வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் திசம்பர் 2014
Appearance
- டிசம்பர் 31:
- இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501: போர்னியோவிற்கு அருகில் மூழ்கிய விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட இருவரின் உடல்கள் சுரபயாவிற்கு எடுத்து வரப்பட்டன. (பிபிசி)
- வெனிசுவேலாவில் அதிகாரபூர்வமாக பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்தது. (பிபிசி)
- இலங்கை இரட்டைக் குடியுரிமை வழங்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தியது. (தினகரன்)
- இலங்கையின் அட்டன் நகரில் பேருந்து ஒன்று பள்ளம் ஒன்றில் வீழ்ந்ததில் மூவர் கொல்லப்பட்டனர், 39 பேர் காயமடைந்தனர். (தினகரன்)
- டிசம்பர் 30:
- 1936, 1937 இல் சிறந்த நடிகைக்கான அகாதமி விருது பெற்ற அமெரிக்க நடிகை லூயிசு ரைனர் தனது 104வது அகவையில் காலமானார். (பிபிசி)
- இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501: போர்னியோ அருகுல் சாவகக் கடலில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறைந்தது 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. (பிபிசி)
- இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு நிபந்தனையின்றி ஆதரவளிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. (பிபிசி)
- இந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவுக்கு எதிரான தேர்வுப் போட்டித் தொடரில் தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணித் தலைவர் மகேந்திரசிங் தோனி தேர்வுப் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறவிருப்பதாக அறிவித்தார். (பிபிசி)
- டிசம்பர் 29:
- சோமாலியாவில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் படையினருடன் இணைந்து சோமாலியப் படையினர் நடத்திய தாக்குதல்களில் ஏழு நகரங்களை அல்-சபாப் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றினர். (கரோவி ஒன்லைன்)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: கிளாஸ்கோவில் சியேரா லியோனியில் இருந்து வந்த பெண்ணொருவருக்கு எபோலா நோய் தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தில் முதன் முறையாக எபோலா தீநுண்ம நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (பிபிசி)
- டிசம்பர் 28:
- போகோ அராம் தீவிரவாதிகள் கமரூன் கிராமம் ஒன்றைத் தாக்கி 30 பேரைக் கொன்றனர். (நியூசு24)
- இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் நோக்கி 162 பேருடன் சென்ற இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501 சாவகக் கடல் வான்பரப்பில் காணாமல் போனது. (பிபிசி)
- கிரேக்கத்தில் இருந்து 416 பேருடனும், 222 வாகனங்களுடனும் சென்ற இத்தாலியைச் சேர்ந்த பயணிகள் கப்பல் தீப்பற்றியது. ஒருவர் உயிரிழந்தார். (தி இன்டிபென்டென்ட்),(பிபிசி)
- இத்தாலி, ஏட்ரியாட்டிக் கடலில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதியதில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார். (ராய்ட்டர்சு)
- இலங்கையில் ஒரு வாரமாகப் பெய்யும் மழை, மற்றும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவினால் குறைந்தது 24 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காணாமல் போயினர். (சப்பான் டைம்சு)
- இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தனது ஆதரவைத் தெரிவித்தது. அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். (தி ஐலண்டு)
- டிசம்பர் 27:
