ரோலாண்ட் காப்பியம்
Appearance
ரோலண்ட்டின் காப்பியம் (பிரெஞ்சு: La Chanson de Roland) என்பது இன்று கிடைக்கும் முதல் பிரெஞ்சு இலக்கியப் படைப்பு ஆகும்.[1] 4000 பாடல்களுடன் பழைய பிரெஞ்சில் இது எழுதப்பட்டுள்ளது. இந்தப் படைப்பு 11-12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.
இந்தக் காப்பியம் சார்லமங் (Charlemagne) ஆட்சியின் போது ரோன்சுவாக்கசு போரில் (Battle of Roncevaux) நடந்த நிகழ்வுகளின் திரிவுபெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டது.
இந்த இலக்கியத்தின் கதாநாயகன் வீரமாகப் போராடி சதியால் வெளியாரால் கொல்லப்படுகிறான் என்பது பிரெஞ்சு தேசியவாதிகளாலும், படைத்துறைவாதிகளாலும் முன்னிறுத்தப்படும் கூறு ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Denis Hollier. (1994). A New History of French Literature. Harvard University Press.