உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளை இறக்கை வானம்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளை இறக்கை வானம்பாடி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பெசாரிபார்மிசு
குடும்பம்:
அல்லெடிடே
பேரினம்:
அலொட
இனம்:
அ. லியூகோப்டெரா
இருசொற் பெயரீடு
அலொட லியூகோப்டெரா
பாலாசு, 1811
துணையினங்கள்

உரையினைப் பார்க்கவும்

வெள்ளை இறக்கை பரம்பல்
வேறு பெயர்கள்
  • மெலனோகோரிபா லியூகோப்டெரா
  • மெலனோகோரிபா சைபீரிகா

வெள்ளை இறக்கை வானம்பாடி (White-winged lark)(அலொட லியூகோப்டெரா) என்பது தெற்கு உக்ரைனிலிருந்து கஜகஸ்தான் வழியாக தென்-மத்திய ரஷ்யா வரை காணப்படும் ஒரு வகை வானம்பாடி ஆகும்.[2] இப்பறவைகள் குளிர்காலத்தில் தெற்கு நோக்கி வலசை போகும் தன்மையுடையது. தெற்குப் பகுதியில் வசிக்கும் பறவைகள் இடம்பெயர்வதில்லை. இது மேற்கு ஐரோப்பாவிற்கு மிகவும் அரிதான நாடோடி பறவையாகும்.

வகைப்பாட்டியல்

[தொகு]

தற்போதைய பேரினப் பெயர் இலத்தீன் மொழியிலிருந்து வானம்பாடி எனப் பொருள்படுவதாகும். சிற்றினப் பெயரான லுகோப்டெரா என்பது வெள்ளை இறக்கையினைக் குறிக்கும். லுகோசு என்பதன் பொருள் "வெள்ளை" என்பதாகும்; ப்டெரான் என்பது சிறகுகள்" என்று பொருள்படும்.[3] தற்போதைய பேரினத்திற்கு மாற்றப்படும் வரை (2014 வரை) இது மெலனோகோரிபா பேரினத்தைச் சேர்ந்ததாக வகைப்படுத்தப்பட்டது.[4]

விளக்கம்

[தொகு]

ஒளிரும் வெள்ளை இறக்கையுடன் கூடிய இந்த வானம்பாடி, பெரியது மற்றும் வலுவானது. பொதுவாக இதனுடைய நீளம் 17 முதல் 19 செ.மீ. நீளமும், இறக்கை விட்டம் 35 செ.மீ. நீளமும் உடையது. இதனுடைய எடை சுமார் 44 கிராம் எடை கொண்டது. இதன் உடலின் மேற்பகுதி அடர்-சாம்பல் நிறக் கோடுகளுடனும் கீழ்ப்பகுதி வெண்மையாகவும் காணப்படும்.

ஓசை

[தொகு]

இதன் பாடல் யூரேசிய வானம்பாடியின் மெல்லிசைப் பதிப்பாக இருக்கும்.

நடத்தை மற்றும் சூழலியல்

[தொகு]
அலாடா லியூகோப்டெரா

வெள்ளை இறக்கை வானம்பாடி, வறண்ட, திறந்த புல்வெளி மற்றும் சமவெளிகளில் வாழ்கிறது. இது தரையில் கூடு கட்டி, ஒரு மூன்று முதல் எட்டு முட்டைகள் இடும். இதன் உணவாக விதைகளும் இனப்பெருக்க காலத்தில் பூச்சிகளும் உள்ளன. இது குளிர்காலத்தில் கூட்டமாகக் காணப்படும்.

அச்சுறுத்தல்கள்

[தொகு]

உழவு காரணமாக வாழ்விட அழிவு வெள்ளை இறக்கை வானம்பாடியின் முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகும்.

நிலை

[தொகு]

வெள்ளை இறக்கை வானம்பாடி எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்தாலும், இது பொதுவாகக் காணப்படுகிறது. மேலும் இது ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படவில்லை.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 BirdLife International (2018). "Alauda leucoptera". IUCN Red List of Threatened Species 2018: e.T22717298A131975551. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22717298A131975551.en. https://www.iucnredlist.org/species/22717298/131975551. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Nicators, reedling & larks « IOC World Bird List". www.worldbirdnames.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-04.
  3. The Helm Dictionary of Scientific Bird Names.
  4. "Taxonomy 4.1 to 4.4 « IOC World Bird List". www.worldbirdnames.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-04.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • BirdFacts - பறவையியலுக்கான பிரித்தானிய அறக்கட்டளை
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளை_இறக்கை_வானம்பாடி&oldid=3925734" இலிருந்து மீள்விக்கப்பட்டது