வஞ்சித்துறை
வஞ்சித்துறை தமிழ் பாவினங்களில் ஒன்றான துறையின் வகைகளுள் ஒன்று. நான்கு குறளடி (இரு சீர் அடிகள்) கொண்டு தனித்து அமையும். இது பல்வேறு ஒசை அமைப்புகளில் அமையும். [1] [2]
- எடுத்துக்காட்டு 1
மைசிறந்தன மணிவரை
கைசிறந்தன காந்தளும்
பொய்சிறந்தனர் காதலர்
மெய்சிறந்திலர் விளங்கிழாய்.
- யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்
- எடுத்துக்காட்டு 2
உள்ளம் உரைசெயல்
உள்ளஇம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்திறை
உள்ளில் ஒடுங்கே
- திருவாய்மொழி - 2693
உசாத்துணை
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑
‘குறளடி நான்மையிற் கோவை மூன்றாய்
வருவன வஞ்சித் தாழிசை; தனிவரின்
துறையென மொழிப துணிந்திசி னோரே’. (யாப்பருங்கலம் நூற்பா 91) - ↑
‘ஒன்றினை நான்மை உடைத்தாய்க் குறளடி
வந்தன வஞ்சித் துறையெனல் ஆகும்’.
‘குறளடி நான்கின் கூடின வாயின்
முறைமையின் அவ்வகை மூன்றிணைந் தொன்றி
வருவன வஞ்சித் தாழிசை ஆகும்’. என்றார் காக்கைபாடினியார்.
‘எஞ்சா இருசீர் நாலடி மூன்றெனில்
வஞ்சித் தாழிசை; தனிவரிற் றுறையே’. என்றார் சிறுகாக்கைபாடினியார்.
‘இருசீர் நாலடி மூன்றிணைந் திறுவது
வஞ்சித் தாழிசை; தனிவரிற் றுறையே’. என்றார் அவிநயனார்.
‘இருசீர் நாலடி மூன்றிணைந் தொன்றி
வருவது வஞ்சித் தாழிசை; தனிநின்
றொருபொருள் முடிந்தது துறையென மொழிப’. என்றார் மயேச்சுரர். [[யாப்பருங்கல விருத்தி]] பக்கம் 379