது பெறும் வேலு ஆசான்!". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 2025-01-26.
- ↑ PTI (2025-01-26). "30 unsung heroes, including a 100-year-old freedom fighter Libia Lobo Sardesai, awarded Padma Shri". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2025-01-26.
- ↑ WebDesk (2025-01-26). "பறை இசையில் அதீத ஆர்வம்: தேடி வந்த பத்ம ஸ்ரீ விருது; யார் இந்த வேலு ஆசான்?". tamil.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-26.
- ↑ சரவணகுமார், லஷ்மி (2025-01-26). "`கலை மட்டும்தான் நிரந்தரம்' - பறை இசைக் கலைஞர் வேலு ஆசான்". பார்க்கப்பட்ட நாள் 2025-01-26.