லினக்சு வழங்கல்கள்
லினக்ஸ் கருவினை அடிப்படையாகக்கொண்டு, கணினிப்பயன்பாட்டுக்கு தேவையான பல்வேறு வகையான மென்பொருட்களை தொகுத்து ���க்கப்படும் இயங்குதளங்கள் லினக்ஸ் வழங்கல்கள் எனப்படுகிறது. இவை பெரும்பாலும் குனூ, திறந்த ஆணைமூல மென்பொருட்களை பெரும்பாலும் கொண்டிருக்கும். சிலவேளைகளில் லினக்ஸ் வழங்கல்களில் மூடிய ஆணைமூல மென்பொருட்களும் சேர்க்கப்படலாம்.
விளக்கம்
வின்டோஸ் இயங்குதளத்துக்கு பழக்கப்பட்டவர்கள் இத்தகைய வழங்கல்களை, 98, 2000, xp போன்று வெவ்வேறு பதிப்புகள் என நினைத்துவிடுகின்றனர். இது தவறாகும். உண்மையில் ஒரே நேரத்தில் பல வழங்கல்கள் ஒன்றாக வெளிவருகின்றன. ஒவ்வொரு வழங்கல்களும் தமக்கென பதிப்பு எண்களை கொண்டிருக்கின்றன. அதன்படி தமது வெளியீடுகளின் பிந்தைய பதிப்புக்களை குறித்த காலத்துக்கொருமுறை வெளியிடுகின்றன. (எ.கா Fedora core 3, Fedora core 4, Fedora Core 5, பெடோரா கோர் 6)
திறந்த ஆணைமூல மென்பொருள் உற்பத்தியானது உலகெங்கும் பரந்திருக்கும் கோடிக்கணக்கான ஆர்வலர்களால் வெவ்வேறு பிரதேசங்களில், வெவ்வேறு வலைத்தளங்கள் மூலம் இடம்பெற்றவண்ணமுள்ளது.
மேலே கூறப்பட்ட கரு, x server, பணிச்சூழல், செயலிகள் போன்றன இத்தகைய வெவ்வேறான மென்பொருள் விருத்தி திட்டங்களாகும்.
குனூ/லினக்ஸ் இயங்குதளம் என்பது இவ்வாறான மென்பொருட்களின் தொகுப்பாகும். இவ்வாறான கோடிக்கணக்கான மென்பொருட்களுள் பயனர் தனது தெரிவுகளை உரிய முறைப்படி தனித்தனியாக காம்பைல் செய்து நிறுவிக்கொண்டால்தான் குனூ/லினக்ஸ் இயங்குதளத்தை உருவாக்கி பயன்படுத்த முடியும். இது கடைகோடிப் பயனருக்கு மிகவும் சிரமமானது என்பதால், மேற்குறித்த வழங்கல்களை வழங்குவோர் தமக்கு பிடித்த தெரிவுகளை கொண்டு குனூ/லினக்ஸ் இயங்குதளம் ஒன்றினை உருவாக்கி அதனை இறுவட்டுக்களில் எழுதி வெளியிடுகிறார்கள். இவ்வாறான இறுவட்டுக்களை பெறும் பயனர், மிக இலகுவாக தனது கணினியில் குனூ/லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவிக்கொள்ள முடியும்.
பலலட்சக்கணக்கான திறந்த ஆணைமூல மென்பொருட்களுள் எவற்றை தொகுத்து இயங்குதளம் உருவக்கப்படுகிறது என்பதுதான் ஒவ்வொரு வழங்கல்களிடையேயும் உள்ள பிரதான வேறுபாடாகும். ஒவ்வொரு நிறுவனமும், தனது சிறப்பான தேவைகளுக்கும், ரசனைக்கும் ஏற்றபடி வெவ்வேறான மென்பொருட்களை தொகுத்து வெவ்வேறு வழங்கல்களை உருவாக்குகின்றன.
சில வழங்கல்களை இலவசமாக இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யலாம். சில வழங்கல்களை பொதி வடிவத்தில் நிறுவன ஆதரவுடன் பெற்றுக்கொள்ள சில வேளைகளில் பணம் கொடுக்கவேண்டியிருக்கும். உபுண்டு போன்றவழங்கல்கள் தபால் செலவைக்கூட செலுத்தாது இலவசமாக பெறப்படக்கூடியனவாகும்.
திறந்த ஆணைமூல மென்பொருட்கள் இலவசமாகவே பெரும்பாலும் கிடைத்தபோதும் வழங்கல்களை விலைக்கு விற்பது சாத்தியமானதே. பொது மக்கள் உரிம ஒப்பந்தம் இவ்வாறு விற்பதற்கு இடமளிக்கிறது.
