வடக்கு வசீரிஸ்தான் மாவட்டம்
வடக்கு வசீரிஸ்தான் | |
வடக்கு வசீரிஸ்தான் | |
பரப்பளவு | 4,707 சகிமீ (1,817 சதுர மைல்) km² |
மக்கள்தொகை (2017) • அடர்த்தி |
543,254 • 120/km2 (300/sq mi)/km² |
நேர வலயம் | PST (ஒ.ச.நே + 05:00) |
Established • Political Agent • Number of வட்டம் (தாலுகாவட்டங்கள் |
1910 • முகமது யாகியா அக்குன்சடா • 9 |
Main language(s) | பஷ்தூ |
வலைத்தளம் | http://fata.gov.pk/facility-home.php?fid=35 |
வடக்கு வசீரிஸ்தான் (உருது: شمالی وزیرستان) பாகிஸ்தான் நாட்டின் 2018-ஆம் ஆண்டு வரை நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில் உள்ள ஒன்றாகும். பாகிஸ்தானின் வடமேற்கில் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இப்பகுதியும் தெற்கு வசீரிஸ்தான் பகுதியும் சேர்ந்து வசீரிஸ்தான் பகுதியில் அடக்கி இருக்கின்றன.
7 நடுவண் நிர்வாகத்தில் பழங்குடி முகமைகளில் (FATA) வடக்கு வசீரிஸ்தான் முகமையும் ஒன்றாகும். பிற பழங்குடி முகமைகள் தெற்கு வசீரிஸ்தான் முகமை, குர்ரம் முகமை, கைபர் முகமை, ஒரக்ழை முகமை, முகமது முகமை மற்றும் பஜௌர் முகமை ஆகும்.
பேஷாவர் நகரின் மேற்கிலும் தென்மேற்கிலும் இப்பகுதி அமைந்துள்ளது. பெரும்பான்மையாக வசீர் மற்றும் தவரி ஆகிய இரண்டு பஷ்தூன் பழங்குடிகள் இப்பகுதியில் வசிக்கின்றனர்.[1] வடக்கு வசீரிஸ்தான் முகமையில் 9 தாலுக்காக்கள் உள்ளது.
எல்லைகள்
[தொகு]வடக்கு வசீரிஸ்தான் முகமைக்கு தெற்கில் தெற்கு வசீரிஸ்தான், வடக்கில் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள், கிழக்கில் கைபர் பக்துன்வா மாகாணம், மேற்கில் ஆப்கானித்தான் எல்லைகளாக உள்ளது.
கைபர் பக்துன்வா மாகாணத்தில்
[தொகு]நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் தீவிரவாதிகளின் பிடியில் இருப்பதால், 2018-இல் பாகிஸ்தான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, இப்பகுதியை கைபர் பக்துன்வா மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. [2] [3]அது முதல் வடக்கு வசீரிஸ்தான் முகமை, கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஒரு மாவட்டமாக விளங்கி வருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ North Waziristan Agency
- ↑ Pakistan parliament passes landmark tribal areas reform
- ↑ Shaping new peace in pakistans tribal areas