- 2014 தென்கிழக்காசிய வெள்ளப்பெருக்கு: மலேசியாவில் குறைந்தது 5 பேரும், தாய்லாந்தில் 8 பேரும் உயிரிழந்தனர். (தி இன்டிபென்டென்ட்),(பான்கொக் போஸ்ட்)
- டிசம்பர் 26:
- உக்ரைன் மற்றும் தோனெத்ஸ்க் உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்கள் 370 போர்க் கைதிகளைப் பரிமாறிக் கொண்டனர். (ஏபிசி)
- பிலிப்பீன்சில் 46-ஆண்டு கம்யூனிசக் கிளர்ச்சிகளை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுகள் ஆரம்பமாயின. (டெய்லி மெயில்')
- 2014 தென்கிழக்காசிய வெள்ளப்பெருக்கு: தீபகற்ப மலேசியாவில் 100,000 இற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர். (வேர்ல்ட் புலெட்டின்)
- இலங்கையில் கிழக்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்களில் இடம்பெற்ற பெரும் வெள்ள்ப்பெருக்கில் 664,893 பேர் இடம்பெயர்ந்தனர், 7 பேர் உயிரிழந்தனர், இருவர் காணாமல் போயினர். (தி ஐலண்டு)
- இலங்கையின் பதுளையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர். (சண்டேடைம்சு)
- 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் 10 ஆண்டு நிறைவை இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகள் நினைவு கூர்ந்தன. (பிபிசி)
- டிசம்பர் 25:
- லிபியாவின் சிர்த்தே நகரில் மின்னுற்பத்தி நிலையம் ஒன்றை இசுலாமியத் தீவிரவாதிகள் தாக்கியதில் குறைந்தது 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- சோமாலியாவின் மொகதிசு நகரில் அல்-சபாப் தீவிரவாதிகள் தாக்கியதில் மூன்று ஐநா அமைதிப் படையினர் கொல்லப்பட்டனர். (அல்ஜசீரா)
- ஈராக்கிய கிறித்தவர்கள் பக்தாத் நகரில் கிறித்துமசு தினத்தைக் கொண்டாடினர். (நியூயோர்க் டைம்சு)
- உருசியத் தலைவர் விளாதிமிர் பூட்டின் வோட்கா மதுபானத்திற்கு விலைக்கட்டுப்பாட்டை அறிவித்தார். (நியூயார்க் டெய்லி நியூசு)
- டிசம்பர் 24:
- இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தையவர்களுக்கும், கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் பலர் காயமடைந்தனர். (ஐலண்டு)
- சிரியாவின் வடக்கே ஜோர்தானிய விமானப்படை விமானம் ஒன்று வீழ்ந்தது, விமான ஓட்டி இசுலாமிய தேசத் தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்டார். (பிபிசி)
- வடகொரியாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சொனி பிக்சர்சு தனது சர்ச்சைக்குரிய தி இன்டர்வியூ திரைப்படத்தை யூடியூப், கூகுள் பிளே ஆகிய சமூக தளங்களில் வெளியிட்டது. (ராய்ட்டர்சு)
- டிசம்பர் 23:
- 1971 விடுதலைப் போரின் போது போர்க்குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வங்காளதேசத்தின் முன்னாள் அமைச்சர் சையது முகம்மது கைசார் (73) என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. (பிபிசி)
- இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டனர். போடோலாந்து தீவிரவாதிகளே தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. (என்டிரிவி)
- நேட்டோ அமைப்பில் இணைந்து கொள்ளும் முகமாக உக்ரைன் நாடாளுமன்றம் சட்டமியற்றியது. (பிபிசி)
- டிசம்பர் 22:
- 2014 பெசாவர் பள்ளிக்கூடத் தாக்குதல்: அடுத்த சில கிழமைகளில் 500 போராளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என பாக்கித்தான் அறிவித்தது. (ஏஎஃப்பி)
- நைஜீரியாவின் கோம்பே, பவுச்சி நகரங்களில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஸ்கொட்லாந்து, கிளாஸ்கோ நகரில் குப்பை சேகரிக்கும் பாரவுந்து ஒன்று தாறுமாறாக ஓடியதில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசு கட்சி பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவிற்குத் தமது ஆதரவைத் தெரிவித்தது. (தி ஐலண்டு)
- இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை, மற்றும் வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். (பிபிசி),(பிபிசி)
- தெற்கு சூடானுக்கு ஐநா அமைதிப் பணிக்காக 700 இராணுவத்தினரை அனுப்புவதற்கு [[மக்கள் சீனக் குடியரசு]|சீனா]] முடிவு செய்தது. (பிபிசி)
- டிசம்பர் 21:
- இந்தோனேசியாவின் அல்மாகேரா தீவில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (இந்தியா டைம்சு)
- ஜோர்தானில் எட்டு ஆண்டுகளின் பின்னர் 11 ஆண்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. (அல்ஜசீரா)
- இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: தேர்தலில் அனைத்து தமிழரும் வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டது. (பிபிசி)
- டிசம்பர் 20:
- பகுரைனில் குண்டு ஒன்று வெடித்ததில் மூன்று காவல்துறையினர் காயமடைந்தனர். (ஏபி)
- இங்கிலாந்தில் ஸ்டோன் ஹெஞ்ச்சில் 6,000 ஆண்டுகள் பழைமையான கரி கண்டுபிடிக்கப்பட்டது. (அஃப்டிங்டன் போஸ்ட்)
- டிசம்பர் 19:
- ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கேர்ன்சு நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பிள்ளைகள் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டனர். பிள்ளைகளின் தாய் கைது செய்யப்பட்டார். (தி கார்டியன்)(பொக்சு நியூஸ்)
- பாக்கித்தானின் பழங்குடிப் பகுதிகளின் இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் 77 போராளிகள் கொல்லப்பட்டனர். (ஏபி)
- வடகொரியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தமைக்காக ஒன்றுபட்ட முன்னேற்றக் கட்சி என்ற அரசியல் கட்சியை தென்கொரிய நீதிமன்றம் கலைக்க உத்தரவிட்டது. (ஏபி)
- டிசம்பர் 18:
- இந்திய எல்லைகளை தவறாக சித்தரித்ததாக இந்திய நில அளவை திணைக்களம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூகுள் மேப்ஸ் நிறுவனத்தின் மீது இந்திய தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. (அவுட் லுக் இந்தியா),(பிசினஸ் ஸ்டாண்டர்ட்)
- நைஜீரியாவில் போகோ அராம் தீவிரவாதிகளுடன் போரிட மறுத்த 54 இராணுவத்தினருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. (தினகரன்)
- பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை விட்டு அந்நாட்டுப் படைகள் 2 ஆண்டுகளுக்குள் வெளியேற வேண்டும் என ஐ.நா கெடு விதித்தது. (அல்ஜசீரா)
- ஐக்கிய அமெரிக்காவில் 2014 ஆம் ஆண்டில் 35 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது. (யூஎஸ்ஏ டுடே)
- இந்தியாவின் ஜி. எஸ். எல். வி மார்க் III விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. (டைம்சு ஒஃப் இந்தியா)
- டிசம்பர் 17:
- ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து பாலத்தீன ஹமாஸ் அமைப்பை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கியது. (அல்ஜசீரா)
- ஆப்கானிஸ்தானில், வங்கியொன்றில் தாலிபான்கள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 3 காவல்துறையினர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். (டெய்லி கொரியர்)
- எகிப்தின் மத்தியில் உள்ள பாயும் நகரில் 300 ஏக்கர் மயானத்தில் 10 லட்சம் மம்மிகள் உள்ளதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். (அன்சிஎன்ட் ஒரிகின்ஸ்)
- 55 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்காவும் கியூபாவும் தூதரக உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டன. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை விலக்கல் குறித்த பேச்சுக்கள் ஆரம்பமாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. (டெய்லிபீஸ்ட்)
