வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/17
ஜேம்ஸ் மைக்கல் அண்டர்சன்: (James Michael Anderson, பிறப்பு: ஜூலை 30, 1982) (பொதுவாக ஜிம்மி அண்டர்சன் என்று அறியப்படுகிறார்) ஓர் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஆவார். அனைத்துக் காலங்களிலும் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முன்னணி இடம் பெற்றுள்ள அண்டர்சன், 500 தேர்வு மட்டையாளர்களை வீழ்த்தியதன் மூலம் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் முதல் இடத்தையும், பன்னாட்டு அளவில் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளார். தற்போது ஐசிசியின் தேர்வு பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதுவரை மொத்தம் 575 மட்டையாளர்களை வீழ்த்தியுள்ள அண்டர்சன், அனைத்துக் காலங்களிலும் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய தேர்வு பந்துவீச்சாளர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2014 இல் முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின்போது இவரும் ஜோ ரூட்டும் இணைந்து 198 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் 10வது இழப்பில் இணைந்து அதிகபட்ச ஒட்டங்கள் எடுத்தவர்கள் எனும் சாதனையைப் படைத்தனர்.