விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 24
Appearance
- 1882 – காச நோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார்.
- 1896 – வரலாற்றில் முதன் முதலாக வானொலி சமிக்கையை உருசிய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் (படம்) உருவாக்கினார்.
- 1946 – பிரித்தானிய அமைச்சரவைத் தூதுக்குழு பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியை இந்தியத் தலைமையிடம் ஒப்படைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக இந்தியா வந்தது.
- 1965 – இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டிற்கு முன்னுரிமை வழங்கவும், அங்கு அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழி பேசுவோருக்கு முன்னுரிமை வழங்கவும் டட்லி-செல்வா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- 1965 – நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிக்கு அனுப்பியது.
- 1977 – இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினரல்லாத முதலாவது பிரதமராக மொரார்���ி தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பி. எஸ். இராமையா (பி. 1905) · டி. எம். சௌந்தரராஜன் (பி. 1922) · சீர்காழி கோவிந்தராஜன் (இ. 1988)
அண்மைய நாட்கள்: மார்ச்சு 23 – மார்ச்சு 25 – மார்ச்சு 26