- டிசம்பர் 16:
- 2014 பெசாவர் பள்ளிக்கூடத் தாக்குதல்: பாக்கித்தான், பெசாவர் நகரில் இராணுவத்தினரால் நடத்தப்படும் பள்ளிக்கூடம் ஒன்றில் தாலிபான்கள் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 132 சிறுவர்கள் உடபட குறைந்தது 141 பேர் வரை கொல்லப்பட்டனர். ஆறு தாலிபான்கள் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)(பிபிசி)(நியூயோர்க் டைம்சு)(பிசினெசு டைம்சு)
- டுவிட்டரில் இசுலாமிய தேச அமைப்புக்கு ஆதரவாக பரப்புரை செய்துவந்த பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவ்வமைப்பை இந்தியா தடை செய்தது. (ராய்ட்டர்சு)
- இலங்கையில் யாழ்ப்பாண மாவட்ட வளர்ச்சிப் பணிகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக வட மாகாணசபை அமைச்சர் பொ. ஐங்கரநேசன் உட்பட பலர் தாக்குதலுக்கு உள்ளாகினர். (தமிழ்நெட்)(பிபிசி)
- டிசம்பர் 15:
- அகதிகள் என்ற போர்வையில் இஸ்லாமியர்கள் ஜெர்மனியில் குடியேறுவதாகக் கூறி,இஸ்லாமியமயமாக்கலுக்கு எதிரான உண்மை ஐரோப்பியர்கள்' (பெகிடா) என்ற அமைப்பு மாபெரும் எதிர்ப்பு பேரணி நடத்தியது.(தெ கார்டியன் ),(இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ்)
- ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் உணவுசாலை ஒன்றில் ஆயுதம் தாங்கிய நபர் 17 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்த நிகழ்வு 16 மணி நேரத்தின் பின்னர் டிசம்பர் 16 அதிகாலை காவல்துறையின் அதிரடித் தாக்குதல் மூலம் முடிவுக்கு வந்தது. இரண்டு பணயக் கைதிகளும் துப்பாக்கி நபரும் கொல்லப்பட்டனர். நால்வர் காயமடைந்தனர். (சிட்னி மோர்னிங் எரால்டு)(பிபிசி) (ஏபிசி) (எரால்டு)(சிஎனென்) (ஏபிசி)
- பாகிஸ்தானை சேர்ந்த சைபர் லயன் என்ற அமைப்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணையதளத்தை செய்து முடக்கினர். (தினமலர்)
- ஐக்கிய அமெரிக்காவின் தலைமை மருத்துவராக விவேக் மூர்த்தியை மேலவை 51–43 வாக்குகளால் தேர்ந்தெடுத்தது. (சிபிஎஸ்)
- டிசம்பர் 14:
- சிரிய உள்நாட்டுப் போர்: பசார் அல்-அசத் ஆதரவுப் படையினருக்கும், இசுலாமியப் போராளிகளுக்கும் அலெப்போவில் இடம்பெற்ற மோதல்களில் 34 போராளிகள் கொல்லப்பட்டனர். (ஃபொக்சு)
- தென் ஆப்பிரிக்காவின் ரோலீன் ஸ்ட்ரவுஸ் 2014க்கான உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். (பிபிசி)
- மோசமான வானிலை காரணமாக காங்கோ, தங்கனீக்கா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 129 பேர் உயிரிழந்தனர். (மிரர்)
- டிசம்பர் 13:
- 2014 இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயண ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடரை இலங்கைத் துடுப்பாட்ட அணி வென்றது.(பிபிசி)
- ஆப்கானித்தானில் இரண்டு அமெரிக்கப் படையினர் உட்பட 22 பேர் தாலிபான்களின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். (ஏபி)
- ஈரா��்கில் சாமர்ரா நகரில் இசுலாமிய தேசத் தீவிரவாதிகள் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றைச் சுட்டு வீழ்த்தினர். (ஏபி)
- இந்தோனேசியாவின் சாவா தீவில் இடம்பெற்ற நிலச்சரிவு மற்றும் மழையில் 17 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோரைக் காணவில்லை. (பிபிசி)
- அணுவாற்றல், மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவுக்கும் உருசியாவுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. (ராய்ட்டர்சு)
