உள்ளடக்கத்துக்குச் செல்

ரேச்சல் நிக்கோல்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேச்சல் நிக்கோல்சு
2012 பான் எக்ஸ்போ கனடா நிகழ்வில்
பிறப்புரேச்சல் எமிலி நிக்கோல்சு
8 சனவரி 1980 (1980-01-08) (அகவ�� 44)
அகஸ்தா, மேய்ன், அமெரிக்கா
மற்ற பெயர்கள்ரேச்சல் கெர்சா
படித்த கல்வி நிறுவனங்கள்கொலம்பியா பல்கலைக்கழகம்
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2000–இன்று
வாழ்க்கைத்
துணை
ஸ்காட் ஸ்டூபர் (தி. 2008⁠–⁠2009)

மைக்கல் கேர்சோ (தி. 2014)

ரேச்சல் எமிலி நிக்கோல்ஸ் (Rachel Emily Nichols, பிறப்பு: சனவரி 8, 1980) என்பவர் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சார்ந்த நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வடிவழகி பிரிவில் படித்துக்கொண்டிருந்த 1990 ஆம் ஆண்டின் இறுதியில் சில விளம்பரங்களில் வடிவழகியாக நடிக்க ஆரம்பித்தார். பின் 2000 ஆம் ஆண்டுத் துவக்கத்தில் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார். 2000 இல் வெளிவந்த ஆடம் இன் நியூயார்க் எனும் காதற்திரைப்படத்தில் துணைக்கதாப்பாத்திரத்தில் நடித்தார். நான்கு பருவங்களாக வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் நான்காவது பருவத்தில் நடித்தார். 2002 ஆம் ஆண்டில் செக்ஸ் அண்ட் தெ சிட்டி எனும் திரைப்படத்தில் நடித்தார். 2017-2018 இல் தெ லைப்ரேரியன்ஸ் எனும் தொலைக்காட்சி நாடகத் தொடரில் மீள் நிகழ் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

2003 ஆம் ஆண்டில் வெளியான டம்ப் அண்ட் டம்பரர்: வென் ஹேரி மெட் லாய்ட் எனும் நகைச்சுவைத் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார். 2005 ஆம் ஆண்டில் தெ இன்சைட் எனும் குற்ற தொலைக்காட்சி நாடகத் தொடரில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். ஒரு பருவத்திற்குப் பிறகு இந்தத் தொடர் நிறுத்தப்பட்டது. பின் 2005-2006 இல் ரசேல் கிப்சனாக நடித்த அலையஸ் நாடகத் தொடரில் இவரின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின் 2005 இல் திகில் திரைப்படமான தெ எமிட்டி வில்லே ஹாரரில் நடித்தார்.

இவர் பி 2 எனும் திரைப்படத்தில் நடித்தார். தெ சிஸ்டர்ஹூட் ஆஃப் தெ டிராவலிங் பேண்ட்ஸ் 2 எனும் 2008 இல் வெளிவந்த திரைப்படத்தில் துணைக்கதாப்பாத்திரத்தில் நடித்தார். மேலும் 2009 இல் ஸ்டார் டிரெக், மற்றும் ஜி. ஐ. ஜோ. தெ ரிச் ஆஃப் கோப்ரா திரைப்படத்தில் நடித்தார். 2010-2011 இல் கிரிமினல் மைன்ட்ஸ் , 2012- 2015 இல் கண்டிநியூயம் ஆகிய தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்

ஆரம்பகால வாழ்க்கை, வடிவழகி

[தொகு]

ரச்சேல் நிக்கோலஸ் ஜனவரி 8, 1980 இல் அகஸ்தா மேய்னில் [1] பிறந்தார். இவரின் தந்தை ஜிம் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் ஆவார்.[2] இவரின் தாய் அலிசன் நிக்கோல்ஸ். இவர் கொனி உயர் நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். அங்கு இவர் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்குபெற்றார்.[3] தனது பள்ளிப்பருவத்தில் தன்னை மெல்லக் கற்போர் எனத் தன் தாய் தெரிவித்ததாகக் கூறினார்.[4]

தனது பள்ளிப் படிப்பை முடித்த பிறகு 1998 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். வால் ஸ்ட்ரீட்டில் பகுப்பாய்வாளராக வரவேண்டும் என விரும்பினார். இவரின் மதிய உணவின்போது இவரைப் பார்த்த வடிவழகி முகவர் இவரை பாரிஸ் நகரத்தில் பணிபுரிய அழைப்பு விடுத்தார். தான் விளம்பரங்களில் நடித்ததன் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து தனது பயிற்றுக் கட்டணத்தை செலுத்தி வந்தார்.[5] இவர் கெஸ், லா ஓரியல் ஆகிய நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தார்.[6]எம் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.[5] இவர் பொருளியல், உளவியல் பிரிவில் பட்டம் பெற்றார்.[7] மேலும் 2003 ஆம் ஆண்டில் கொலம்பியாவில் நாடகப் பிரிவில் கணிதம் மற்றும் பொருளியல் பிரிவுடன் சேர்த்து பட்டம் பெற்றார்.[3][8][9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rachel Nichols". TV Guide. பார்க்கப்பட்ட நாள் June 17, 2016.
  2. Maher, Kevin (April 24, 2008). "The dress code in Rachel Nichols's new film P2 is ... bloody formal". The Times (London). http://entertainment.timesonline.co.uk/tol/arts_and_entertainment/film/article3801897.ece. பார்த்த நாள்: July 28, 2010. 
  3. 3.0 3.1 Adams, Betty (September 1, 2008). "Newlywed Rachel Nichols' career on the fast track". Morning Sentinel இம் மூலத்தில் இருந்து August 7, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110807162524/http://www.onlinesentinel.com/archive/rising-starnewlywed-rachel-nichols_-career-on-the-fast-track.html. பார்த்த நாள்: July 28, 2010. 
  4. Kuhn, Sarah (June 9, 2003). "An Interview with Rachel Nichols". IGN. Archived from the original on டிசம்பர் 4, 2010. பார்க்கப்பட்ட நாள் April 30, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. 5.0 5.1 "Celeb of the Day: Rachel Nichols". IGN. June 9, 2003. Archived from the original on January 28, 2007. பார்க்கப்பட்ட நாள் July 28, 2010.
  6. Saney, Daniel (July 29, 2005). "Rachel Nichols heads for 'Alias'". Digital Spy. பார்க்கப்பட்ட நாள் July 28, 2010.
  7. McGarrigle, Dale (June 11, 2005). "'Inside' Job Model – Actress Nichols goes from modeling in Augusta to starring in a new Fox crime drama". Bangor Daily News: 1. 
  8. Seipp, Catherine (June 9, 2005). "Summer Tube". National Review Online. Archived from the original on August 11, 2011. பார்க்கப்பட்ட நாள் July 28, 2010.
  9. Campbell, Christopher (December 19, 2007). "'G.I. Joe' Casts Scarlett and Storm Shadow?". Cinematical. Archived from the original on ஜனவரி 2, 2013. பார்க்கப்பட்ட நாள் July 28, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேச்சல்_நிக்கோல்ஸ்&oldid=3588057" இலிருந்து மீள்விக்கப்பட்டது