வெரோனிக்கா கிலானி
வெரோனிக்கா கிலானி Veronica Giuliani கப்புச்சின் புனித கிளாரின் ஆண�� | |
---|---|
புனிதர் வெரோனிக்கா கிலானி | |
கன்னிமடத் தலைவி, மறை ஆற்றல் | |
பிறப்பு | [1] மெர்கடெல்லோ சுல் மெத்தாரோ, உர்பீனோ, இத்தாலி | 27 திசம்பர் 1660
இறப்பு | 9 சூலை 1727[1] சிட்டா டி கசுடெல்லோ, திருத்தந்தை நாடுகள் | (அகவை 66)
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | 17 சூன் 1804 by திருத்தந்தை ஏழாம் பயசு |
புனிதர் பட்டம் | 26 மே 1839 by திருத்தந்தை பதினாறாம் கிரகோரி |
முக்கிய திருத்தலங்கள் | புனித வெரோனிக்கா கிலானி மடப்பள்ளி, சிட்டா டி கசுட்டெல்லோ |
திருவிழா | சூலை 9[2] |
சித்தரிக்கப்படும் வகை | முட்களால் முடிசூட்டப்பட்டு சிலுவையைத் தழுவியவர் |
புனிதர் வெரோனிக்கா கிலானி (Veronica Giuliani; 27 திசம்பர் 1660 – 9 சூலை 1727)[1] என்பவர் இத்தாலிய கப்புச்சின் வறிய கிளாரசு அமைப்பைச் சேர்ந்த அருட்சகோதரி ஆவார். இவர் 1839 ஆம் ஆண்டில் பதினாறாம் கிரகோரி திருத்தந்தையினால் புனிதராக அறிவிக்கப்பட்டார்.
பெற்றோர்
[தொகு]தந்தை பெயர் பிரான்செஸ்கோ ஆவார். தாய் பெனேடேட்டா ஆவார். இவர்களது ஏழாவது பெண் குழந்தையாகப் பிறந்தவர் வெரோனிகா ஆவார்.
திருக்காட்சி
[தொகு]இவர் சிறு வயதில் முன் கோபியாகவும் முரட்டுத்தனமாகவும் இருந்தார். இவரின் பதினாறாவது வயதில் இவர் கண்ட திருக்காட்சி இவரது குணத்தை மாற்றி அமைத்தது. தந்தையார் ஏற்பாடு செய்த திருமணத்தில் விருப்பமின்றி கபுச்சின் புவர் கிளாரா என்ற பெண் துறவு மன்றத்தில் இணைந்தார். தந்தை இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ரோமன் கத்தூளிக்க திருச்சபையை இவர் ஏற்றுக்கொண்ட சபையாகும்.
பெயர் ஏற்பு
[தொகு]இறைவனின் பாடுகளின் நினைவாக வெரோனிகா ஆன்மீகப் பெயரை ஏற்றார்.
துறவறப் பணி
[தொகு]துறவறம் ஏற்ற ஆரம்ப காலத்தில் சமையலறை, மருத்துவமனை., புனிதப் பாத்திரங்கள் மற்றும் அங்கிகள் பராமரிக்கும் இடங்களில் வேலைப் பார்த்தார். மேலும் சுமைதூக்கும் பணியாளராகவும் பணி செய்தார்.
இறை பக்தி
[தொகு]தனது வாழ்நாள் முழுவதும் கிறிஸ்துவின் பாடுகளின்பால் அளப்பரிய பற்று கொண்டிருந்தார். அப்பற்று காரணமாக கடவுளின் முள்முடி மற்றும் அவரது உடல் அடையாளங்கள் இவர் உடம்பில் வெளிப்பட்டது.
இறப்பு
[தொகு]1727 ஜூலை 9 இல் 66 வது வயதில் இத்தாலியிலுள்ள சிஸ்டா டி கஸ்டெல்லோ என்ற இடத்தில் மரித்தார்.
புனிதர் பட்டம்
[தொகு]இவருக்கு முக்தி பேரு பட்டத்தினை 1804 ஆம் ஆண்டு ஜூன் 17 இல் திருத்தந்தை ஏழாம் பயஸ் வழங்கினார். புனிதர் பட்டம் 1839 மே 26 இல் திருத்தந்தை பதினாறாம் கிரகோரி வழங்கினார். ஜூலை 9 ஆம் நாள் இவரது நினைவு நாளாக கத்தோலிக்கார்களால் கொண்டாடப்படுகிறது.
பார்வை நூல்
[தொகு]புனிதர்களின் வரலாறு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Pope Benedict XVI, "Saint Veronica Giuliani", General audience, December 15, 2010 w2.vatican.va, accessed 17 November 2019
- ↑ St. Veronica Giuliani www.catholic.org/saints, accessed 17 November 2019
வெளி இணைப்புகள்
[தொகு]- இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீடு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது: "St. Veronica Giuliani". Catholic Encyclopedia. (1913). நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன்.
- Br. Mauro Jöhri, General Minister OFMCap on The 350 Anniversary of the Birth of Saint Veronica Giuliani at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது ஆகத்து 3, 2012)
- Monastery of Saint Veronica Giuliani, Willington, DE
- Saint Veronica Giuliani at Patron Saints Index at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது மே 3, 2008)
- [1]