வரலாறு
வழங்கல்கள் தோன்றுவதற்கு முற்பட்ட காலங்களில் சாதாரண லினக்ஸ் பயனாளர் ஒருவர் லினக்சை பயன்படுத்துவதற்கு யுனிக்ஸ் தொடர்பான சிறப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் , கோப்புக்களை எங்கே வைப்பது, என்னென்ன நிரல்கள் தேவைப்படும், என்னென்ன மென்பொருட்களை எப்படி நிறுவிக்கொள்வது போன்றவற்றை எல்லாம் தெரிந்து வைத்திருக்கவும் வேண்டிய நிலைஇருந்தது. லினக்சை கணினியில் ஆரம்பிக்கக்கூட சிறப்பு தேர்ச்சி தேவையாயிருந்தது.
லினக்ஸ் உருவாக்குனர்களை தவிர்ந்த பிறர் லினக்சினை பயன்படுத்த ஆரம்பித்தபோதுதான் வழங்கல்கள் என்ற எண்ணக்கரு உருவானது. செயலிகளையும் மென்பொருள்களையும் உருவாக்குவதை விட, அவற்றை பொதிசெய்தல், இறுவட்டுக்களில் வழங்கல், பயனர் எளிமை மிக்கதாக்கல், வசதியான ஆரம்பத்தில் உருவான வழங்கல்களாவன,தி முகாமைத்துவக்கட்டமைப்பினை உருவாக்கல் போன்றவற்றிற்கு அதிக் முக்கியத்துவம் தரப்பட்டது.
ஆரம்பகலங்களில் உருவான வழங்கல்களாவன,
- MCC Interim Linux - இது மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ftp வழங்கிகளில் பெப்ரcஅரி 1992 இல் கிடைப்பிலிருத்தப்பட்டது.
- TAMU - Texas A&M பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த தனி நபர்களால் ஏறத்தாழ இதே காலப்பகுதியில் (1992) உருவாக்கப்பட்டது.
- SLS (Softlanding Linux System).
இதில் எந்த வழங்கலும் ஒழுங்காக பராமரிக்கப்படாதுபோகவே, Patrick Volkerding என்பவர் SLS இனை அடிப்படையாகக்கொண்டு Slackware என்ற பெயருடைய லினக்ஸ் வழங்கலை உருவாக்கியளித்தார். இதுவே இன்றுவரை பராமரிக்கப்பட்டுவரும் மூத்தல் லினக்ஸ் வழங்கலாகும்.
வழங்கல்களின் பட்டியல்
இப்பட்டியலானது லினக்ஸ் வழங்கல்களை கிளைவழங்கல்கள், அடிப்படை வழங்கல்கள் எனும் அடிப்படையில் காண்பிக்கிறது.
அடிப்படை வழங்கல்கள் ஆரம்பத்தில் உருவானவை என்பதோடு, தமக்கென தனியான பொதி முகாமைத்துவக்கட்டமைப்பை கொண்டுள்ளன. தம்மளவில் தனித்துவமானவை. அவற்றினை அடிப்படையாக கொண்டு, தனிப்பயனாக்கப்பட்ட கிளை வழங்கல்கள் உருவாகின்றன.
- AMSEL
- Arch Linux
- Core Linux
- Crux
- Debian
- Xandros
- பாஸ் லினக்ஸ்
- DamnSmallLinux
- Floppix
- நொப்பிக்ஸ் (Knoppix)
- பெடோரா கோர்
- BioKnoppix
- ClusterKnoppix
- Feather
- Gnoppix
- Kanotix
- KnopILS
- Kurumin
- MEPIS
- Morphix
- PHLAK
- Libranet
- Linspire, formerly LindowsOS
- Skole Linux
- உபுண்டு (Ubuntu)
- Kubuntu
- BeatrIX
- Underground Desktop
- Devil-Linux
- Dyne:Bolic
- Gentoo
- SystemRescue
- Vida Linux
- Goppex
- Pardus
- GoboLinux
- IPCop
- IpodLinux
- Linux From Scratch
- LNX-BBC
- Lunar Linux
- Lycoris
- Mandows
- muLinux
- Red Hat
- Ark linux
- Aurox
- BLAG
- cAos
- Conectiva
- Fedora
- ASPLinux
- tinysofa
- Lorma
- Mandrake
- PCLinuxOS
- ALTLinux
- Turkix
- Redhat Enterprise Linux (RHEL)
- CentOS
- Whitebox_Linux
- SOT Linux
- Thiz
- Trustix Secure Linux
- TurboLinux
- Whitebox Linux
- Yellow Dog Linux
- ROCK Linux
- Rubyx
- Slackware
- Zenwalk Linux formerly MiniSlack
- Amigo Linux
- BasicLinux
- CollegeLinux
- DeLi Linux
- DragonLinux—currently inactive
- Peanut
- Slax
- Ultima Linux
- VectorLinux
- Buffalo
- SmoothWall
- SOL (Server Optimized Linux)
- Source Mage
- SPB-Linux
- SuSE
- Sun JDS
- Yoper