- தாய்லாந்து இளவரசரின் மனைவி இளவரசி சிறீராஸ்மி அவரது உறவினர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து தனது அரசுப் பதவியைத் துறந்தார். (ஏபிசி), (எஸ்பிஎஸ்)
- டிசம்பர் 12:
- இலண்டன் விமானப் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலண்டன் விமான நிலையங்களில் விமான சேவைகள் சுமார் ஒரு மணி நேரம் முடங்கின.. (பிபிசி)
- சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில், முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவுக்குத் தடை விதிக்கப்பட்டது.(தினமணி)
- இலங்கை கொழும்பு நகரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள அத்துருகிரிய என்ற இடத்தில் வான்படையின் அந்தோனொவ்-32 ரக விமானம் ஒன்று வீழ்ந்து எரிந்ததில் 4 படையினர் கொல்லப்பட்டனர். ஒருவர் கடும் காயங்களுடன் உயிர் தப்பினார். (டெய்லிமிரர்)
- டிசம்பர் 11:
- உலக அமைதிக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி .சீனாவின் அமைதிக்கான கன்பூசியஸ் பரிசு, கியூபாவின் புரட்சியாளரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோவுக்கு வழங்கப்பட்டது.(கார்டியன்)
- அரபிக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 58 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்தனர்.(ஒன் இந்தியா)
- ஜூன் 21ம் தேதியை 'சர்வதேச யோகா தின'மாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக் கையை ஏற்று ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21ம் தேதியை 'சர்வதேச யோகா தின'மாக அறிவித்தது. (ராய்ட்டர்சு)
- காபூலில் தாலிபான் தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது ஆறு ஆப்கானியப் படையினர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- ஆப்கானித்தானில் உள்ள கடைசி அமெரிக்க தடுப்பு முகாமை மூட அமெரிக்கத் தலைவர் பராக் ஒபாமா உத்தரவிட்டார். (நியூயார்க் டெய்லி நியூஸ்)
- நைஜீரியாவின் மத்தியில் ஜோசு நகரில் இடம்பெற்ற இரண்டு குண்டுத் தாக்குதல்களில் 40 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- பிரித்தானியக் காவல்துறையினர் "தோழர் பாலா" என அழைக்கப்படும் அரவிந்தன் பாலகிருஷ்ணன் என்பவருக்கு எதிராக 3 பெண்களை 30 ஆண்டுகளாக அடிமைகளாக அடைத்து வைத்திருந்தமை, மற்றும் பாலியல் வன்புணர்வு உட்பட 25 குற்றங்களுக்காக வழக்குத் தொடர்ந்துள்ளனர். (ஏபி)
- டிசம்பர் 10:
- மேற்குக் கரையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் இசுரேலிய இராணுவத்தினருடனான மோதல் ஒன்றின் போது பலத்தீன அமைச்சர் சியாத் அபு எயின் கொல்லப்பட்டார். (சீஎனென்)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா நோய்க்கு எதிராகப் போராடும் மருத்துவக் குழுவிற்கு டைம் இதழின் ஆண்டின் மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். (ஏபி)
- மருத்துவ ஆய்வுகளில் பயன்படுத்தக்கூடிய குருத்தணுவின் புதிய வகை ஒன்றைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக டொராண்டோ பல்கலைக்கழக அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர். (சிபிசி)
- பாக்கித்தானின் மலாலா யூசப்சையி, இந்தியாவின் கைலாசு சத்தியார்த்தி ஆகியோர் ஒஸ்லோவில் தமது 2014 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டனர். (டெய்லிடைம்சு)
- டிசம்பர் 9:
- பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 205-ஆவது உறுப்பு நாடாக கொசோவோ அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது. இக் குழுவின் 127-ஆவது முழு அமர்வுக் கூட்டத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.(ப.ஒ.கு அதிகாரபூர்வ இணையதளம்)
- ஏமனில் அன்சார் அல்-சரியா போராளிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 7 படையினர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
- மாலியில் தன்ஸிம் அல்-காயிதா ஃபி பிலாத் அல்-மஹ்ரிப் அல்-இஸ்லாமி போராளிகள் மூன்றாண்டுகளுக்கு முன்னர் பிடித்து வைத்திருந்த சேர்சி லசாரெவிச் என்ற பிரெஞ்சு நபரை விடுவித்தனர். (நியூயோர்க் டைம்சு)
- டிசம்பர் 8:
- பிலிப்பீன்சின் கிழக்கு சமார் மாகாணத்தைத் தாக்கிய ஹகுபிட் புயலின் தாக்கத்தினால் பொரொங்கன் நகரில் குறைந்தது 27 பேர் உயிரிழந்தனர். (ராய்ட்டர்சு)
- லாஸ் ஏஞ்சலஸ் நகர மையத்தில் அடுக்கு மாடிக் கட்டடங்கள் தீப்படித்ததில் பெரும் சேதம் ஏற்பட்டது. (ஹாலிவுட் ரிப்போர்ட்டர்)
- வாசிங்டனுக்கு அருகில் சிறியரக விமானம் ஒன்று வீடு ஒன்றின் மீது வீழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். (ஸ்கை)
- இசுரேலிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. புதிய தேர்தல்கள் 2015 மார்ச் 17 இல் நடைபெறும். (ஏபி)
- இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிரிசேன உட்பட 19 பேர் தேர்தல் வேட்பு மனுக்கள் சமர்ப்பித்தனர். (ஏபிசி),(தினக்குரல்)
- டிசம்பர் 7:
- இந்தோனேசியாவில் கடலுக்கடியில், 6 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. (ஸ்கை நியூஸ்)
- சீனாவின் சிபெர்ஸ்-4 செயற்கைக்கோள் வெற்றிகரமாக .விண்ணில் ஏவப்பட்டது. (தினகரன்)
- பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் சகலதுறை வீரர் முகம்மது அபீசின் பந்துவீச்சு சட்டவிரோதமானது என பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை அறிவித்துள்ளதுடன் அவரை பன்னாட்டுப் போட்டிகளில் பந்துவீசுவதிலிருந்து இடைநிறுத்தியது. (டெய்லி மெயில்)
- தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டாமல் எச்சரிக்கக்கூடிய கைத்தொலைபேசி செயலி ஒன்றை தூத்துக்குடி பொறியாளர் ரெசிங்டன் என்பவர் உருவாக்கினார். (பிபிசி)
- காங்கோ, வடக்கு கிவூ மாகாணத்தில் உகாண்டா போராளிகளும் உகாண்டா விடுதலைக்கான தேசிய இராணுவத்தினரும் 36 பேரைக் கொன்றனர். (ஏபிசி)
- நேபாளத்தின் மேற்கே மலைப்பகுதி ஒன்றில் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழ்ந்தனர். (அல்ஜசீரா)
- டிசம்பர் 6:
- பார்முலா 1 தானுந்து பந்தயங்களின் வெற்றிரகமான அணிகளில் ஒன்றான ரெட் புல் அணி போட்டிகளில் வென்ற பல்வேறு சம்பியன் கிண்ணங்கள், கேடயங்கள் திருடப்பட்டன:(என் பி சி),(பிபிசி)
- யெமனில் கடத்தப்பட்டுப் பணயக்கைதிகளாகவிருந்த ஓர் அமெரிக்கரும், ஒரு தென்னாப்பிரிக்கரும், அமெரிக்கக் கடற்படையின் மீட்புப் பணிகளின் போது கொல்லப்பட்டனர். (CNN)
- எத்தியோப்பியாவைச் சேர்ந்த அகதிகள் 70 பேரை ஏற்றிச் சென்ற படகு ஏமன் நாட்டின் மேற்கு கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் அப்படகில் பயணம் செய்த அனைவரும் பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். (பிக் ஸ்டோரி)
- ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் UTC இரவு 8:00 மணிக்கு விழித்துக் கொண்டது. இது புளூட்டோ மற்றும் அதன் சந்திரன்களை ஆராயும்.(எல்லே டைம்சு)
- டிசம்பர் 5:
- இந்தியாவின் ஜம்மு–காஷ்மீர் மாநிலத்திலுள்ள இராணுவ முகாம் ஒன்றின் மீது போராளிகள் நடத்திய தாக்குதலில் 7 இந்திய இராணுவர்கள், 3 உள்ளூர் காவல்துறையினர், 6 தீவிரவாதிகள் என 16 பேர் கொல்லப்பட்டனர். (இந்தியா டுடே),(ராய்ட்டர்சு)
- சோமாலியாவின் பைடோவா நகரில் அல் சபாப் போராளிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். (அல்ஜசீரா)
- கிரேக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட எல்கின் சலவைக் கற்களில் ஒன்றை சென் பீட்டர்ஸ்பேர்க் எர்மிட்டேச் அருங்காட்சியகத்திற்கு கடனாக வழங்கவிருப்பதாக பிரித்தானிய அருங்காட்சியகம் அறிவித்தது. (சீஎனென்)
- நாசாவின் ஒராயன் விண்கலம் தனது முதலாவது சோதனைப் பறப்பை வெற்றிகரமாக நிறைவேற்றியது. (சீஎனென்)
- டிசம்பர் 4:
- மாலைதீவு தலைநகர் மாலேயில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. (பிபிசி)
- உருசியாவின் குரோசுனி நகரில் இசுலாமியப் போராளிகளுடனான மோதலில் 10 படையினரும், 10 போராளிகளும் கொல்லப்பட்டனர். (ஆர்டி)
- டிசம்பர் 3:
- பூமிக்கடியில் புதைந்த 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாளிகையை .இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்லியல் துறையினர் கண்டுபிடித்தனர்.(இண்டிபெண்டெண்ட்)
- 2014 ஆம் ஆண்டுக்கான ஊழல் மலிவுச் சுட்டெண் வெளியிடப்பட்டது. டென்மார்க் முதலிடத்தையும், வடகொரியா, சோமாலியா ஆகியன கடைசி இடத்தையும் பிடித்தன. (ராய்ட்டர்சு)
- சப்பான் (162173) 1999 ஜேயூ3 என்ற சிறுகோளில் இருந்து மண், பாறை மாதிரிகளை எடுத்துவர தனது ஹயபுசா 2 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது. (ஏபி)
- டிசம்பர் 2:
- தமிழீழ விடுதலைப் புலிகளால் இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் உட்பட 80 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட இடங்களில் தடயவியல் சோதனை ஆரம்பிக்கப்பட்டது. (மெட்ரோ நியூஸ்)(��மிழ்வின்)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: சியேரா லியோனியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,530 ஆக அதிகரித்தது. 7,109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். (டெய்லி மெயில்)
- கெய்ரோவில் காவல்நிலையம் ஒன்று தாக்கப்பட்ட வழக்கு ஒன்றில் 185 பேருக்கு எகிப்திய நீதிமன்றம் ஒன்று மரணதண்டனை வழங்கித் தீர்ப��பளித்தது. (ராய்ட்டர்சு)
- டிசம்பர் 1:
- பப்புவா நியூ கினியில் லாயி நாட்சாப் என்ற இரண்டாவது பெரிய விமான நிலையத்தைச் சுற்றி வளைத்த 30 ஆயுதம் தாங்கிய நபர்கள் பயணிகளையும் ஊழியர்களையும் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து விமானநிலையத்தை சூறையாடிச் சென்றனர். (ஏபிசி)
- 2014 ஆங்காங் எதிர்ப்புகள்: சனநாயக ஆதரவு போராட்டக்காரர்களுக்கும், ஹொங்கொங் காவல் துறையினருக்கும் இடையே அரசு மாளிகைக்கு முன்னால் கைகலப்பு இடம்பெற்றது. (நியூயோர்க் டைம்சு)
- இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2015: எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவிற்கும், ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா, மற்றும் பல எதிர்க் கட்சித் தலைவர்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றவில்லை. (டெய்லிமிரர்)
- ஈராக்கில் இசுலாமிய தேச கிளர்ச்சியாளர்கள் சிரிய எல்லையில் 15 காவல்துறையினரைக் கொன்றனர். ஈராக் உட்துறை அமைச்சில் 24 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். (ஏபி)
- உருசியா புதிய தேசியப் பாதுகாப்பு நிலையம் ஒன்றை மாஸ்கோவில் ஆரம்பித்தது. (ஆர்ரி)
- உருசியாவின் சுக்கோத்கா வட்டாரத்தில் பெரிங் கடற்பகுதியில் 52 பேருடன் தென்கொரிய மீன்பிடிப் படகு ஒன்று கடுமையான காலநிலையை அடுத்து காணாமல் போனது. (வொயிஸ் ஒஃப் அமெரிக்கா)
- உலக எயிட்சு நாள் நினைவுகூரப்பட்டது. (ராய்ட்டர்சு)